வெள்ளி, 6 அக்டோபர், 2017

வீரசைவர் லிங்கயாத் பாசுபதம் சைவம்

கத்திவாக்கம் நவீனன்
தமிழர்கள் வீர சைவர்களா? வீர சைவம் என்று முதன்முதலில் எப்போது தமிழில்
பயன்படுத்தப்பட்டது?

வேதம் தமிழ் செய்த மாறன்
கன்னடரான பசவன்னா தோற்றுவித்தது தான் வீர சைவம்.தமிழர்களுக்கும்
வீரசைவத்திற்கும் சம்பந்தமில்லை.த
மிழர் கடைபிடித்தது சைவத்தின் பிரிவுகளான தாச மார்க்கம்(திருந
ாவுக்கரசர்) .கிரியை மார்க்கம்(திரு ஞானசம்பந்தர்). சம அல்லது யோக
மார்க்கம்(சம்பந்தர்).சன்(வள்ளலார்) மார்க்கம்.பிற்காலத்தில் வீர சைவம்
புகுந்திருக்கலாம்.சோழர்காலத்தி
ல் வடஇந்திய சைவமான காபாலிக சைவம் தமிழகத்தில் புகுந்தது.அதன் தாக்கத்தை
கோவில் சிற்பங்களில் இன்றும் காணலாம்.அனைத்து சைவமும் ஒன்றுதான்.சில
வழிபாட்டு முறைகள் மாறுபடும்.

SriGanesan Mayakrishnan
தவறான கருத்து. வீரசைவத்திற்ககு 1500 ஆண்டுகளுக்கு மேற்பட்ட வரலாறு உண்டு
பசவேஷ்வர்ர காலத்திற்க்கு முன்னரே தமிழகத்தில் வீரசைவ மடம் உள்ளது

SriGanesan Mayakrishnan
கத்திவாக்கம் நவீனன்
கிபி2 நூற்றாண்டிலே லிங்க வழிபாட்டை முன்னிலைபடுத்தி பாசுபதம் சைவம்
உருவாகிவிட்டது. அதன் நீட்சியாகவே லிங்க வழிபாட்டை கொண்டி பிரிவாக
பாசுபதம்=> காளமுகம்=> வீரசைவம்=> லிங்கயாத் பிரிவுகள் வந்தது

SriGanesan Mayakrishnan
பாசுபதர்கள் தான் வீரசைவர் என்பது என்னுடைய கருத்து. இருவரும் லிங்க
வழிபாட்டை மட்டுமே ஏற்பவர்கள்.
திருநாவுக்கரசர் காலத்தில் நாகை கரகோணம் ,குடந்தை கரகோணம், கட்சை கரகோணம்
போன்ற பகுதிகளில் பாசுபதர்கள் இருந்துள்ளனர். சமணத்திறக்கு எதிராக
அப்பருடன் இணைந்து செயல்பட்டுள்ளனர்.

SriGanesan Mayakrishnan
சோழர் காலத்திற்க்கு முன்னரே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வீரமாகேசுவரர் அல்லது வீரமாயேச்சுரர் என்றழைக்கப்பட்ட
ுள்ளனர்.

கத்திவாக்கம் நவீனன்
ஆக, கி.பி 12ஆம் நூற்றாண்டில் வீர மாயேச்சுரர் என்று பயன்
படுத்தப்பட்டுள்ளது... அதற்கு முன் வீர சைவர்கள் என்று பயன்படுத்தப்பட்
டுள்ளதா????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக