வீரசைவர் குலம் - தமிழர் பிரிவு
வீரசைவர் = வீரமாகேசுவரர் = வீரமாயேச்சுரர் = வீரசங்கமர் = லிங்காயத்தார்
சைவம் - சிவனையே முழுமுதற் கடவுளாகக் கொண்டு சரியை முதலிய நான்கினாலும்
அவனை அடையப் பாடுபடும் சமயமே சைவம்.
பதி - பசு - பாசம் என்னும் மூன்றையும் ஒப்புக்கொண்டு ஆகம வழிப்படி
நடப்பவர் 'மாகேசுவரர்' எனப்படுவர்.
வீரசைவம் - வீரசைவர் அல்லது வீரமாகேசுவரர் அல்லது லிங்காயத்துகள் என்பவர்
சிவனை மட்டுமே லிங்க வடிவில் வழிபடுவர். பக்தி நெறி யைப் பின்பற்றி
ஒழுக்கத்தோடு வாழ்க்கை நடத்தி லிங்கத்தை வழிபடுவோர் துறக்கம் அடைவர்
என்பது வீரசைவர் நம்பிக்கை. இவர்கள் வடமொழி வேதங்களை ஒப்புக்கொள்ளாதவர்;
சாதி வேறுபாடு இல்லாதவர்; குழந்தை மணம் செய்யாதவர்; கைம்பெண் மறுமணம்
செய்பவர்; புலாலையும் குடியையும் ஒழித்தவர்; இறந்தாரைப் புதைப்பவர்;
லிங்கத்தைப் போலக் குல்லாய் தைத்துத் தலையில் அணிபவரும் இவருட் சிலராவர்.
வீர ஆகமம், வாதுள ஆகமம் என்னும் இரண்டே இவர்தம் மதிப்புக்குரியவை.
திருமூலர் இவ்விரு ஆகமங்களையும் பாராட்டியுள்ளார
். எனவே, திருமூலர் காலத்தில் வீரசைவம் நாட்டில் இருந்தது என்பது நன்கு
தெரிகிறது அன்றோ?
திருமூலர் சித்தர் (வீரசைவர்)
இவர் ஒரு லிங்கதீட்சை பெற்றவர். நந்தியை குருவாக கொண்டவர். திருமுலரின்
திருமந்திரத்தை வீரசைவ நெறி நூல் என்றே மறைமலையடிகள் முதல் கொண்டு பல
அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தமிழகத்தின் முதல் சைவ சித்தாந்த நூலும்
திருமந்திரமே ஆகும். மாணிக்கவாசக பெருமானும் வீரசைவத்தின் ஒரு
லிங்கதாரியே.
ஆகமாந்தம் அல்லது சைவ சித்தாந்த சாத்திரங்கள் என்பன சுமார் கி.பி. 4
அல்லது 5-ஆம் நூற்றாண்டில் சிறப்புற்றன என்னலாம். குப்தர்கள் காலத்தில்
கோதாவரியாற்றங்க
ரையில் மந்த்ர காளேசுவர் என்ற இடத்தில் மந்த்ரகாளேவசுவர் கோவிலைச்சுற்றி
நான்கு சைவ மடங்கள் இருந்தன. அங்கு ஆகமச் சைவர்கள் இருந்தார்கள். இந்த
4,5,6-ஆம் நூற்றாண்டுகளில் திருமூலர் ஒரு நூற்றாண்டைச் சேர்ந்தவராதல்
வேண்டும் என்பது முன்னரே கூறப்பட்டது. திருமூலருக்கு முன் தமிழ்நாட்டில்
தமிழ் மொழியில் சைவ சித்தாந்த நூல் இல்லை, அவர் செய்த திருமந்திரமே சைவ
சித்தாந்த முதல் நூல் என்பது தெளிவு. ஆதலின் இந்நூல் பின் வந்த அப்பர்,
சம்பந்தர் ,சுந்தரர் முதலிய சமயாசாரியர்கட்கும் அவர்களால் பரப்பப்பட்ட
சைவ சமயத்திற்கும் ஆதார நூலாயிற்று. அவர்கள் திருமந்திரத்தை நன்கு
படித்தவர்கள என்பதற்குரிய சான்றுகள் பல காட்டலாம். இடம் போதாமையால், சில
சான்றுகள் இங்குத் தருவோம்.
----------
1. (1) "குருவே சிவமெனக் கூறினன் நந்தி" -திருமந்திரம்
(2) "ஒருவ ராயிரு மூவரு மாயவன் குருவ தாய குழகன்" -அப்பர் தேவாரம்
2. (1) "சாத்திர மோதும் சதுர்களை விட்டுநீர்
மாத்திரைப் போது மறித்துள்ளே நோக்குமின்
பார்த்தஇப் பார்வை பசுமரத் தாணிபோல்
ஆர்த்த பிறவி அகலவிட் டோடுமே" -திருமந்திரம்
இதே அறிவுரையை அப்பர் கூறுதல் காண்க:
(2) "சாத்தி ரம்பல பேசும் சழக்கர்காள்
கோத்தி ரமுங்கு லமுங்கொண் டென்செய்வீர்.
பாதிதி ரஞ்சிவ மென் பணிதிரேல்
மாத்தி ரைக்குள் அருளுமாற் பேறரே"
-அப்பர் தேவாரம்.
(3) "வேயன தோளிக்கு வேந்தொன்றுந்தானே"
என்பது திருமந்திரம்.
"வேயுறுதோளிபங்கன் விடமுண்டகண்டன்"
என்பது சம்பந்தர் தேவாரம்.
(4) "அத்தன் திருவடிக் கப்பாலைக் கப்பாலாம்"
"அப்பாலைக் கப்பாலைப் பாடுதுங்காண் அம்மானாய்"
என்பது திருவாசகம் .
(5) "எப்பரி சாயினும் ஏத்துமின் ஏத்தினால்
அப்பரி சீசன் அருள்பெற லாமே"
என்பது திருமந்திரம். இக்கருத்து,
"எப்பெருந் தன்மையும் எவ்வெவர் திறமும்
அப்பரி சதனால் ஆண்டுகொண் டருளியும்"
எனவரும் திருவாசக அடிகளில் காண்க.
-------------
https://www.projectmadurai. org/pm_etexts/utf8/pmuni0528. html
நன்றி.

https://www.projectmadurai.
நன்றி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக