வெள்ளி, 6 அக்டோபர், 2017

பாஜக குறுக்குவழி ஆட்சி பிடித்த மணிப்பூர் பீகார் கவர்னர் மூலம் இடைஞ்சல் புதுச்சேரி டெல்லி

இரகுநாதசோழன்
இதுக்கு பேர்தான் பிஜேபி அலை
– மணிப்பூரில் ஒட்டுமொத்த தொகுதிகளில் காங் கூட்டணியே அதிக இடம்
பிடித்தது, பாஜகவிற்கு மக்கள் குறைவான இடத்தையே கொடுத்தார்கள்.., ஆனால்,
சுயேட்சைகள் சிலரை விலைக்கு வாங்கி, மக்கள் எண்ணத்திற்கு எதிராக பாஜக
ஆட்சி அமைத்தது..
– கோவாவில் அதே போல, தனிப்பெரும் கட்சியாக காங் கட்சியை மக்கள் ஜெயிக்க
வைத்தார்கள், பாஜகவிற்கு இரண்டாம் இடம் தான் கிடைத்தது, அங்கும்
சுயேட்சைகள் சிலரை + காங் கட்சியில் சிலரை விலை பேசி, பாஜக மக்கள்
எண்ணத்திற்கு மாறாக ஆட்சி அமைத்தது..
– பீகாரில் மக்கள் பாஜகவை தோற்கடித்து, மக்கள் லாலு + நிதிஷ் + காங்
கூட்டணிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்தினர்.. அதில் கூட லாலுவின்
கட்சிக்கே மக்கள் அதிக இடம் கொடுத்தார்கள் ( 80 இடங்கள் ), ஆனால் லாலு
தான் ஒப்புக்கொண்ட படி, நிதிஷ் குமாரை முதல்வர் ஆக்கினார், தனது மகனை
துணை முதல்வர் ஆக்கினார்.. பாஜக மூன்றாம் இடம் பிடித்தது, தடாலடியாக
நிதிஷ் குமாரை கைக்குள் போட்டுக்கொண்டு, மக்கள் எண்ணத்திற்கு விரோதமாக
பாஜக குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்துவிட்டது..
– டெல்லியில் மக்கள் இரண்டு முறையும் பாஜகவை தோற்கடித்து, அரவிந்த்
கெஜ்ரிவாலை ஆட்சியில் அமர்த்தினர்.., ஆனால் அவரை ஆட்சியே நடத்த விடாமல்,
கவர்னர் மூலம் மிகப்பெரிய இடையூறு கொடுத்துக்கொண்டு இருக்கிறது மத்திய
பாஜக அரசு.. இதுவும் மக்கள் எண்ணத்திற்கு எதிராகத்தான்..
– பாண்டிச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அமோக வெற்றிபெற்ற காங்
அரசை ஆட்சி செய்ய விடாமல் கவர்னர் மூலம் இடையூறு செய்து, அந்த
மாநிலத்தில் கவர்னர் ஆட்சி நடப்பதை போல ஒரு மாய தோற்றத்தை ஏற்படுத்தி,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அசிங்கப்படுத்திக்கொண்டு இருக்கிறது
பாஜக.. இதுவும் மக்கள் விரோத போக்கு தான்..
– தமிழகத்தையும் இதோடு சேர்த்துக்கொள்ளுங்கள்., மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை பாஜக ரெய்டுகள் விட்டு பயம் காட்டி, தனது இடம்
போல ஆட்டி புடைத்துக்கொண்டு இருக்கிறது..
இப்படி மக்களின் ஒட்டுமொத்த எண்ணங்களுக்கு எதிராக, தனது மத்திய அரசு என்ற
சர்வாதிகாரத்தன்
மையை வைத்து இந்தியா முழுக்க தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள
துடிக்கும் ஒரு வெறி, இந்தியா இதுவரை கண்டிராத ஒரு பேராபத்து..
இதற்கெல்லாம் பாஜக உரிய விலை கொடுக்க வேண்டிய காலம் வந்தே தீரும், வராமல்
போகாது..!
பதிவு சுட்டது
மோடி பா.ஜ.க தேர்தல் இந்து ஹிந்து மதவெறி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக