ஞாயிறு, 8 அக்டோபர், 2017

கிறித்தவம் உருவ வழிபாடு மறுப்பு வசனம் சான்று ஏசு இயேசு மதம்

முகநூல் கிறிஸ்தவ மீடியா
இந்த பதிவு.___
# கத்தோலிக்களுக்கு அல்ல
# கிறிஸ்துவர்களுக்கு
நம் அனைவருக்கும் தேவன் மோசே மூலம் தந்தருளிய 10 கட்டளைகளும் தெரியும்.
அதிலும் முக்கியமாக முதல் கட்டளை நாம் அனைவரும் அறிந்த ஒன்று.....!
இதோ வசன ஆதாரம் ______
மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமியின்கீழ்த் தண்ணீரிலும் உண்டாயிருக்கிறவ
ைகளுக்கு ஒப்பான ஒரு சொரூபத்தையாகிலும் யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ
உனக்கு உண்டாக்க வேண்டாம்;
# யாத்திராகமம் 20 :4
நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம். உன் தேவனாகிய
கர்த்தராயிருக்கிற நான் எரிச்சலுள்ள தேவனாயிருந்து, என்னைப்
பகைக்கிறவர்களைக் குறித்துப் பிதாக்களுடைய அக்கிரமத்தைப்
பிள்ளைகளிடத்தில் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும்
விசாரிக்கிறவராயிருக்கிறேன்.
#யாத்திராகமம் 20 :5
தேவன் நமக்கு எச்சரிக்கையுடன் கொடுத்த இந்த கட்டளையை திருச்சபைகளும்
மதித்து வந்தன. இதை மீறி சிலைகளை வழிபட்டு வரும் # கத்தோலிக்கர்களை நாம்
# கிறிஸ்தவர்களாக நினைப்பது கூட இல்லை.... ஆனால் அதே நேரத்தில்
சிலைவழிபாட்டை வெறுக்கும் நம்மில் அனேகர் இயேசு என்று குறிப்பிடும்
வகையில் சில புகைப்படங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்தி
கொண்டே #கத்தோலிக்கர்களை குறை கூறுவது இன்னும் கொடுமை. இயேசு என்று
குறிப்பிடும் எந்த ஒரு பிம்பமும் விக்கிரகமே...
இயேசுவின் நேரடி சொந்த காரர்கள் போல தங்களை காட்டிக்கொள்ளும்
# பெந்தேகோஸ்த் திருச்சபையினர் இதை பயன்படுத்தி வருகிறது இன்னும் கொடுமை.
என் முகநூலில் நட்பு விண்ணப்பத்தில் சுமார் 1000 இந்த புகைபடம் காரணமாக
இணைக்காமல் வைத்திருக்கிறேன்.
இந்த உருவம் தான் இயேசு கிறிஸ்துவா? ஒரு வேளை இந்த உருவத்தில் #
அந்திகிறிஸ்து வந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா?
சபையில் முதல் 3 நூற்றாண்டுகள் எந்த உருவ வழிபாடும் இல்லை. ரோமர்களால்
கொஞ்சம் கொஞ்சமாக புகுத்தப்பட்டவைகளே இவைகள்!!!
புதிய ஏற்பாடும் # விக்கிரக ஆராதனை காரர்கள் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிப்பதில்ல
ை என்று தெளிவாக சொல்கிறது. மோசம் போகாதிருங்கள். இயேசு கிறிஸ்து என்று
குறிப்பிடும் எந்த புகைப்படங்களையும் பயன்படுத்தாதிருங்கள்.. வேதத்தில்
தரித்திருங்கள்.... வருகைக்கு ஆயத்தமாகுங்கள். பரலோக ராஜ்ஜியம் சமீபமாய்
இருக்கிறது!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக