வெள்ளி, 6 அக்டோபர், 2017

வணிகம் நிர்வாகம் செய்ய மென்பொருள் தமிழர் நிறுவனம் ஜோஹோ சாதனை விகடன்


`எதுவும் தெரியாமல், பணமும் இல்லாமல்' சாஃப்ட்வேர் துறையில் தொழில்
தொடங்கி, மைக்ரோசாஃப்ட் போன்ற பெரிய நிறுவனங்களுக்கே கடும்போட்டியாக
உயர்ந்து நிற்கிறார் `ஜோஹோ' எனும் நிறுவனத்தை உருவாக்கிய சென்னையைச்
சேர்ந்த தமிழர் ஸ்ரீதர் வேம்பு.
Advertisement
ஸ்ரீதர் வேம்பு, எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங் துறையில் பி.ஹெச்.டி
முடித்தவர். சென்னை ஐ.ஐ.டி-யில் இசிஇ, பிரின்ஸன் பல்கலைக் கழகத்தில்
எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயரிங்கில் பி.ஹெச்.டி முடித்த பிறகு குவால்காம்
நிறுவனத்தில் 2 வருடங்கள் பணிபுரிந்தார். அதன் பிறகு இந்தியாவில் ஏதாவது
தொடங்க வேண்டும் என்று முடிவு செய்து தொழில்முனைவு வாழ்க்கையை 1995-ம்
ஆண்டு ஆரம்பித்தார். தற்போது உலகின் முன்னணி நிறுவனங்களுக்குச் சவால்
அளிக்கும் நிறுவனமாக உருவாகி இருக்கிறது ஜோஹோ.
இப்போது இந்த நிறுவனத்தை பற்றி பரவலாக தெரியாதவர்கள்கூட ஜோஹோ-வை பற்றித்
தெரிந்துகொள்ள ஒரு விளம்பரமாக அமைந்துவிட்டது ஜி.எஸ்.டி. ஏனெனில்
வணிகர்கள் எளிதாகவும், எளிமையாகவும் கணக்கிட உதவும் வகையில் ஜோஹோ
ஃபினான்ஸ் பிளஸ் எல்லாத் தளங்களிலும் இயங்கும் வகையில் ஒரு டூலை
அறிமுகப்படுத்தியது. இந்த டூலைப் பயன்படுத்தி அனைத்துத் துறை
சார்ந்தவர்களும், தங்களது வணிகத்தை எளிதாக நிர்வகிக்க முடியும்
என்பதுதான் இதன் சிறப்பு. இது முழுமையாக இணையதளத்தில் இயங்கும்.
ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம். joho.com என்ற இணையதளத்தின் மூலம்
2,499 ரூபாய் முதல் ஜோஹோ புக்ஸ் ஜிஎஸ்டி செயலி சேவையினைப் பயன்படுத்தி
வர்த்தகம் செய்யலாம்.
Advertisement
இந்த நிலையில் தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான செயலிகளை ஒன்றாக இணைத்து
`ஜோஹோ ஒன்' (Zoho One) எனும் புதிய இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு `ஜோஹோ ஒன்'னை
அறிமுகப்படுத்திப் பேசுகையில், `எங்களுடைய நிறுவனத்தைப் பொறுத்தவரை
முக்கியமான சந்தையாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து இருக்கிறது. இப்போது
இந்தியா முதல் ஐந்து இடங்களில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை மிகவும்
வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா இரண்டாவது
இடத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ஜோஹோ நிறுவனத்துக்கு டேட்டா
சென்டர் ஏற்கெனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ளது. இப்போது, இந்த
ஆண்டு இந்தியாவில் இரண்டு இடங்களில் டேட்டா சென்டர்களை அமைக்கத்
திட்டமிட்டுள்ளோம். ஒன்று நிச்சயம் சென்னையில் அமைக்க இருக்கிறோம்.
மற்றொன்று அநேகமாக மும்பையில் நிறுவ அதிக வாய்ப்பு உள்ளது.
ஜோஹோ நிறுவனத்தை மேலும் விரிவுபடுத்தி வருகிறோம். இந்த விரிவாக்கமானது
மெட்ரோ நகரங்களில் அமைத்திடாமல் இரண்டாம் தர மற்றும் மூன்றாம் தர
நகரங்களில் ஜோஹோ நிறுவனத்தை விரிவுபடுத்த உள்ளோம். இனி வரும் காலங்களில்
இ-கவர்னன்ஸ் போல ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்புகள் மத்திய மற்றும் மாநில
அரசுகள் பயன்படுத்தும் வகையில் உருவாக்கிட திட்டமிட்டு வருகிறோம்.
இப்போது ஜோஹோ நிறுவனத்தால் `ஜோஹோ ஒன்' என்னும் இயங்குதளம்
அறிமுகப்படுத்துகிறோம். ஜோஹோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த
இயங்குதளத்தில் 38க்கும் அதிகமான செயலிகளையும் தொழில் நிறுவனங்கள்
ஒன்றாகப் பயன்படுத்த முடியும். கடந்த 3 மாதத்தில் ஜோஹோ ஒன்-யை
அறிமுகப்படுத்துவதற்கு முன்பே 350-க்கும் மேற்பட்ட பல தொழில் நிறுவனங்கள்
ஜோஹோ ஒன்-யை பயன்படுத்த அதிகளவில் விருப்பம் தெரிவித்திருக்கின்றன. இந்த
இயங்குதளத்தை தொழில்நிறுவனங்கள் மட்டுமின்றி தனிநபர்களும் தங்களுடைய
தொழிலுக்கு பயன்படுத்தலாம். இதற்கான கட்டணமாக பணியாளர் ஒருவருக்கு மாதம்
1,000 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கான கட்டணம்
அமெரிக்காவில் 30 டாலர், இங்கிலாந்தில் 30 பவுண்டு என நிர்ணயம்
செய்யப்பட்டிருக்கிறது" என்றார் அவர். சோ.கார்த்திகேயன்
ஆ.முத்துக்குமார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக