திங்கள், 9 அக்டோபர், 2017

குளச்சல் போர் கட்டுக்கதை மார்த்தாண்டவர்மா திருவிதாங்கூர்

ஸ்டாலின் பெலிக்ஸ்
பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் திருவாங்கூரை படையெடுக்கும்
எண்ணத்துடன் டச்சு கப்பல் ஒன்று குளச்சல் நோக்கி வந்து கொண்டு இருந்தது.
ஒற்றர்கள் வழி தகவலை அறிந்த திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா, தனது
தளபதியை அழைத்து படை திரட்ட சொல்கிறார்.
திருவாங்கூர் படையில் இருந்த மீனவ வீரர்களும், உள்நாட்டின் களரி
ஆசான்களும் குளச்சலில் அணி வகுக்கிறார்கள். உள்ளூரில் வளர்ந்த நீண்ட பனை
மரங்கள் வெட்டப்பட்டு குளச்சல் கடல் பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. பனம்
தடிகள், பீரங்கிகள் போல நிறுத்தப்பட்டுகின்றன.
குளச்சலை நெருங்கும் டச்சுப்படை, கடற்கரையில் இருப்பது பனை தடிகள் என
அறியாமல் திகைத்து போய் கப்பலை நிறுத்தி நங்கூரம் இடுகிறார்கள்.
சூழ்நிலையை புரிந்துக்கொண்ட மீனவ அணி, கடலில் முங்கி போய், கப்பலில்
ஓட்டை இடுகிறார்கள். கப்பலில் தண்ணீர் ஏறி கப்பல் சரிய, உள்ளூர் ஆசான்கள்
படகில் வந்து டச்சு வீரர்களுடன் சண்டையிட்டு, வீழ்த்தி தளபதி டெலனாயை
சிறை பிடிக்கிறார்கள்.. இந்த சண்டைக்கு தலைமை தாங்கிய XXXXXXX அரசரின்
கைகளால் பட்டையம் பெறுகிறார்....
.......................
கேட்க்கும் போதே சிலிர்ப்பாக இருக்கிறது இல்லையா? சுயசாதி பெருமையை
நிலைநிறுத்த, பொய்யும் புரட்டும் சேர்த்து இன்றைய வரலாறுகள் இப்பிடி தான்
எழுதப்பட்டுக்கொண்டு இருக்கிறன.
உண்மையில் "குளச்சல் போர்" என்று ஒன்று கடலில் நடக்கவே இல்லை. டச்சு
வீரர்கள் சாவகாசமாக இறங்கி அரண் அமைத்து போர் தொடுத்தார்கள். இன்று
"முதல் சுதந்திர போர்" என # சிலர் # வருணிக்கும் இந்த போரில், ஐரோப்பிய
வீரர்களும் திருவாங்கூர் படையில் இருந்தார்கள் என்பது ஒரு வேடிக்கையான
வரலாறு.
.......
நான் சிறுவனாக இருந்த போது, இந்த கதையில் இன்னொரு கிளை கதையும்
சொல்லப்பட்டு வந்தது. 'மார்த்தாண்டவர்மா மந்திரவாதிகளை வைத்து மந்திரம்
செய்து, வண்டுகளை பறக்க செய்து, அது டச்சு படைகளை தாக்கி அவர்களை நிலை
குலைய வைத்தது' என அந்த கதை நீளும்..
இந்த நவீன காலத்தில் மந்திரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், அந்த
கதை பகுதியை தறித்து விட்டு இன்று "ஆனந்தமாய்" குளச்சல் போர் குறித்து
இன்னொரு கதையை பரப்பி வருகிறார்கள்.. பாவமாய் இருக்கிறது.
5 மணிநேரம் · Bad Rappenau, Baden-Württemberg, Germany ·

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக