வெள்ளி, 21 ஏப்ரல், 2017

சேவூர் போர் முதலாம் இரண்டாம் சிங்களவர் பாண்டியர் கூட்டணி சோழர் வெற்றி கொங்கு

முதலாம் சேவூர் போர் - கி.பி.953

Post by group.siva on Tue Sep 18, 2012 9:48 pm
முதலாம் சேவூர் போர் - கி.பி.953

மதுரையை தலைநகராக கொண்டு ஆண்டு வந்த பாண்டியர்களுக்கு தங்கள் பாண்டிய அரசுக்கு ஒரு இரண்டாம் தலைநகரம் வேண்டும் என்ற அவா எழுந்தது. அத்துடன் இரண்டாம் தலைநகர் இருக்கும் இடம் மிகவும் வளம் மிக்க பகுதியாக இருக்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டனர். பாண்டியர்களின் எண்ணங்கள் முழுவதும் கொங்கு நாட்டின் மேல் இருந்த காரணத்தினால், அவர்களின் இரண்டாம் தலைநகரம் கொங்கு நாட்டில் இருக்க வேண்டும் என்று தீர்மானம் செய்தனர். இதன் காரணமாக மூன்றாம் ராஜா சிம்ம பாண்டியனின் மகன் வீர பாண்டியன் கி.பி 953-ல் சோழர்யுடன் சேவூரில் போர் தொடுத்தான், இதுவே முதலாம் சேவூர் போர் ஆகும். இப்போரில் வெற்றி பெற்ற பாண்டியன் " தான் ஒரு சோழனை கொன்றதாகவும், அச்சோழனின் தலையை போர்களத்தில் கால் பந்தாக வைத்து உருட்டி விளையாடியதாகவும்" பெருமை கொண்டான். "சோழன் தலைக் கொண்ட வீர பாண்டியன்" என்ற விருது பெயரும் சூட்டி கொண்டான் என்றும் திருநெல்வேலி கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கே சோழன் பெயர் விவரம் இல்லாமல் கூறியதால் அது ஒரு சோழ அரசனாக இருக்க முடியாது என்றும், அவன் கொங்கு சோழர்களில் ஒருவனாக இருந்திருக்க வேண்டும் என்று வரலாற்று அசிரியர்கள் கருதுகின்றனர். வீர பாண்டியன் சேவூரின் முந்தைய பெயரான செம்பியன் கிழானடி நல்லூர் ஒரு சோழ அரசி பெயரால் இருந்தா காரணத்தினால் இந்த ஊரின் பெயரை சேவூர் என்று மாற்றினான். அத்துடன் தன் தலைநகரான மதுரையில் இருக்கும் அழகர் பெருமாளை தனது இரண்டாம் தலைநகர் என்று எண்ணிய சேவூரிலும் எழுந்தருள செய்து திருகொவிலையும் கட்டி முடித்தான். அழகர் பெருமாள் கோவில் சேவூர் காவல் நிலையம் அருகில் உள்ளது. இது திப்பு சுல்தான் படையெடுப்புக்கு பிறகு கல்யாண வெங்கட்ராமன் பெருமாள் என்றே இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது.

இரண்டாம் சேவூர் போர் - கி.பி. 962

இதுவே முதன் முதலாக இலங்கை சிங்களருக்கு எதிரான போருக்கு வித்திட்டதாகும். "சோழன் முடித்தலை கொண்டவன்" என்று பெருமையடித்துக்கொண்ட வீரபாண்டியனை விழ்த்தி பாண்டிய நாட்டை கைப்பற்ற சுந்தர சோழன் பேரவாக் கொண்டான். முன் பாண்டியன் வெற்றி கண்ட அதே களத்திலேயே சோழன் போரிட்டதால் இதனை நாம் இரண்டாம் சேவூர் போர் என்கிறோம். இது சுந்தர சோழனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் கி.பி.962 நடைபெற்றதாகவும். இப்போர் சோழர்களை இலங்கைப்படை எழுச்சிக்கு துண்டிற்று. அதாவது இலங்கை சிங்கள அரசன் நான்காம் மயிந்தன்(மகேந்திர) சேவூர் போரில் பாண்டியனுக்கு உதவியாக ஒரு பெரிய சிங்கள படையை அனுப்பியிருந்தான், இதன் காரணமாக சிங்களருக்கு எதிராக சோழர்கள் இலங்கை மீது தொடுத்த போரே முதலாம் இலங்கை போராகும். இரண்டாம் சேவூர் போரில் பாண்டியன் தோல்வி அடைந்து சோழர் பெரும் வெற்றி பெற்றனர், பாண்டிய நாடும் சோழர்களின் கைபட்டது. இதன் பின் கி.பி -966 நடத்த போரில் வீர பாண்டியன் கொள்ளப்பட்டன், முன் அவன் சோழர் தலையை வெட்டியதாக விருது கூறியது போல இப்பொது அவன் தலையை வெட்டி சோழர் விருது பட்டம் பூண்டனர். " வீரபாண்டியன் முடித்தலை கொண்ட கொப்பர கேசரிவர்மன்" என்று பட்டம் பூண்டனார். சோழர்கள் வெற்றி பெறாமல் இருந்துருந்தால் சிங்களர்கள் தமிழகத்திலும் குடியேறி உரிமை கொண்டாடியிருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக