ஞாயிறு, 8 அக்டோபர், 2017

மியான்மர் கலவரம் புலம்பெயர் தமிழர் இசுலாமியர் பர்மா வில் பாதிப்பு இல்லை

இராமநாதன் இராமநாதன்
காலையில் இருந்து நிறைய தோழர்கள் மியாம்மரில் உண்மையில் என்ன நடக்கிறது
என கேட்டுக்கொண்டே இருக்கின்றனர்..
...!!
அங்கு ஏதோ இஸ்லாமியர்கள் மீது,
அவர்கள் இஸ்லாமியர்கள் என்பதற்காக தாக்குதல்கள் நடைபெறுவதாக இங்கே பலரும்
பதிவிட்டும் உள்ளனர்....!!
உண்மையில் அங்கு என்ன தான் நடக்கின்றது என்று யாருக்குமே தெரியவில்லை....??
நான் பார்த்தவரை யாங்கூன் நகரத்தில் மட்டுமல்லாமல் மியான்மர் முழுவதும்
இஸ்லாமியர்கள் எந்த பிரச்சனையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள்...!!
குறிப்பாக,
நமது தமிழ் முஸ்லிம்கள் அங்கு பல ஆயிரம்களில் வாழ்கிறார்கள்......!!
அவர்கள் எல்லாம் அங்கு பிரச்சனையின்றி அமைதியாக வாழ்ந்து வருவதோடு,
பலர் நிறைய தொழில்கள் எல்லாம் செய்து நல்ல நிலமையிலேயே உள்ளனர்.......!!
பிறகு என்ன தான் பிரச்சனை என்றால்,
ரோகிஞ்ஞா என்ற வங்கதேசத்து பழங்குடிகளே அங்கு தற்போதைய அனைத்து
சிக்கல்களுக்கும் காரணம்...!!
ஆம்.....,
அவர்கள் எல்லை பகுதிகளில் மியான்மார் நாட்டிற்குள் பெரும் எண்ணிக்கையில்
ஊடுருவி வருவதோடு,
அந்த பகுதியில் வாழும் பர்மியர்களுக்கு பல காலமாக பெரும் அச்சுறுத்தலை
ஏற்படுத்தி வருவதாக சொல்லப்படுகிறது....!!
சட்ட விரோதமாக குடியேறிவர்களை மீண்டும் வங்கதேசத்துக்கே திருப்பி
அனுப்பும் நடவடிக்கையை மியாம்மர் அரசு தீவிரப்படுத்த,
இந்த ரோகிஞ்ஞா மக்கள் மியாம்மர் அரசுக்கு எதிராக தீவிர கலகம் செய்துவரும் நிலையில்,
அந்த கலகத்தை அடக்குவதற்காக மியான்மர் ராணுவம் தற்போது பதில் நடவடிக்கையை
தீவிரப்படுத்தியுள்ளது.......!!
சமீபத்தில் கூட அந்த வங்க நாட்டு பழங்குடிகள்,
மியான்மார் எல்லையோரம் இருந்த மியான்மார் காவல் நிலையங்கள் பலவற்றை சூரையாடியுள்ளனர
்.......!!
இதுவே அங்கு நடந்தேறிவரும் உண்மையான பிரச்சனையேன்றி,
இது இஸ்லாமியர்களுக்கு எதிரான பிரச்சனையல்ல தோழர்களே.........!!
உண்மையில்,
அந்த ரோகிஞ்யா பழங்குடிகள் இஸ்லாமியர்களாக இல்லாமல் இருந்திருந்தாலும்,
வேறு எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்திருந்தாலும்,
மியான்மார் அரசு இப்படியான நடவடிக்கை எடுக்கவே செய்திருக்கும்.......!!
இதான் அடிப்படை பிரச்சனை.....!!
இதன் காரணமாகவே அங்கு சண்டை...!!
மற்றப்படி அரசு படைகளுக்கும் கலகக்காரர்களுக்குமான சண்டையை தவிர்த்து,
மியான்மார் மக்களுக்கும் இந்த பிரச்சனைகளுக்கும் பெரிதாக தொடர்பில்லை
என்பதே உண்மை......!!
சமூக ஊடகங்களில் பரவும் படங்கள் பலவும் உண்மையானது அல்ல என்பதும்,
இது திட்டமிட்டு பொய்யாக பரப்பப்படுவதாகவும் அங்கிருப்பவர்களால்
சொல்லப்படுகிறது......!!
பொதுவாகவே பர்மிய மக்கள் அமைதியானவர்கள்.
அனைவருடனும் அன்புடன் பழகுபவர்கள்.
அவர்கள் நம் தமிழர்களை அங்கு மிகவும் மதிப்புடன் நடத்துகிறார்கள்.....!!
அவர்களுடன் பழகியவன் என்ற அடிப்படையில் சொல்கிறேன்,
அவர்களிடம் பவுத்த மதவெறியோ அல்லது இனவெறியோ ஒரு துளியும் கிடையாது
தோழர்களே........!!
ஆகவே,
இந்த விசயத்தில் தமிழ்நாட்டு தமிழர்கள் விசயம் புரியாமல் கருத்து சொல்வதை விட,
அந்த மியான்மார் உள்நாட்டு பிரச்சனையில் தலையிடாமல் இருப்பதே நல்லது.....!!
அப்படி தலையிட்டால் அது அங்கு வாழும் தமிழர்களுக்கு ஆபத்தாய் முடியவும்
வாய்ப்புகள் உள்ளது....!!
ஆகவே...,
இவ் விசயத்தில் கொஞ்சம் நிதானமாய் செயல்படுவதே தமிழர்ளுக்கு நன்மையாக
இருக்கும்....!!
சிந்தித்து செயல்படுங்கள்.....!!
நன்றி.
செல்வா பாண்டியர்.
தலைவர்,
தமிழர் நடுவம்.
11 மணிநேரம் · நண்பர்கள்
நீங்கள், வடிவேல் சுப்ரமணியம் மற்றும் 66 பேர்
முந்தைய கருத்துகளைப் பார்க்கவும்…
Gabriel Raja
'அரக்கான் ' பகுதி மக்கள் தான் இந்த 'ரோஹின்யா' மக்கள்.
என்ன தமிழக பகுதிகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகாம் என்று பிரிந்து கிடப்பது
போல வங்க தேசத்தில் கொஞ்சம், பர்மாவில் கொஞ்சம் என்று பிரிந்து உள்ளது.
1948 ல் இருந்து கேரன், ரைசின் மக்களை பர்மா பாமர் பிரிவு மக்கள் ஒடுக்கி
கொன்று வருகின்றனர்.
1962 ல் தமிழர்களையே கொன்று உள்ளவர்.
'செல்வா குமார் ' தேனில் நஞ்சு கலந்து கொடுத்துள்ளார்.
பிடித்திருக்கிறது · 6 · பதிலளி ·
புகாரளி · 3 மணிநேரம் முன்பு
இராமநாதன் இராமநாதன் பதிலளித்தார் · 2 பதில்கள்
Arulalan Parri
செல்வா பாண்டியர் பர்மாவிலிருந்து "புலம்பெயர்ந்து "தமிழகத்தில்
வாழ்பவரா? ரோஹிங்கா இனத்தவர்களது தாய்மொழி வங்க மொழியாக, இருக்கலாம்
அவர்களது வாழ்வியல் மொழி பர்மிய மொழியே அம்மண்ணின் பூர்வீககுடிகள்,
சிலவங்காளிகள் வேண்டுமானால் கள்ளத்தனமாக குடியேறியிருக்க
லாம் , எனவே ஒட்டுமொத்த ரோஹிங்கா இனமக்களும் வங்கதேசத்தவர் என கூறுவது
தவறான விவாதம் . பர்மாவில் பல்வேறு தேசிய இனமக்கள் , நாகா, சியான். சின்,
கச்சின், கரீன் கயின், எனவாழ்கிறார்கள் இங்கே ஹிந்தீயம் ஏனைய இனத்தவர்களை
அடக்கிஆளநினைப்பதுபோல், பர்மிய ஆட்சியாளர்கள் (மக்களல்ல.) ஏனைய இனமக்களை
அடக்கியாள்கிறார்கள் .இந்தஎதேச்சாதிகார போக்கை எதிர்த்து பல்வேறு
இனங்களைசார்ந்த. ஆயுதம் தாங்கிய இனக்குழுக்கள் அரசுப்படைகளுடன் மோதல்களை
மேற்கொள்வதும் கடந்த 60வருடங்களாக நடந்து வருவதையும் நாம் கவனத்தில்
கொள்ளவேண்டும். திரு. தமிழரசன் அப்துல்காதர் கூறியுள்ளதுபோல், "ரோஹிங்கா
மக்களது பூர்வீக மண் "அரக்கான் மாநிலம் அம்மாநிலத்தின் பூர்வக்குடிகளே
"ரோஹிங்கா "இனத்தவர் என்பதே உண்மை !அம்மாநிலத்தில் வேற்றினத்தவர்
பெரும்எண்ணிக்கையில் , இராணுவஆட்சிகாலத்தில் புலம்பெயர்ந்து ரோஹிங்கா
மக்களது மண்ணையும் வாழ்வியல் ஆதாரங்களையும் வன்முறையில் , அபகரித்தலின்
எதிர்வினையே ரோஹிங்கா இளைஞர்கள் கிளரச்சியில் ஈடுபடுகிறார்கள்
அதனைசாக்கிட்டு இனஅழிப்பை முடிக்கிவிடுவது அநீதியே ! !!!!!
திருத்தப்பட்டது ·
பிடித்திருக்கிறது · 2 · பதிலளி ·
புகாரளி · 2 மணிநேரம் முன்பு
சக்திவேல் சுப்பிரமணி
இதேதான் சிங்கலவனும் நம்மை அழிக்கும் பொழுது சொன்னான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக