திங்கள், 9 அக்டோபர், 2017

ஹிந்தியா ராணுவம் பின்னடைவு பின்தங்கல் படை இந்தியா

Nirranj Prabhu
கடந்த மூன்றாண்டுகளில் பாதுகாப்புத் துறையில் one rank one pensionஐத்
தவிர வேறெந்த அமைப்பு ரீதியான மாற்றமும் நடைபெறவில்லை. முப்படைகளை
போர்க்காலங்களில் ஒருங்கிணைத்து வழிநடத்தும் முப்படை வழிகாட்டு அமைப்பை
ஏற்படுத்துவது குறித்த எந்தவித முன்னகர்வும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
ஆயுத மற்றும் தளவாட ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியும் சரிவினைச் சந்தித்திருக்கின்றன.
ஐமுகூ ஆட்சியில் கடற்படை இனிமேல் கப்பல்களை இறக்குமதி செய்வதில்லை என்ற
கொள்கையை அறிவித்தது. ரசியாவிலிருந்து வாங்கப்பட்ட விமானந்தாங்கியான
விக்கிரமாதித்யாதான் இறக்குமதி செய்யப்படும் கடைசிக் கப்பல் என்று
சொல்லிக்கொண்டனர். ஆனால் தற்போது மீண்டும் ரசியாவிடமிருந்து சில
கப்பல்களை வாங்கப்போவதாக செய்திகள் வருகின்றன. ஏற்கனவே ரசியாவில் பாதி
கட்டிமுடிக்கப்ப
ட்டு உக்கிரைன் பிரச்சினையால் முழுமையடையாமல் இருக்கும் கப்பல்கள்
சிலவற்றை அம்பானி இந்தியாவில் வைத்துக் கட்டிமுடிப்பார் என்கின்றனர்.
உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட தாக்குதல் ஜெட் விமானமான தேஜசை வாங்க
விமானப்படை மறுக்கும் நிலையில் அரசு கையாலாகாமல் வேடிக்கைப் பார்க்கிறது.
பல்லாண்டுகளாக பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி உருவாக்கப்பட்ட தேஜசை
வாங்காமல் அதை ஒத்த (சற்று நவீனமான) ஸ்வீடன் நாட்டின் கிரிப்பன்
விமானத்தை இந்தியாவில் தயாரிக்க தனியார் நிறுவனங்கள் ஒப்பந்தம் போட அரசு
அனுமதிப்பது வேடிக்கையாக இருக்கிறது.
ராணுவ மற்றும் சிறப்புப் படைகளுக்கு இந்திந்த தற்காப்பு கவசங்கள் மற்றும்
பொருட்கள் வாங்கவேண்டும் என்று 2008 மும்பைத்தாக்குதலுக்குப் பின்
அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் மீது முந்தைய அரசு மெத்தனமாக
செயல்படுகிறது என்று தேர்தலின்போது குற்றச்சாட்டு வைத்தவர்கள் இப்போது
வரை எதையும் செய்யவில்லை என்பதும் வியப்பாகிறது!!!
மேலும் சரஸ்வத் பிரைட் (saraswat pride) என்று ராஜ்தீப் சர்தேசாய் பீலா
விட்ட மனோகர் பரிக்கராலும் எதையும் பெரிதாகச் சாதிக்கமுடியவில்லை. அதே
சரஸ்வத் பெருமிதமான ரயில்வேத்துறையின் அமைச்சரான சுரேஷ் பிரபுவும் ரயில்
விபத்துகள் அதிகரித்ததைத்தவிர எதையும் சாதிக்கவில்லை என்பதும்
குறிப்பிடத்தக்கது.
ராணுவம் தொடர்பாக மோதி முன்னின்று கொடியசைத்து துவக்கிவைத்த எந்தவொரு
திட்டமும் அவரது ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டதல்ல. எல்லாம் ஐமுகூ அரசு
ஆரம்பித்து இவர்கள் ஆட்சிக்காலத்தில் முடிக்கப்பட்டவை. விந்தை
என்னவென்றால் இவர்கள் 2019ல் தோற்று வேறொரு அரசு பதவியேற்கும் போது
அவர்கள் கொடியசைத்துத் துவக்கி வைக்க மிகச்சில திட்டங்களே இருக்கும்.
காரணம் மோதி அரசு தற்போது வரை மிகச்சிலவற்றையே துவக்கியிருக்கிறது.
மேலும் எதினிகளோடு ஒப்பிடும்போது முப்படைகளும் கடுமையான தொழில்நுட்ப
மற்றும் தளவாட இடைவெளியைச் சந்திக்கின்றன. சீனா அடுத்த தலைமுறை
விமானங்களை உள்நாட்டிலேயே உருவாக்கி படையில் இணைக்க ஆரம்பித்துவிட்டது.
நமது படைகளோடு அறுபதுகளில் எழுபதுகளில் வாங்கப்பட்ட விமானங்களை வைத்து
தள்ளாடிக் கொண்டிருக்கிறது. சீனக்கடற்படையும் வருடத்துக்குப் பல அதிநவீன
போர்க்கப்பல்களை இணைத்துக்கொண்டிருக்க நமது கடற்படையின் முன்னணி
போர்க்கப்பல்களில் விமான மற்றும் ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் இல்லாமல்
தலைக்கவசம் அணியாத வண்டியோட்டிகளாக சுற்றிக்கொண்டிருக்கின்றன.
ஆக அரசின் மெத்தனப்போக்கின
ை எல்லாரும் விமர்சிக்க ஆரம்பிக்கும்போது பலியாடாக முன்னிறுத்தவே புதிய
பாதுகாப்புத்துறை அமைச்சரை அறிவித்திருக்கின்றனர் என்று நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக