Gopal Krish
நாகம்மையை தாசி என்று சொன்ன ஈ.வே.ரா!
இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா? தன் மனைவி கோயிலுக்குச் செல்வதைத்
தடுக்க ஈ.வே. ராமசாமி நாயக்கர் தன் மனைவி நாகம்மையாரையே, ”தாசி” என்று
தன் நண்பர்களிடம் சொன்னதுதான். அந்த வேடிக்கையையும் சாமி சிதம்பரனாரே
சொல்கிறார்:-
நாகம்மாள் விழாக்காலங்களில் எப்பொழுதாவது கோயிலுக்குச் செல்வதுண்டு.
இவ்வழக்கத்தை நிறுத்த வேண்டும் என்பது ஈ.வே.ராவின் எண்ணம். இதற்காக செய்த
குறும்பு மிகவும் வேடிக்கையானது. ஒருநாள் ஏதோ திருவிழாவை முன்னிட்டு
நாகம்மையார் சில பெண்களுடன் கோயிலுக்குச் சென்றிருந்தார். இராமசாமியாரும்
தன் கூட்டாளிகள் சிலருடன் கோயிலுக்குச் சென்றார். தான் மைனர்கோலம்
பூண்டு, அம்மையார் தன்னை நன்றாகப் பார்க்க முடியாத ஒரு ஒதுக்கிடத்தில்
நின்றுகொண்டார். நாகம்மையாரைத் தன் கூட்டாளிகளுக்கு
க் காட்டி, ”இவள் யாரோ புதிய தாசி. நமது ஊருக்கு வந்திருக்கிறாள். இவளை
நம் வசமாக்க வேண்டும். நீங்கள் அவள் நோக்கத்தை அறிந்து கொள்ள வேண்டிய
முயற்சியைச் செய்யுங்கள்,” என்றார். அவர்களும் அம்மையார் நின்ற
இடத்திற்குச் சென்று அவரைப் பார்த்து ஏளனஞ் செய்யத் தொடங்கினார்.
நாகம்மையார் இக்கூட்டத்தின் செய்கையைப் பார்த்துவிட்டார். அவருக்குச்
செய்வது இன்னது என்று தோன்றவில்லை. கால்கள் வெலவெலத்துவிட்டன. உடம்பு
நடுநடுங்கியது. தாங்க முடியாத அச்சத்தால் நெஞ்சம் துடிதுடிக்கின்றது.
வியர்வையால் அப்படியே நனைந்து போய்விட்டார். ஆயினும் ஒருவாறு
சமாளித்துக்கொண்டு அந்தக் காலிகளிடமிருந்து தப்பி வீடுவந்து
சேர்ந்துவிட்டார்.
கோயில்களின் நிலைமையையும் தெரிந்து கொண்டார். மறுநாளே கோயிலில் நடந்த
நிகழ்ச்சி தன் கணவரின் திருவிளையாடல்தான் என்று உணர்ந்துகொண்டார்.
(நூல்: தமிழர் தலைவர்)
இந்தச் சம்பவத்தை சற்று பகுத்தறிவோடு ஆராய்ந்து பாருங்கள். தன் மனைவி
கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க ஈ வே. ராமசாமி நாயக்கர் என்ன செய்திருக்க
வேண்டும்?
கடவுள் இல்லை என்ற தன் நாத்திகவாதத்தைக் கூறி, புரியவைத்து தன் மனைவி
கோயிலுக்குச் செல்வதைத் தடுத்திருக்க வேண்டும். அல்லது நாகம்மையாருக்குப்
புரிகிறவரை காத்திருந்து, புரிந்தபின் கோயிலுக்குச் செல்வதைத்
தடுத்திருக்க வேண்டும். ஆனால் இதையெல்லாம் விட்டுவிட்டு தன் மனைவி
கோயிலுக்குச் செல்வதைத் தடுக்க பெண்பித்தர்களான தன் கூட்டாளிகளிடம் தன்
மனைவியையே ”தாசி” என்று ஈ.வே. ராமசாமி நாயக்கர் சொல்லியிருக்கிறார்
எனும்போது ஈ.வே. ராமசாமி நாயக்கரை, ‘‘பெரியார்’‘ என்று அழைப்பது எத்தனைக்
காவாலித்தனம்!.
10 மணிநேரம் · பொது
பெண்ணுரிமை பெண்ணடிமை பெண்கள் ஈ.வே.ரா ஈ.வே.ராமசாமி நாகம்மை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக