Ajith Kumar
# தமிழருக்கு_தெலு
ங்கருக்கும்_நடைபெற்ற
# மறவர்_நாட்டு_போர் ..!
.
.
நாயக்க அரசு வம்சத்தைத் தோற்றுவித்தவர் விசுவநாத நாயக்கர். நாடு
முழுவதையும் எழுபத்திரண்டு பாளையங்களாகப் பிரித்து எவர் எவர்க்கு எந்த
ஊர் அல்லது பட்டணம் உரியது என்பதை உறுதி செய்தவரும் இவரே. நாயக்க
மன்னர்கள் மதுரையிலிருந்து அரசு செலுத்தினாலும் மறவர் நாடு பெயரளவில்தான்
அவர்கள் ஆட்சியிலிருந்தது. ஆயின் மறவர் நாட்டு மக்கள், தமிழ்நாட்டின்
பிறபகுதியினர் அடங்கி ஒடுங்கியதைப் போல், நாயக்க அரசருக்குப் பணிந்து
அவர்களது ஆட்சியை ஏற்க மறுத்தனர். இக்காலக் கட்டத்தில் மறவர் நாட்டைத்
தளவாய் சேதுபதி இரண்டாவது சடைக்கத்தேவன் ஆண்டு வந்தான். மதுரையை, திருமலை
நாயக்கர் ஆண்டு வந்தார். மதுரைக்கு அருகில் வலிமை பொருந்திய சிற்றரசு
ஒன்று இயங்கினால் அது தன்னுடைய அரசுக்கே உலைவைக்கும் என்று எண்ணிய
திருமலை, சேதுபதிமீது படையெடுக்கத் தக்க தருணத்தை எதிர்நோக்கியிருந்தார்.
இதே காலக்கட்டத்தில் சேதுபதியை ஆட்சி பீடத்திலிருந்து அகற்ற முந்தைய
சேதுபதியின் சோர புத்திரனான தம்பி என்பான் சடைக்கதேவனுக்கு தொல்லைகள்
கொடுத்து வந்தான். திருமலை நாயக்கனின் உதவியையும், தம்பி நாடினான்.
இதற்காகக் காத்திருந்த திருமலை, சேதுபதி மதுரை ஆட்சியை மதிக்காமலும்
கப்பம் கட்டாமலும் இருந்து வருகிறான் என்ற சாக்கைச் சொல்லி மறவர்
நாட்டின்மீது போர் தொடுக்க முடிவு செய்தான்
இக்காலத்தில் இராமப்பய்யன், திருமலை நாயக்கரின் தளபதியாகப் பணிபுரிந்து
கொண்டிருந்தான்.
திருமலை நாயக்கரின் நம்பிக்கைக்கும் பாராட்டுக்கும் உரிய இராமப்பய்யன் பல
போர்க்களங்களைக் கண்டவன்.
திருமலையின் எண்ணத்தை உணர்ந்த இராமப்பய்யன், சேதுபதியைத் தானே அடக்க,
திருமலையின் அனுமதியைப் பெறுகின்றான். திருமலையின் அனுமதியோடு இராமநாதபுர
சேதுபதி இரண்டாம் சடைக்கத்தேவன் மீது போர்தொடுக்கச் செல்கிறான்
இராமப்பய்யன். செல்லும் வழியில் மானாமதுரையில் தங்கியிருந்த பொழுது,
சடைக்கத் தேவன் தன் மருமகன் வன்னியனை அனுப்பி இவன் மீது போர் தொடுத்து
வெற்றி பெறுகிறான். எழுபத்திரண்டு பாளையக்காரர்கள் இராமப்பய்யனுக்க
ு உதவி செய்தும் போரில் அவன் வெற்றி பெறவில்லை. போகலூர்க் கோட்டையிலே
நடந்த போரிலும் வன்னியனே வெற்றி பெறுகிறான். இராமப்பய்யன் அரியாசபுரத்தை
முற்றுகையிட்டுத் தாக்கும்போது சடைக்கத்தேவன் காயம் அடைந்து இராமேசுவரம்
சென்றுவிடுகிறான்.
மறவர் படையைத் தோற்கடிக்க முடியாத இராமப்பய்யன் பரங்கியரின் உதவியை
நாடினான் என்று அம்மானை கூறுகிறது. மதுரை நாயக்கன் மறவர் நாட்டுப்
படையெடுப்பில் தனக்கு உதவியனால் போர்ச்சுக்கல் அரசனுக்கு மறவர் நாட்டில்
கோட்டை கட்டிக் கொள்ளவும், பல மாதா கோயில்கள் கட்டிக் கொள்ளவும் அனுமதி
வழங்க முன் வந்தான்.. இந்நிலையில் பல பாளையகாரர்களின் உதவியேயும்
போர்ச்சுக்கல் உதவியேயும் பெற்று
மீண்டும் போர் தொடுக்கிறான். போகலூர்க் கோட்டையை முற்றுகையிட்டுச்
சேதுபதியின் மக்களான குமாரன், மதியார் அழகன் ஆகியோரைப் பிடித்துச்
சித்திரவதை செய்து கொல்கிறான். இராமேசுவரத்திலுள்ள சேதுபதியுடன் போரிட
பரங்கியர் உதவியுடன் கப்பல் போரும் நடைபெறுகின்றது. வெற்றியும்
தோல்வியும் இரு பக்கமும் மாறிமாறி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில்
வன்னியன் வைசூரி அம்மையினால் துன்பப்படுகிறான். பாம்பன் துறைப்போரில்
வன்னியன் இறக்க, அவன் மனைவி ஈமத்தீயில் விழுந்து உயிர் துறக்கிறாள்.
தன்னுடைய மருமகன் வன்னியன் இறந்த பின்பு சடைக்கத்தேவன் சரணடைய, சிறையில்
அடைக்கப்படுகிறான். சிறையிருந்த காலத்தில் மாயன் (திருமால்) அருளால் அவன்
கால் விலங்குகள் தெறித்தன. காவலர் மூலமாக இச்செய்தி அறிந்த திருமலை ஒரு
கணம் அதிர்ந்து போனர்.. பெருமாலின் தெய்வதத் தன்மையே அறிந்து பயந்து போன
திருமலை நாயக்கர் சடைக்கத் தேவனை விடுவித்து, ஆடை ஆபரணம் கொடுத்து
‘ராமநாத சுவாமி நல்ல பெருந்தீவில் சென்றிருங்காண்’ என்று விடை கொடுத்து
அனுப்பியதாகவும். விடைபெற்ற சேதுபதி சொக்கலிங்கம் மீனாட்சி துணையென்று
வணங்கி.
"ராமநாத சுவாமி நல்லபெரும் பட்டணத்தில்
செங்கோல் செலுத்திச் சேவடியைக் கைதொழுது
மாயன் அருளால் மண்டலத்தை ஆண்டிருந்தான்;"
எனவும் கூறி, கதையாசிரியர் இராமப்பய்யன் அம்மானையை முடிக்கின்றார்.
இராமப்பய்யன் அம்மானை நாயக்கர் காலத்தில் உருவான இலக்கியம்..
18 ஜூலை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக