வெள்ளி, 6 அக்டோபர், 2017

வன்னியர் கவுண்டர் பாளையங்கள்

Suresh Nataraj , தமிழன் சுரேஷ் அகமுடையார் தேவர் உடன் இருந்தார்.
# மறவர்_கவுண்டர்_வன்னியர் ..
விஜய நகர வடுக வந்தேறிகளுக்கு காட்டிக் கொடுத்து தான் மறவர்கள்
பாளையங்களைப் பெற்றார்கள்.. என்று சொல்கிறார்களே! இது உண்மையா?
++++++++++++
இது முற்றிலும் தவறான பதிவு. தமிழ் நாட்டில் மறவர்கள் மட்டும் தான்
பாளையங்களை ஆண்டார்களா?
# வன்னியர்களும் # கவுண்டர்களும் கூட பல பாளையங்களை ஆண்டார்கள். புரவிபாளையம்,ஊத
்துக்குளி, சமத்தூர் இப்படி பல கவுண்டர் பாளையங்களும்
# அரியலூர் , # பிச்சாவரம் இப்படி பல
# வன்னியர்_பாளையங்களும் இருந்தன.
மறவர்கள் காட்டிக் கொடுத்துத்தான் பாளையங்களைப் பெற்றார்கள் என்றால்
வன்னியர்களும் கவுண்டர்களும் யாரைக் காட்டிக் கொடுத்துப் பாளையங்களப்
பெற்றார்கள்? மறவர்கள் விஜயநகரப் பேரரசிற்கு காட்டிக் கொடுத்தார்கள்
என்பதற்கு ஒரு வரலாற்று ஆதாரம் கூட கிடையாது...
எனவே இந்த வாதம் வரலாற்றை விளக்காது. மாறாக என்ன நடந்திருக்கும்? விஜய
நகரப் பேரரசு படையெடுத்து வரும் போது இங்கு பேரரசுகள் எதுவும் இல்லை. தல
மட்ட சிற்றரசுகள் தான் தமிழகத்தில் இருந்தன. ஒரு அரசு படையெடுத்து
மாற்றாருடைய ஆட்சிப் பரப்புகளைக் கைப்பற்றி விட்டால் என்ன நடக்கும்?
வென்ற பகுதியை தன்னுடைய அரசோடு இணைத்துக் கொள்வார்கள். அல்லது தோற்ற
அரசர்களிடம் திரை பெற்றுக் கொண்டு தமக்கு அடங்கிய சிற்றரசாக இருக்க
அனுமதிப்பார்கள். இந்த இரண்டும் தான் போருக்குப் பிந்திய நடைமுறையாக
இருக்கும். இதே தான் இங்கும் நடந்தது.
பெரும் படையோடு வந்த விஜய நகரப் பேரரசிடம் தோல்வியுற்ற தமிழக
சிற்றரசர்களிடம் ஆட்சிப் பொறுப்பை மீண்டும் வழங்கி விட்டு
பாதுகாப்புக்காக தாமும் சில பாளையங்களை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தினர்.
ஏன் அனைத்துப் பகுதிகளையும் அவர்கள் நேரடி ஆட்சிப் பொறுப்பில் வைத்துக்
கொள்ளாமல் சில பகுதிகளை மட்டும் வழங்கினார்கள்? இங்கு தான் பேரரசுகளின்
ஆட்சி நுட்பத்தை புரிந்து கொள்ள முடியும். அனைத்துப் பகுதிகளையும் நேரடி
ஆட்சி முறையின் கீழ் கொண்டு வந்தால் சிவில் நிர்வாகம் செய்வதும் வரி
வசூலிப்பதும் கடினமான ஒன்றாகி விடும். ஆட்சியை இழந்தவர்கள் உள்நாட்டுக்
கலகம் செய்யாமல் தடுக்கவும், ஆட்சி புலத்தையும் தக்க வைத்துக் கொள்ள
பேரரசு கைக்கொள்ளும் நடைமுறை உத்தி இது.
அந்த வகையில்தான் ஏற்கனவே ஆட்சி செய்து கொண்டிருந்த # மறவர்களும்,
#கவுண்டர்களும், #வன்னியர்களும் பாளையக்காரர்களாயினர்.
ஆங்கிலேய ஆட்சியில் இருந்த சுதேச சமஸ்தானங்களையும் இப்படித்தான் புரிந்து
கொள்ள முடியும்.. எனவே மறவர்கள் காட்டிக் கொடுத்துப் பாளையங்கள்
பெற்றார்கள் என்பது ஆதாரமில்லாத கற்பனை .
# இரா .மருதுபாண்டியன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக