வெள்ளி, 6 அக்டோபர், 2017

வள்ளலார் மதம் அசைவம் உருவ வழிபாடு சாதியம் சமஸ்கிருதம் தவிர்த்தல் உணவளித்தல்

Rajkumar Palaniswamy
வள்ளலார் தோற்றுவித்த சன்மார்க்கம் இந்து மதத்தில் இருந்து முற்றிலும்
வேறுபட்டது. சன்மார்க்கிகள் இந்து மதத்தின் கீழ் வரமாட்டார்கள்.
இந்து மதம் பல கோடி தெய்வங்களை வணங்குகிறது. சன்மார்க்கம் அருவமும்
உருவமும் இல்லாத ஒற்றைக் கடவுளை மட்டுமே வணங்குகிறது.
இந்து மதம் சாதி, கோத்திரம், குலம், சாத்திரம், இதிகாசம், புராணம்,
இயமம், நியமம், ஆசிரமம், வருணம் போன்ற உலகாசாரங்களை ஏற்கிறது. இவை
எதுவும் சன்மார்கத்தில் இல்லை.
இந்து மதத்தின் மூல நூல் சமற்கிருத வேதங்கள். சன்மார்க்கத்தின் மூல நூல்
தமிழ் நூலான திருவருட்பா. ஆரிய வேத நூலையும் அதன் அதிகாரத்தையும்
சன்மார்க்கம் மறுக்கிறது.
இந்து மதத்திற்கு சமற்கிருத மொழியே இறை மொழி. சன்மார்க்கம் தமிழ் மொழியே
இறை நிலையை அடைந்திட ஏதுவான மொழி என்று அழுத்தமாக பதிவு செய்கிறது.
அதனால் தமிழே இறை மொழி.
பலதரப்பட்ட உருவங்களை வழிபடுகிறது இந்து மதம். அழல் உருவான அண்ட பிண்ட
சோதியை மட்டுமே வழிபடுகிறது சன்மார்க்கம்.
இந்துக்கள் மாட்டுக்கறி முதல் மனிதக்கறி வரை எதையும் உண்ணலாம். ஆனால்
சன்மார்கத்தில் மரக்கறியை தவிர வேறு எந்த கறியையும் உட்கொள்ள
அனுமதியில்லை.
இறந்தவர்களை எரிக்கச் சொல்கிறது இந்து மதம். இறந்தவர்களை புதைக்க மட்டுமே
வேண்டும் என்கிறது சன்மார்க்கம்.
நால் வருணக் கோட்பாட்டை கொண்டது இந்து மதம். நால் வருணம் தோல் வருணம்
முதலிய உலகியல் கோட்பாட்டை மறுக்கிறது சன்மார்க்கம்
கண்மூடி தியானம் செய்வது மூலம் ஞானத்தை அடையலாம் என்று போதிக்கிறது இந்து
மதம். கண்களை திறந்து பசியினால் வாடும் உயிர்களுக்கு பசியாற்றுவித்தல்
செய்வது மட்டுமே ஞானத்தை அடையும் வழி என போதிக்கிறது சன்மார்க்கம்.
இப்படியாக எல்லா வகையிலும் இந்து மதத்திற்கு புறம்பான கருத்தியல் கொண்ட
சன்மார்க்கம் எப்படி இந்து மதத்தின் கீழ் வரும்? சன்மார்க்கம் தனி
மார்க்கம். அதற்கான அங்கீகாரத்தை அரசிடம் இருந்து கேட்டுப் பெறுவது
சன்மார்கிகளின் கடமையும் ஆகும். சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள்
அதற்கு முன்வருவார்களா ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக