வெள்ளி, 6 அக்டோபர், 2017

பட்டா சிட்டா வழக்கு போட்டு முடிவு சட்டம் நிலம் சொத்து

2015 ல் ஒரு குடும்பத்தில் நடந்த தான செட்டில்மென்ட் நில பெயர்
மாற்றத்திற்கு செல்லும் போது, அந்த நிலத்தின் கணினி சிட்டா எடுக்க
இயலவில்லை. இணையதளத்திலும் இல்லை. வட்டாட்சியர் அலுவலகத்தில் பணம் கட்டி
முயற்சித்தாலும் சிட்டா நகல கிடைக்காமல் போகின்றது. இது குறித்து யாரை
தொடர்பு கொண்டாலும் சரியான தகவல் கிடைக்கவில்லை. இது குறித்து நான் த.அ.
சட்டத்தில் கேட்டால், அந்த நிலம் நத்தத்தில் சேர்ந்து விட்டதாகவும்,
வி.எ.ஓ விடம் சான்றிதழ் பெற்றுக்கொள்ள அறிவித்து பதில் வருகின்றது. அதை
அடுத்து, வி.எ.ஓ விடம் கேட்டால், தாசில்தார் ஆபிசில் கேட்க சொல்வதும்,
அங்கே கேட்டால் இங்கே கேட்க சொல்வதுமாக நாட்கள் செல்கின்றது. இந்நிலையில்
பெயர் மாற்ற விண்ணப்பம் அளித்தால், கணினி சிட்டா இருந்தால் தான் பெயர்
மாற்ற விண்ணப்பம் பெற இயலும் என அலைய விட, இந்த வழக்கே ஆணையத்தின் மேல்
முறையீட்டுக்கு நேற்று வந்தது.
தகவல் ஆணய விசாரணையில், என் தரப்பு கோரிக்கையினை கேட்ட ஆணையர்,
மனுதாரராகிய என்னை அலைய செய்தமைக்கு பொ.த.அ. ஐ கடுமையாக கண்டித்தார்.
தண்டனை அளிக்க வேண்டும் என.ஆணையரிடம் நான் அழுத்தமான வாதமாக வைத்தேன்.
அதற்கு, உடனே, தாசில்தார் என்னிடம், "நிங்கள் தாலுகா ஆபீஸ் வாருங்கள்
சார், உங்கள் நில பிரச்சனையினை நானே முடித்து தருகின்றேன்" என
உத்திரவாதம் அளித்தார். தண்டனைதான் தீர்வு என்பதல்ல எனது வாதம்.
பிரச்சனைக்கான தீர்வே முக்கியம். இரண்டும் அளிக்க வேண்டும் என்பது நடை
முறை யதார்த்ததை மீறும் செயல் என்பதால் இதனை நான் ஏற்றுக்கொள்வதாக
சொன்னதை அடுத்து சமரச முடிவில், வழக்கை முடிப்பதாக தீர்பளிக்கப்பட்டது.
பொ.த.அ, க்கு தண்டனை பெற வைக்க எனக்கு நிறைய வாய்ப்பிருந்தது. ஆனால் இந்த
வழக்கு எனது நிலப்பிரச்சனைக்
கானதல்ல. எனது சகோதரனின் நிலம். அவரின் இந்த நில பிரச்சனைக்கு சுமூகமான
தீர்விற்கு, எனது இந்த தண்டனைக்கான அழுத்தம் ஒரு தடையாக இருந்து
விடக்கூடாது என்ற எனது யதார்த்த நிலையில், நான் தண்டனை என்ற
அழுத்தத்திலிருந்து, பிரச்சனைக்கான தீர்வுக்கு சமரசம் ஆகினேன். இது
எனக்கான சுயநலம் இல்லை. எனது சகோதரனின் நீண்ட நாள் பிரச்சனையின்
தீர்வுக்கான எனது யதார்த்த முடிவு. எனது இந்த முடிவு உங்களுக்கு
ஏற்புடையதாக இல்லாமலிருந்தால் வருந்துகின்றேன் தோழர்களே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக