திங்கள், 24 ஏப்ரல், 2017

ஈழத்தில் வன்னியர் சுருக்கமான முன்னுரை வன்னியர் எனும் நூல் 1970 இலங்கை எழுத்தாளர் மின்னூல் புத்தகம் வன்னிமை ஈழம்

aathi tamil aathi1956@gmail.com

5/8/15
பெறுநர்: எனக்கு
முன்னுரை
தென்னகத்திலும் ஈழத்திலுமிருந்த இராணுவ அமைப்புக்களில் வன்னியர்
சிறப்பிடம் பெற்றிருந்தனர். கல்லாடஞ் சொல்வதுபோல நாற்படையிலும் வன்னியர்
சேவை புரிந்து வந்தபோதும் படைகளிலிருந்த வன்னியருட் பலர் வில்லாளிகளாகவே
இருந்தனர்.
வன்னியப் படைகளின் தலைவராயிருந்த, வன்னியநாயன் என்ற சிறப்புப் பெயரினைப்
பெற்ற பிரதானிகள் சோழப் பேரரசிற் சமாந்தரராகி, அப்பேரரசு தளர்வுற்ற
காலத்திலே குறுநிலமன்னராக எழுச்சிபெற்றனர். பன்னிரண்டாம் நு}ற்றாண்டிலே
தோன்றிய தென்னக வன்னிமைகள் பதினாறாம் நு}ற்றாண்டுவரை நிலைபெற்று வந்தன.
விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயரின் ஆட்சியிலே தொண்டை மண்டலத்திலுள்ள
வன்னிமைகள் அழிந்தொழிந்தன.
பொலநறுவைக் காலத்திலும் (993-1215) அதன் பின்பும் தென்னகத்திலிருந்து
வன்னியர் ஈழநாட்டிற்கு வந்தனர். ஈழத்தில் வன்னியர்வசமிருந்த
படைப்பற்றுக்கள் பல வன்னிமைகள் தோன்றுவதற்கு ஏதுவாயிருந்தன. பொலநறுவை
அரசு அழிவுற்றதும் வன்னியநாடுகள் என வழங்கிய பல குறுநில அரசுகள்
எழுச்சிபெற்றுப் பல நு}ற்றாண்டுகளாக ஈழ வரலாற்றிலே சிறப்பிடம்
பெற்றிருந்தன. இவை வடஇலங்கையிலும் மேற்கிலே சிலாபம், புத்தளம் முதலிய
இடங்களிலும் கிழக்கிலே திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களிலும
வளர்ச்சியடைந்திருந்தன.
இச்சிறு நு}ல் வன்னியரது வரலாற்றையும் வன்னிநாடுகளின் வரலாற்றையும் மிகச்
சுருக்கமாகக் கூறுகின்றது. வன்னியரின் தோற்றம், வன்னிநாடுகளின் வரலாறு
என்பவற்றிலுள்ள பிரதான கட்டங்களே நு}லில் விளக்கப்பட்டுள்ளன. இந்நு}லின்
இரண்டாம் பதிப்பில் வன்னியநாடுகளின் வரலாறு, சமூக அமைப்பு, சமூக வழமைகள்
எனபன விரிவான முறையிலே இடம்பெறும்.
இந்நு}லை எழுதுமாறு ஊக்குவித்து, எழுதிய பின் பல நாட்களாகப் பிரதிகளைப்
பார்த்துப் பிழைகளை நீக்கி நு}ல் சிறப்பாக அமைய வழிகாட்டிப் பின்
அணிந்துரை அளித்து நு}லை வெளியிடுவதற்கான ஏற்பாடுகளுஞ் செய்து
பேராதரவளித்த தமிழ்த்துறைத் தலைவர் கலாநிதி. சு. வித்தியானந்தன்
அவர்களுக்கு என் நன்றிகள் பல.
கயிலாய வன்னியனார் தர்மசாதனப் பட்டயத்தில் வரும் கிரந்த எழுத்துக்களை
இலகுவில் வாசிப்பதற்கும் அதில்வரும் வடமொழிப் பகுதிகளைப் புரிந்து
கொள்வதற்கும் உதவி புரிந்த யாழ்ப்பாணக் கல்லு}ரி விரிவுரையாளர்
வித்துவான் இ. பாலசுப்பிரமணியம் (சிறப்புக் கலைமாணி, இலங்கை)
அவர்களுக்கும், யாழ்ப்பாணக் கல்லு}ரி விரிவுரையாளர் திரு. வி. சிவசாமி
அவர்களுக்கும், அராலி சரஸ்வதி மகாவித்தியாலயத்தின் முன்னைநாள் அதிபர்
பண்டிதர் மு. சதாசிவம் அவர்களுக்கும், இந்நு}லைச் செவ்வனே அச்சேற்றிய
சைவப்பிரகாச அச்சகத்தாருக்கும் நு}லாசிரியரின் நன்றிகள் பல.
சி. பத்மநாதன்
5-11-70
வரலாற்றுத்துறை,
இலங்கைப்பல்கலைக்கழகம்,
பேராதனை.
++++++++++++++++++++++++++++
அணிந்துரை
கலாநிதி. சு. வித்தியானந்தன்
இலங்கைப் பல்கலைக்கழகத்
தமிழ்த்துறைத் தலைவர்.
தமிழ்பேசும் மக்கள் இன்று ஈழத்தின் பல பாகங்களிலும் வாழ்கின்றனர்.
இவர்கள் ஈழத்தின் தொல்குடி மக்களாக இருந்தபோதும் இவர்களது வரலாறு இதுவரை
ஒழுங்கான முறையில் எழுதப்படவி;ல்லை. தமிழர் அரசர்களாகவும் குறுநில
மன்னராகவும் ஈழத்தில் ஆட்சிசெய்து வந்திருக்கின்றனர். இங்கு ஆண்ட
குறுநிலமன்னரில் வன்னியர் குறிப்பிடத்தக்கவர்.
இவ்வன்னியர்பற்றிச் சில நு}ல்களும் கட்டுரைகளும் வெளிவந்தபோதும் இதுவரை
எவராவது ஈழத்தின் பல பாகங்களிலுமிருந்த வன்னிமைகள்பற்றி ஆராய்ச்சிநு}ல்
ஒன்றும் எழுதவில்லை. அடங்காப்பற்று வன்னியர்மட்டும் வன்னியர் அல்லர்.
திருகோணமலை, மட்டக்களப்பு, புத்தளம் போன்ற வேறு பிரதேசங்களிலும் வன்னியர்
ஆட்சி இருந்து வந்திருக்கின்றது.
மேலும், வன்னியர் தமிழகத்திலிருந்தே ஈழத்திற்கு வந்தனர். தமிழக
வரலாற்றினை எழுதிய ஆசிரியர்கள் கூட அங்கிருந்த வன்னியர் பற்றி
ஆராயவில்லை. அவர்கள் அங்கு படைத்தலைவராக இருந்து குறுநில மன்னராக
விளங்கிச் சுயாட்சியும் செய்து வந்திருக்கின்றனர். இந்த வரலாறு எந்தத்
தென்னிந்திய வரலாற்று நு}லிலும் இடம்பெறவில்லை.
இக்குறைகளை ஓரளவு நீக்கும் முன்னோடி நு}லாக வெளிவந்திருப்பதே ‘வன்னியர்’
எனப் பெயரிய இந்நு}ல். இதன் ஆசிரியர் கலாநிதி சி. பத்மநாதன் அவர்கள்
வன்னியரின் தோற்றத்தினையும் தமிழகத்திலும் ஈழத்திலுமுள்ள வன்னியரின்
வரலாற்றையும் மிகச் சுருக்கமாக இதிலே ஆராய்ந்திருக்கின்றார். இதுவரை
வெளியிடப்படாத பல பட்டயங்களைத் தமது ஆராய்ச்சிக்குட்
பயன்படுத்தியுள்ளார். தமது கூற்றுக்களுக்குத் தக்க ஆதாரங்கள் தந்து
இச்சிறு நு}லை எழுதியுள்ளார்.
கலாநிதி பத்மநாதன் அவர்கள் சிறந்த தமிழ் அறிவுடைய வரலாற்று ஆசிரியர்.
ஈழத்துத் தமிழர் வரலாறு எழுதுவதற்கு மிகுந்த தகுதியுடையவர். யாழ்ப்பாண
அரசுபற்றி ஆராய்ச்சி நு}ல் எழுதி இலண்டன் பல்கலைக்கழகக் கலாநிதிப்பட்டம்
பெற்றவர். அவர் அக்கலாநிதிப் பட்டத்திற்கு எழுதிய “யாழ்ப்பாண அரசு” என்ற
நு}லில் இரண்டாவது இயலில் பொலநறுவை அரசின் வீழ்ச்சியும் வன்னித் தலைவரின்
எழுச்சியும்பற்றி எழுதியுள்ளார். அதனை அடிப்படையாக வைத்தே இந்நு}ல்
ஆக்கப்பட்டுள்ளது.
இந் நு}ல் இரு பகுதிகளாக அமைந்துள்ளது. இரண்டாம் பகுதி
நு}லாக்கத்திற்குதவிய பட்டயங்களையும் ஆவணங்களையும் கொண்டது. முதலாம்
பகுதி வன்னியர் வரலாற்றைக் கூறுவது.
தமிழகத்திலும் ஈழத்திலும் உள்ள வன்னியர் வரலாறு நான்கு இயல்களில்
அமைந்துள்ளது. இவர்களின் தோற்றம் பற்றி இலக்கியம் கொண்டும், தென்னிந்திய
வரலாறுகொண்டும் ஆராய்வதே முதலாம் இயல். கல்லாடம். சிலை எழுபது, வன்னியர்
புராணம், வன்னியர் குல நாடகம், வன்னியர் குலக் கலியாணக்கொத்து என்னும்
நு}ல்கள் வன்னியர் தோற்றம் பற்றிக் கூறுகின்றன. பன்னிரண்டு
பன்றிகளிலிருந்து வன்னியர் தோன்றினரெனக் கல்லாடம் கூற, ஏனைய நு}ல்கள்
வன்னியரை அக்கினி குலச் சத்திரியர் என்றும் யாக அக்கினியிலிருந்து
தோன்றினரென்றும் கூறுகின்றன.
விசய நகரப் பேரரசின் வீழ்ச்சியின் பின், ஒவ்வொரு சமுகத்தினரும் தத்தம்
சமுகத் தொன்மையும் சிறப்பையும் நிலை நாட்ட இதிகாச புராணக் கதைகளைக்
கொண்டு நு}ல்கள் இயற்றினார்கள் என்றும், வன்னியர் தம் பழைய வரலாற்றை
நிலைநாட்ட இயற்றிய அத்தகைய நு}ல்களே மேலே கூறப்பட்ட நு}ல்கள் என்றும்
கலாநிதி பத்மநாதன் கருதுகின்றார். எனினும் அவற்றை ஓரளவு ஆதாரமாகக் கொண்டு
வன்னியரின் தோற்றத்தை விளக்கலாமென ஆசிரியர் கொள்கிறார்.
படைக்கலப் பயிற்சியைச் சிறப்புத் தொழிலாக உடைய மக்கட் கூட்டமாகவும்
குறுநில மன்னராகவும் இருந்தமையாலேயே அவர்களை இந்நு}ல்கள் சத்திரியரெனக்
கூறின. காடவர் எனக் கருதப்படும் வன்ய என்ற வடசொல்லிலிருந்தே வன்னியர்
என்ற சொல் தோன்றியிருக்கவேண்டுமென்றும், ஆதிகாலத்தில் வன்னியர் காடுகள்
நிறைந்த முல்லைநிலத்தில் வாழ்ந்தார்கள் என்றும் ஆசிரியர் கொள்கின்றார்.
தமிழகத்து வன்னியர் பற்றித் ‘தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்’ என்ற
பிரிவில் ஆசிரியர் கூறுகின்றார். இவர்களின் ஆதி இருப்பிடம் தொண்டை
மண்டலம் என்பது அவர் கொள்கை. இதற்கு ஆதாரமாக வன்னியர் வரலாற்றைக்கூறும்
நாடோடிக் கதைகளையும் கல்வெட்டுக்களையும் காட்டுகின்றார். காஞ்சியிலிந்து
ஆண்ட பல்லவரின் படைகளிற் காடவராகிய வன்னியர் தொழிலாற்றி இருக்கலாமென
ஆசிரியர் ஊகிக்கின்றார். சோழப் பெருமன்னர் காலத்திலேயே இவர்களைப்பற்றிய
வரிவான சான்றுகள் கிடைத்துள்ளன.
வன்னியர் பற்றியும் வன்னியப் பற்றுக்கள் பற்றியும் பல குறிப்புக்கள்
சோழப் பெரு மன்னரின் ஆவணங்களிற் காணப்படுகின்றன. இராணுவ சேவையிலிந்த
வன்னியப் படைகளுக்குச் சீவிதமாக விடப்பட்ட நிலங்களே வன்னியப்பற்று என
ஆசிரியர் கூறுகின்றார். வேளைக்காரப் படைகளின் தலைவர்களே வன்னிய நாயன்
என்ற பட்டத்தைப் பெற்றனர் என்பதற்குச் சோழப் பெருமன்னர் காலத்துக்
கிழியூ10ர் மலையமான்களின் கல்வெட்டுக்களை ஆசிரியர் ஆதாரமாகத்
தருகின்றார்.
சோழப்பெருமன்னர் காலத்திற் படைத்தொழிலிற் சிறப்புற்று விளங்கியதுபோல
விசயநகரமன்னர் காலத்திற் சிறப்புடன் விளங்க வன்னியரால் முடியவில்லை.
காரணம், விசய நகர மன்னர் கன்னட தெலுங்குப் படைகளையே கூடுதலாகப்
பயன்படுத்தினர். எனவே, சூழலுக்கு ஏற்ப வன்னியர் விவசாயத்தில் ஈடுபடத்
தொடங்கினர்.
‘தென்னகத்து வன்னிமைகள்’ எனப் பெயரிய இரண்டாம் இயல், தமிழகத்திலிருந்த
வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது. முதலாம் இராசேந்திரன் இரண்டாம்
இராசேந்திரன் ஆகியோர் கல்வெட்டுக்களிலிருந்து வன்னியர்கள் பிரதானிகளாக
இருந்தனரென அறியலாம். இரண்டாம் இராசராசன் மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர்
கல்வெட்டுக்களில் வன்னியர் பற்றிய குறிப்புக்கள் பல காணப்படுகின்றன.
இவர்கள் வேளைக்காரரின் படைத்தலைவராக இருந்தனரென்றும், பெரிய உடையான்,
சேதியராயன், சற்றுக்குடாதான் போன்ற விருதுகளைப் பெற்றிருந்தனரென்றும்
கல்வெட்டுக்களால் அறியலாம். இவர்கள் குறுநிலமன்னராகி, முதலாம்
குலோத்துங்கன் காலத்துக்குப்பின் பெருமளவு ஆதிக்கம்பெற்று விளங்கினர்.
சோழப்பெருமன்னர் காலத்திலே, கிழியூர் மலையமன்னர், பங்கலநாட்டுக் கங்கர்,
சாம்புவராயர் ஆகிய மூன்று குலத்துக் குறுநிலமன்னர் வன்னிய நாயகன் என்ற
விருதுடன் ஆட்சி செலுத்தினரென இக்கல்வெட்டுக்களின் துணைகொண்டு ஆசிரியர்
நிறுவியுள்ளார்.
வன்னியர்களின் அதிகாரம் தலைமுறை தலைமுறையாக வளர்ந்துவந்தது. சோழப் பேரரசு
நலிவுபெற்ற காலத்தில், குறுநிலமன்னராகிய வன்னியர்கள் சுதந்திரமாக
ஆளத்தொடங்கினர். சோழராட்சிக்குப்பின் இரண்டாவது பாண்டியப்பேரரசு
நிலைபெற்ற காலத்தில் வன்னியர் பாண்டியராட்சிக்கு உட்பட்டிருந்தனர்.
பாண்டியப் பேரரசு தளர்வுற்ற காலத்தில், பாண்டியர்மேல் ஆதிக்கம் செலுத்திய
மூன்றாம் வல்லாள தேவனாகிய கொய்சளமன்னனின் ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்தனர்
வன்னியர். விசயநகரமன்னர் காலத்திலே அம்மன்னர்களோடு வன்னியர் போர்
நிகழ்த்தித் தோல்வியுற்றனரென ஆசிரியர் பல சான்றுகள் காட்டுகின்றார்.
கிருஷ்ணதேவராயர் காலத்தை யொட்டித் தமிழகத்து வன்னிமைகள் அரசியல்
ஆதிக்கத்திலிருந்து அழிந்தொழிந்தன.
ஈழத்து வன்னிமைகள் இரு பகுதிகளாக இரண்டு இயல்களில் அமைந்துள்ளன. தமிழ்,
சிங்கள அரசுகளில் வன்னிகள், வன்னி நாடுகளின் தோற்றம், திருமலை
வன்னிமைகள், முக்குவ வன்னிமைகள் என நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது
முதற்பகுதி. இப்பிரிவுகளில் முக்குவ வன்னிமை என்ற பிரிவு மட்டக்களப்பு
வன்னிமை, புத்தளத்து வன்னிமை என்ற இரு உட்பிரிவுகளாக அமைந்துள்ளது.
ஈழத்து வன்னிமைகள் முதலாம் பகுதிகளில், ‘தமிழ் சிங்கள அரசுகளில்
வன்னிகள்’ என்ற பிரிவில் ஈழநாட்டு வரலாற்றில் பதின்மூன்றாம்
நு}ற்றாண்டில் வன்னி நாடுகள் சிறப்பிடம் பெற்றிருந்தமையை ஆசிரியர்
கூறுகிறார். பொலநறுவையைத் தலைநகராகக் கொண்டு ஈழம் முழுவதினையும் ஒரே
மன்னர் ஆண்ட வரலாறு பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஏற்பட்ட கலிங்கமாகனது
படையெடுப்போடு முற்றுப்பெறுகின்றது. அதன்பின் வடக்கிலே ஓர் அரசும்,
தெற்கிலே ஓர் அரசும் பல குறுநில அரசுகளும் தோன்றின. மாகனுக்குப் பின் வட
இலங்கையிற் பாண்டியர் ஆதிக்கம் இடம்பெற்றுப் பதின்மூன்று நு}ற்றாண்டின்
இறுதியில் ஆரியச்சக்கரவர்த்திகளின் ஆட்சி ஆரம்பமாகியது. அதன் விளைவாக
இடம்பெற்றதே யாழ்ப்பாணப் பட்டினம் என்ற தமிழரசு. இத்தமிழரசின் காலத்திலே
பல வன்னிநாடுகள் இருந்தன.
இதே காலத்தில், அதாவது மாகனது ஆட்சிக்குப் பின், பதின்மூன்றாம்
நு}ற்றாண்டிலிருந்து சிங்கள அரசர் முதலிலே தம்பதெனியாவிலிருந்தும்@ பின்
குருநாகல், கம்பளை கோட்டை முதலிய நகர்களிலிருந்தும் ஆட்சிசெய்தனர்.
அவ்வாட்சியிலும் வன்னி எனப்பட்ட குறுநில அரசுகள் வளர்ச்சியடைந்திருந்தன.
இவ்வாறு பதின்மூன்றாம் நு}ற்றாண்டில் ஈழத்தில் வன்னிமைகள் பல
காணப்பட்டபோதும், அந்நு}ற்றாண்டுக்கு முன்பே வன்னிமைகள் தோன்றியிருந்தன
என்பதனை ‘வன்னி நாடுகளின் தோற்றம்’ என்ற பிரிவு விளக்குகின்றது. ஈழத்து
வன்னிமைகளின் தோற்றத்தை வேளைக்காரப் படையின் வரலாற்றோடு ஆசிரியர் இணைத்து
நோக்குகின்றார். வேளைக்காரப் படைகள் ஈழத்தின் சில பகுதிகளிற் சுயாட்சி
நடத்தியமையை நாம் காணலாம். வேளைக்காரருக்குக் கொடுக்கப்பட்ட
படைப்பற்றுக்கள் வன்னிமைகள் உருப்பெறுவதற்குக் காலாக இருந்தன.
சோழராட்சிக் காலத்திலும் அதற்குப் பின்பும் வன்னிப் பற்றுக்கள் பல
தோன்றிப் பதின்மூன்றாம் நு}ற்றாண்டின் பிற் பகுதியில் வளர்ச்சி
யடைந்திருந்தன என ஆசிரியர் கூற்றுக்களால் அறியக் கிடக்கின்றது.
இவ்வாறு வளர்ச்சியுற்ற வன்னிமைகளில் ஒன்றனைப்பற்றித் ‘திருமலை
வன்னிமைகள்’ என்ற பிரிவு கூறுகின்றது. கவிராசர் பாடிய கோணேசர்
கல்வெட்டினையும், திருமலைக் கோட்டையின் முன்பாக இருக்கும் கற்று}ணிலுள்ள
மொழித் தொடர்களையும் அக்கோட்டையிலுள்ள வடமொழிக் கல்வெட்டினையும்
ஆதாரமாகக் கொண்டு குளக் கோட்டனாகிய சோழ கங்கன் காலத்திலே திருமலையில்
வன்னிமை இருந்தமையை ஆசிரியர் எடுத்துக்காட்டுகின்றார். கங்குவேலிக்
கல்வெட்டு, திருமலை வன்னியனாரைக் குறிப்பிடுகின்றது. வெருகல்
கல்வெட்டிலிருந்து கயிலை வன்னியனார் கோட்டியாரம்பத்தை ஆண்டமை
புலனாகின்றது. பதினான்காம் நு}ற்றாண்டில் யாழ்ப்பாணத்தை ஆண்ட
ஆரியச்சக்கரவர்த்திகள் திருகோணமலை வன்னியர் மேல் ஆதிக்கம்
செலுத்தியமையையும் பதினைந்தாம் பதினாறாம் நு}ற்றாண்டுகளில் இம் மன்னர்கள்
திருமலை வன்னியரோடு திருமணத் தொடர்பு கொண்டமையையும் ஆசிரியர்
ஆதாரங்களுடன் நிறுவியுள்ளார். யாழ்ப்பாணத்தரசரும் திருமலை வன்னியரும்
போத்துக்கேயரை எதிர்ப்பதில் ஒருவருக்கொருவர் துணையாயிருந்தனர். சங்கிலி
அரசனின் மரணத்துக்குப் பின் கண்டியரசரின் ஆதிக்கம் திருகோணமலை வன்னியிலே
இடம்பெறலாயிற்று.
முக்குவ வன்னிமைகளை, மட்டக்களப்பு வன்னிமை, புத்தளத்து வன்னிமை என இரு
பிரிவுகளாக ஆசிரியர் வகுத்துக் கூறுகிறார். பதின்மூன்றாம் நு}ற்றாண்டில்
கலிங்க மன்னன் மாகன், முக்குவரை மட்டக்களப்புக்கு அழைத்து வந்து
அவர்களின் படைத் தலைவருக்கு வன்னிபம் என்ற பட்டத்தை அளித்தானென
மட்டக்களப்பு மான்மியம் கூறுகின்றது. சீதவாக்கையிலிருந்து
மட்டக்களப்புக்குச் சென்று குடியேறிய இஸ்லாமிய குடும்பங்களின் வரலாற்றைக்
கூறும் ஓரேட்டுப் பிரிதி, மட்டக்களப்பில் அதிகாரம் செலுத்திய ஏழு
வன்னியர்பற்றிக் குறிப்பிடுகின்றது. தேசாதிபதி பான் கூன்ஸின்
அறிக்கையையும் ஆசிரியர் ஆதாரமாகக் காட்டுகின்றார்.
‘புத்தளத்து வன்னிமை’ என்னும் பிரிவு, ஒல்லாந்த ராட்சிக்காலம்வரை
புத்தளத்திலிருந்த முக்குவ வன்மைபற்றிக் கூறுகின்றது. ஆறாம்
பராக்கிரமபாகுவின் ஆட்சிக்காலந்தொட்டுப் புத்தளத்து வன்;னிமைபற்றிக்
கிடைத்துள்ள குறிப்புக்களை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். இவ்வரசன் (1413
- 1467) புத்தளத்து வன்னிமையைக் கைப்பற்றிய வரலாறு ‘முக்கர ஹடன’ என்ற
நு}லில் விவரிக்கப்படுகின்றது. பதினாறாம் நு}ற்றாண்டைச் சேர்ந்த இரு
செப்பேடுகளை ஆதாரமாகக் கொண்டு புத்தளத்தை ஆண்ட நவரத்தின
வன்னியன்பற்றியும், நீதிமன்றத்தில் அங்கம் வகுத்த வன்னியர்பற்றியும்
வன்னியர் பெற்றிருந்த சிறப்புரிமைகள் பற்றியும் விவரங்கள் தரப்பட்டுள்ளன.
நான்காவது இயலாக அமைந்துள்ள ஈழத்து வன்னிமை இரண்டாம் பகுதி, யாழ்ப்பாணப்
பட்டினம் என வழங்கிய தமிழரசில் அடங்கிய வன்னிமைகளைப்பற்றிக் கூறுகின்றது.
யாழ்ப்பாண அரசு உள்ளடக்கியிருந்த வன்னிநாடு மன்னாரிலிருந்து
திருகோணமலைவரை பரந்திருந்ததென்றும், அதன் எல்லை சிலாபம்வரை
இருந்ததென்றும் சான்றுகள் தரப்படுகின்றன. பனங்காமம், முள்ளியவளை,
கருநாவல்பந்து, கிழக்கு மூலை என்பன யாழ்ப்பாணத்து
வன்னிக்குடியேற்றங்களில் முக்கியமானவையென குவேறோஸ் கூறுகின்றார். இரு
வன்னிக் குடியேற்றங்களைப்பற்றி யாழ்ப்பாண வைபவமாலை கூறுகிறது. இரண்டாவது
வன்னிக் குடியேற்றம் பாண்டிநாட்டிலிருந்து வந்த 59 வன்னியரின் வருகையோடு
ஏற்பட்டது. யாழ்ப்பாண வைபவமாலை கூறும் இக்குடியேற்றம் பற்றியே வையாபாடல்
என்னுங் நு}லும் கூறுகின்றது.
வையாபாடல் வன்னியர் குடியேற்றம் பற்றிக் கூறுவதை மேற்கோளாகக்காட்டி
அமைந்ததே ‘அடங்காப்பற்றில் வன்னியர் குடியேற்றம்’ என்னும் பிரிவு.
வையாபாடல் கூறுவதை முற்றாக ஏற்காதுவிட்டாலும், வன்னியர் பலர்
தென்னகத்திலிருந்து வந்து வன்னிப் பிரதேசங்கள் பலவற்றைக் கைப்பற்றி
ஆண்டதை வரலாற்று நிகழ்ச்சியாக ஆசிரியர் கொள்கி;ன்றார். வையா பாடலில்
வரும் நிகழ்ச்சிகள் முதலாம் ஆரியச் சக்கரவர்த்தி காலத்தினை
யொட்டியவையெனக் கருதுகின்றார். இவ்வன்னியர் செயவீரசிங்கையாரியன், வரோதய
சிங்கையாரியன், மார்த்தாண்டசிங்கையாரியன், சங்கிலி போன்ற பலம்வாய்ந்த
யாழ்ப்பாண மன்னருக்குத் திறைகொடுத் ஆண்டனர். எனினும் வன்னியர்கள்
சுயாட்சி செலுத்தி, அதிகாரிகளை நியமித்து, இறைவரிகளையும் பெற்றிருந்தனர்.
இந்நு}லிற்குத் தனிச் சிறப்பும் மதிப்பும் அளிப்பது இதன் இரண்டாம் பகுதி,
நு}ல் ஆக்கத்திற்குதவிய பட்டயங்களும் ஆவணங்களும் இப் பகுதிகளில்
அடங்கியுள்ளன. முதலிரு பட்டயங்களையும் முதன் முதல் வெளியிடும் பெருமை
ஆசிரியருக்கே உரியது. அப் பட்டயங்கள், பரராசசேகர மகாராசாவின் பட்டயமும்,
கயிலாய வன்னியனார் மட தர்ம சாதனப் பட்டயமும் ஆகும். இவ்விரு
செப்பேடுகளும் படம் பிடித்துப் பிரதி செய்து அச்சில் வெளியிடப்பட்டுள்ளன.
அத்துடன் அவற்றை இக் கால முறையிற் குறியீடுகளுடன் பிழைகள் நீக்கிப்
பதிப்பித்திருக்கின்றார். அவற்றோடு இணைக்கப்பட்டுள்ள வரலாற்று ஆய்வு
விளக்கவுரைகள் மிகவும் பயனுள்ளன.
அவ்விரு செப்புப் பட்டயங்களில் பரராசசேகர மகாராசாவின் பட்டயம்
யாழ்ப்பாணத்தையாண்ட பரராசசேகர மகாராசா சிதம்பரதரிசனம் செய்து, நிலம்
வாங்கிப் பரராசசேகரன் மடத்தை அங்கு அமைத்து, நிவந்தங்களைக் கொடுத்து,
யாழ்ப்பாணத்திலுள்ள ஊர்களின் வருமானத்தையுங் கொடுத்து, மடதர்ம ஏற்பாடுகள்
செய்தமைபற்றிக் கூறுகின்றது. கயிலாய வன்னியனார் மடதர்மசாதனப் பட்டயம்
சிதம்பரத்திலுள்ள பரராசசேகரன் மடத்திற்கு யாழ்ப்பாண வன்னியர் சென்று,
தானம் கொடுத்தமைபற்றியது. பனங்காமம், கரிகட்டுமூலை மேல்பத்து,
தென்னமரவடி, முள்ளியவளை ஆகியவற்றின் வன்னியரின் பெயர்களை இப்பட்டயம்
தருகின்றது.
இரண்டாம் பகுதியில் வரும் நல்லமாப்பாண வன்னியனின் ஓலையும், வன்னியர்குல
மடதர்மசாதனப் பட்டயமும் முன் வெளியானவை, இவற்றுள் நல்லமாப்பாண வன்னியனின்
ஓலை முன்பு சுவாமி ஞானப்பிரகாசரால் வெளியிடப்பட்டது. இதில் ஆசிரியர் அதனை
அவர் வெளியிட்டவாறு தந்து, விரித்து, விளக்கவுரைகூறி, வரலாற்றுக்
குறிப்புக்களும் தருகின்றார். வன்னி;யர்குல மட தர்மசாதனப் பட்டயம் முன்பு
வன்னியர்புராணம் பதிப்பிக்கப்பட்டபோது அதனோடு இணைத்துப்
பதிப்பிக்கப்பட்டது. இந்நு}லிலுள்ள பதிப்பில் ஆசிரியர் விளக்கவுரைகூறி,
பட்டயத்தில் வரும் வரலாற்றைச் சிலை எழுபது, வன்னியர் புராணம் ஆகிய
நு}ல்களில் வரும் வரலாற்றோடு ஒப்புநோக்குகின்றார்.
இந்நு}ல் வன்னியர் பற்றிய சிறியநு}ல்@ ஆயினும் சிறந்த படைப்பு,
ஆசிரியரின் முதல்நு}ல்@ வரலாற்று நு}ல்கள் எவ்வாறு எழுதப்படவேண்டும்
என்பதற்கு முன்மாதிரி, ஈழத்துத் தமிழரின் வரலாற்றை அறிவதற்குரிய சிறந்த
வரலாற்று நு}ல்கள் இல்லையே என்ற குறையை இந்நு}ல் ஓரளவு நீக்குகின்றது@
அவரின் முயற்சிகள் பிறரையும் இத்துறையில் வழிகாட்டும் என்ற நம்பிக்கையைத்
தருகின்றது.
ஈழத்து எழுத்தாளர் இன்று ஒரு வழிப்புணர்ச்சி பெற்றிருக்கின்றனர். தமது
படைப்புக்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவும் வாசகரின் ஒத்துழைப்பும் பெருமளவு
கிடைக்கும் என்ற அவர்கள் நம்புகின்றனர். இத்தகைய சூழலிலே, முக்கியமான ஒரு
துறையிலே, தேவைக்கேற்ற நு}லைக் கலாநிதி பத்மநாதன் படைத்திருக்கின்றார்.
இந்நு}ல் விரித்து எழுதப்பட வேண்டியது. ஈழத்து வன்னியர்பற்றிய பெரிய
நு}லினையும், வேறுபல வரலாற்று நு}ல்களையும் அவர் எமக்கு ஆக்கித்தருவதற்கு
நன்மக்கள் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் ஊக்கத்தினையும் அன்னாருக்கு நிறைய
அளிப்பார்களென எதிர்பார்க்கின்றோம்.
இலங்கைப் பல்கலைக்கழகம், சு. வித்தியானந்தன்
பேராதனை, 1-11-1970
+++++++++++++++++++++++++
முதலாம் இயல்
வன்னியர் தோற்றம்
வன்னியர் எனப்படும் சமூகம் தமிழகத்தின் வடபிரிவிற் பரந்து காணப்படுகிறது.
சோழப் பேரரசரின் படையமைப்பில் வன்னியர் சிறப்பிடம் பெற்றிருந்தனர்.
முதலாம் ராஜராஜன் ஈழநாட்டைக் கைப்பற்றியதை அடுத்து வன்னியர் சோழப்
படைகளோடு ஈழத்திற்கு வந்தனர்.

http://vanniyarkula-kshathriyar.blogspot.in/2012/02/blog-post_19.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக