வெள்ளி, 6 அக்டோபர், 2017

டெல்டா அழிக்கப்பட்டு ஆந்திரா வுக்கு மின்சாரம் தொழிற்சாலை பாதை அமைக்கப்படவுள்ளது

பாரதிசெல்வன் இலரா
காவிரிப் படுகையைக் காப்போம்!
வேண்டாம்.. வேண்டாம்!நாகை மாவட்டத்தில்அனல்மின் நிலையம் வேண்டவே வேண்டாம்!!
=======================
சேலம் மாவட்ட மக்கள் தங்கள் மண்ணைக் காப்பதில் விழிப்பாயிருக்கின்றனர்..நாகப்ப
ட்டினம் மாவட்ட மக்களே விழித்தெழுங்கள்.
==============================
===========
நமது மண்ணையும், நீரையும், காற்றையும் மாசாக்கி மின்சாரம் உற்பத்தி
செய்து, ஆந்திராவுக்கு அனுப்பி , தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள்
கோடிக்கணக்கில் பணம் ஈட்ட, நாகப்பட்டினத்தில் இருந்து ஆந்திரா மாநிலம்
மகேந்திரபுரி வரை 756 கிவாட் கொண்ட உயர் மின் அழுத்த கேபிள் அமைக்கப்பட
உள்ளது.
==============================
================
இன்றைய தமிழ் இந்துவில் வந்துள்ள செய்தியின் சாரம் இதோ! தமிழகத்தில்
நாகப்பட்டினத்தில் இருந்து ஆந்திரா மாநிலம் மகேந்திரபுரி வரை 756 கிவாட்
கொண்ட உயர் மின் அழுத்த கேபிள் அமைக்கப்படும் பணிக்காக சேலம்
மாவட்டத்தில் ஒரு இலட்சம் பனை மரம்,ஐம்பதாயிரம் தென்னை மரம் வெட்டப்பட
உள்ளது.
இந்த திட்டத்தை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் மாற்றுப் பாதையில்
கொண்டுன் செல்லவேண்டும் என்றும், இந்த பணிக்காக வெட்டப்படும் பனை, தென்னை
மரங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என சேலம் மாவட்ட விவசாயிகள்
வலியுறுத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக