வியாழன், 13 ஏப்ரல், 2017

மணிமேகலை அணு அறிவியல் சங்ககால இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

3/9/15
பெறுநர்: எனக்கு
வெ.பார்கவன் தமிழன்
பக்குடுக்கையாரின் அணுவியம் புகட்டும் மற்றொரு பாடம்.
"உலாவுந் தாழு முயர்வதுஞ் செய்யும் குலாமலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்துதந் தன்மைய வாகும் மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற்
பமுமாம் வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும் தேயா மதிபோற் செழுநில
வரைப்பாம்".
-மணிமேகலை
அணுக்கள்,இடம்விட்டு இடம் பெயரத்தக்கன . கண்ணுக்கு எட்டாவண்ணம் மிகவும்
நுண்ணளவிலானவை. தனிநிலையில் தாழ்வதும் உயர்வதுமாகிக் கட்டற்றனவாகத்
திரிவதும்கூட அவற்றின் இயல்பு. நெருங்கி செறியும் போது அவ்வணுக்கள்
மலைகள் ஆகும் . பருமை நிலைகெட்டுக் கட்டவிழ்ந்து மீண்டும் நுண்மை
நிலையதாகி, முதலிலிருந்த நிலைக்குத் திரும்பவும் செய்யும் . இவ்வாறு
பருமைச் செறிவடைகையில் , அவை அடர்த்தி கூடி நிறைமிகுந்து வயிரம் போன்ற
திண்மையையும் பெறவியலும் . திண்மை குறைந்த மூங்கிலாகவும் வடிவெடுக்க
இயலும் . வயலாகவும் மண்ணாகவும் திரளவும் கூடும்.
22 ஆகஸ்ட் 2014 ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக