Gunaseelan Samuel > Kannan Mahalingam
சேரலாதன் இரும்பொறையன் 27.7.2017 அன்றைய பதிவில் மேற்கோள் காட்டும்
திருவண்ணாமலை மாவட்டக் கல்வெட்டொன்றில் “சாக்கை பறையனார் இளமகன் ஏறன்”
என்றுதான் உள்ளது. அதைத் தமிழுக்கும் தமிழருக்கும் ஒவ்வாப் புத்த சமயச்
சாயலில் “சாக்கிய பறையனார்” என்று அவர் திரித்துக் கூறுவதன் நோக்கம்
புரியவில்லை.
அவ்வாறு திரிப்பதனால், வரும் நன்மைதான் என்ன?
தமிழ்த் தேசியம் பேசும் குழுக்களில் பெரும்பான்மை குழுக்கள் வடுகர்களை
மடியில் கட்டிக்கொண்டுள்ளன; அல்லது வடுகர்களையோ வடுக நலன்களையோ
தலைமையாகக் கொண்டுள்ளன. மேலும், தமிழ்த் தேசியம் பேசுவோர் எல்லார்க்கும்
தமிழர் தேசிய இனத்தைப் பற்றிய தெள்ளத் தெளிவான பார்வை இதுவரை இல்லை
என்பது கண்கூடான உண்மைதான். அதனால், பரையர் நலன்களுக்கு எதிராக அவர்கள்
செயல்படுவதாகக் கருதுவதுதான் அதற்கேற்ற ஓர் எதிர்வினை என்று எண்ணினால்,
அது முற்றிலும் தவறு.
வடுகர்களும் மார்வாடிகளும் குசராத்திகளும் தமிழரையும் தமிழரின்
பொருளியலையும் சுரண்டுவதும், திராவிட, இந்திய அரசுகள் தமிழகத்தின் இயற்கை
வளங்களை முழுமூச்சாகக் கொள்ளையடிப்பதும் “சாக்கிய முனிகளின்”
கண்களுக்குத் தெரியாது. பள்ளி, சாணார் முதலான தமிழ்ச் சாதிகள் மட்டுமே
அவர்களின் முட்டைக்கண்களுக்குப் பகையாகத் தெரியும்.
தமிழ்ச் சாதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் - மாசேதுங் சொன்னதைப்போல் -
“மக்களுக்கு இடையிலான முரண்பாடுகள்”. ஆனால், தமிழருக்கும் வடுகருக்கும்,
தமிழருக்கும் மார்வாடிகளுக்கும், தமிழருக்கும் குசராத்திப்
பணமுதலைகளுக்கும் இடையிலான முரண்பாடுகள் “பகை முரண்பாடுகள்”. ஏனெனில்,
அவர்கள் தமிழரின் மண்ணுரிமையைப் பறிக்கின்றனர்; வாழ்வுரிமையைப்
பறிக்கின்றனர்; அரத்தம் குடிக்கும் அட்டைகளாயுள்ளனர்.
தமிழரின் குமுக வரலாறு நடுநிலையுடன் முறையோடு இன்னும் எழுதப்படவில்லை.
தமிழரின் வரலாற்றில் முழுப் பூசுனைக்காயைச் சோற்றில் மறைப்பதைப்போல்
மறைக்கப்பட்ட வரலாறு பரையரின் வரலாறுதான் என்பதில் ஐயமில்லை. அதற்காக
இதுவரை கிடைத்துள்ள கல்வெட்டுகள் செப்பேடுகள் முதலான வரலாற்று ஆவணங்கள்
அத்தனையையும் அலசி ஆய்ந்து தேர்ந்து தெரிந்து தமிழர் வரலாற்றில் பரையரின்
பங்கை முறையாகக் காட்ட முனையுங்கள். அது நல்லது.
வரலாற்றில் பரையர்களை அடிமடிக்குத் தள்ளியவர்கள் வடுகர்களா, இல்லை பள்ளி,
பள்ளர், சாணார் முதலான தமிழ்ச் சாதியரா? பரையரைத் தீண்டப்படாதோரென
வகைப்படுத்தியவர்களும் இழிவுப்படுத்தியவர்களும் பள்ளிகளோ பள்ளர்களோ
சாணார்களோ அல்லர்; நாயக்க வடுகர்கள்தாம் அவ்வாறு செய்தவர்கள்.
பரையர்களைத் தொடப்படாதோராகச் செய்து, சாப்பறை முழக்கவும் இடுகாட்டையும்
சுடுகாட்டையும் காக்க வைத்தவர்கள் வடுகர்களேயாவர். பரையர்கள் தங்களைவிடத்
தாழ்ந்தவர்கள் எனும் ‘மனநிலையைக்’ (காழ்ப்பைப்) பள்ளிகள் முதலான தமிழ்ச்
சாதியினரிடம் மனங்களில் ஊன்றியவர்கள் அவ் வடுகர்களேயாவர். தமிழர்களின்
குமுக வரலாற்றில் பறையர்கள் மறைக்கப்பட்டதை உரிய முறையில்
எடுத்துச்சொன்னால், அம் ‘மனநிலை’ தவறு என்று அவர்கள் உணர்வார்கள்;
அவர்களில் படித்த பலர் அதை உணர்ந்தும் வருகிறார்கள். அப்படியிருக்க,
தும்பைவிட்டு வாலைப் பிடிப்பானேன்?
வட்டத்திற்கும் நேர்கோட்டிற்கும் இடையிலான இயங்கியல் உறவை இன்றைய
உயர்கணக்கு மிகத் தெளிவாகக் காட்டுகிறது. ஒரு வட்டத்தின் ஒரு சிறிய கூறு,
நேர்கோடாகத்தான் இருக்கிறது; அதாவது, பல நேர்கோடுகளைக் கொண்டதுதான்
வட்டம். அந்த வட்டத்தின் ஒரு துண்டான நேர்கோட்டை ஒருதலையாக நீட்டினால்,
அது தொடுகோடு (Tangent) ஆகும். அந்தத் தொடுகோடு அதற்குரிய வட்டத்தில்
மீண்டும் சேராது தலைதெறிக்க எங்கோ ஓடுகிறது. இதைத்தான் தினையைப்
பனையாக்குவது என்கின்றனர்.
தினையைப் பனையாக்குவதும், பனையைத் தினையாக்குவதும் “சாக்கிய
முனிவர்”களின் திருவிளையாடல்.
அந்தத் திருவிளையாடலில் நோக்கம் என்ன தெரியுமா?
திராவிடத்தால் கருகுலைக்கப்பட்ட தமிழர் தேசிய ஓர்மை தட்டுத்தடுமாறி
மீண்டும் தலையெடுப்பதைக் கெடுக்கும் நோக்கில் அதை வசைப்பாடுவதும் -
ஒவ்வாத ‘புத்தம்’ எனும் சமயப் பொறிக்குள் பரையரைச் சிக்கவைத்து
‘இந்தி’யத்தின் ஐந்தாம்படையாகத் திருப்பணியாற்றுவதும் - அவர்களின் ஒரே
நோக்கம். கெடுவான் கேடு நினைப்பான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக