ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

திருப்புறம்பியப் போர் பாண்டியர் பல்லவர் 200 ஆண்டுகளுக்குள் 27 முறை போர் சோழர் எழுச்சி

திருப்புறம்பியப் போர்

Post by கார்த்திக் செயராம் on Sat Nov 07, 2015 10:52 am
திருப்புறம்பியப் போர் தமிழ்நாட்டின் வரலாற்றில் மிக முக்கியமான திருப்பத்தை தந்த போர். களப்பிரர் ஆட்சி தமிழகத்தில் முடிந்த பிறகு எழுந்த இரண்டு பேரரசுகளான பாண்டியர்களும் பல்லவர்களும் தங்களுக்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குள் 27 முறை போர் புரிந்தனர் என்பது வரலாறு. இந்த மேலாதிக்கப் போர்களினால் இரண்டு அரசுகளும் பலவீனமடைந்தன. திருப்புறம்பியப் போர் இதற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தது போல் அமைந்து, இரண்டு அரசுகளையும் உருக்குலைத்தது. இப்போர் நடந்த சில வருடங்களுக்குள் ஆதித்த சோழன் பல்லவன் நண்பனான அபராஜித வர்மனின் மேல் போர் தொடுத்து அவனைக் கொன்று பல்லவ நாட்டை சோழ நாட்டோடு இணைத்துக் கொண்டான். அத்தோடு பல்லவ சாம்ராஜ்ஜியம் ஒரு முடிவுக்கு வந்தது. தமிழ் வரலாற்றில் பிற்கால சோழர் ஆதிக்கம் தொடங்கியது.

கடந்த சில நாட்களாக பார்த்துக்கொண்டிருந்த பல்லவ பாண்டியப் போர்களில் க்ளைமாக்ஸ் போர்தான் திருப்புறம்பியத்தில் நடந்தது. இடவைப் போருக்குப் பின், பல்லவ நாட்டில் நிருபதுங்க வர்மனுடைய ஆட்சி முடிந்து அவன் மகன் அபராஜித வர்மன் பட்டம் ஏற்றான். நாம் ஏற்கனவே பார்த்த pattern க்கு ஏற்ப இப்போது அவன் பாண்டிய வரகுணனை எதிர்த்துப் படை திரட்டி ஒரு மெகா கூட்டணி அமைத்தான். கங்க நாட்டு மன்னன் ப்ருதிவீபதியுடனும் ஆதித்த சோழனுடனும் சேர்ந்துகொண்டு சோழநாட்டில் மண்ணியாற்றங்கரயில் உள்ள திருப்புறம்பியம் என்னும் ஊரில் பாண்டியப் படைகளை எதிர்கொண்டான். இந்த ஊர் கும்பகோணத்திற்கு வடக்கே கொள்ளிடத்துக்கும் மண்ணியாற்றுக்கும் இடையில் உள்ளது.

மிகக்கடுமையாக நடந்த இந்தப் போரில் இருதரப்புக்கும் சேதம் அதிகம். கங்க மன்னன் ப்ருதிவீபதி இப்போரில் உயிர்துறக்க நேரிட்டது. பல்லவப் படைகள் இறுதி வெற்றி அடைந்தாலும் பல்லவர் படைபலம் இந்தப்போரால் மிகப் பலவீனம் அடைந்தது. தோல்வியடைந்த பாண்டியர்கள் மதுரை நோக்கி பின்வாங்கினர். ஆக இந்தப் போரால் பலமும் பலனும் அடைந்தது சோழ நாடுதான்.

இவூர் எங்கள் கிராமத்திர்க்கு மிக அருகில் உள்ளதால் எனக்கு மிக பெருமையாக உள்ளது ...சோழனின் வரலாற்று மிக்க ஊராச்சே ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக