மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார்அவையம்
10-ஆம் பதிவு
தொடர் பதிவு எண் - 44 நாள்: 11.08.2017
தொடர் நாள்: 223
------------------------------ ------------------------------ ------------------------------ ------------------------------ ---------------
பெருந்தச்சு நிழல் நாட்கா ட்டியின்படி, இவ்வாண்டின் ‘8’- வது
முழுநிலவு தோற்றது. 08.08.2017-ல் நாள்முதிர்வு பெற வேண்டிய முழுநிலவு
07.08.2017 அன்று முந்தித் தோன்றியதுடன் அரவு தீண்டப் பெற்றது.
சரியாக வளர்பிறையின் 14-ஆம் நாளில் இது நிகழ்ந்து இருக்கிறது.
அன்றிரவு 10.45 முதல் 2½ மணி நேரமாகக் கால் வட்ட அளவில் நிழல் கவ்வி
விலகியது. நள்ளிரவை முழுநிலவுக்குரிய அறிகுறிகளுடன் கடந்தது.
மொத்தத்தில் இவ்வாண்டின் மூன்றாவது தோல்வியாக அந்த நாள் அமைந்து
விட்டது. அதனால் ஆண்டு நாட்களின் எண்ணிக்கையில் மூன்று நாட்கள் குறை
விழுந்திருக்கிறது.
ஆவணி மாத முழுநிலவு:
இவ்வாண்டின் ‘8’-வது முழுநிலவாகிய ஆவணிமாத முழுநிலவு தோல்வியுற்றிருக்கிறது.
1.
தைப்பூசம்
12.01.2017
வெற்றி
 √
2.
மாசி மகம்
11.02.2017
வெற்றி
 √
3.
பங்குனி உத்தரம்
12.03.2017
தோல்வி
 x
4.
சித்திரைச் சித்திரை
10.04.2017
தோல்வி
 x
5.
வைகாசி விசாகம்
10.052017
வெற்றி
 √
6.
ஆனிக் கேட்டை
09.06.2017
வெற்றி
 √
7.
ஆடிப் பூராடம்
09.07.2017
வெற்றி
 √
8.
ஆவணித் திருவோணம்
07.08.2017
தோல்வி
 x
கொண்டாட்டத்திற்கு உரிய முழுநிலவுகள்:
வளர்பிறையின் நிறைவாக முறைமுற்றித் தோன்றும் முழுநிலவுகள் பருவச்
சுழற்சியில் மிகவும் போற்றத் தக்கதொரு நாளாகக் கணக்கிடப் பட்டிருக்கும்
பழந்தமிழ்ப் பதிவுகள் பல புதிய புரிதல்களைத் தருகின்றன.
மணநாள் ஆகவும், கருவணிகாலம் ஆகவும் இயற்கை தகவமைத்துத் தரும்
முழுநிலவுகள், அனைத்து உயிர்களுக்கும் உவப்பான நாளாகப் புரிந்து கொள்ளப்
பட்டிருக்கிறது.
திருமணம் பெரும்பாலும் முழுநிலவின் முன்னிரவில் நடந்ததும்,
குறிப்பாகத் தைப்பூச முழுநிலவே வெற்றிவாகை இலையில் தொகுத்த மாலையை
மணைப்பெண்ணுக்குச் சூட்டிய பெருமையுடையதாகவும் செய்திகள் உள்ளன. (அகம்
136)
ஆண்டின் 360 நாட்களும் பருவம் பிறழாமல் முழுநிலவுகள் வெற்றி
பெற்றால் அத்தகைய ஆண்டுகளில் மட்டும் சுடர்வீ வாகை எனும்‘துஞ்சுமரம்’
தைப்பூச முழுநிலவில் இரவில் கண் விழிப்பதும், அந்த இலையில் தொடுத்த மாலை
அரசனுக்கும், அரசுக்கும், மணமகனுக்கும் பெருமை சேர்த்த்தில் வியப்பு
ஒன்றும் இல்லை.
மற்றபடி ஒவ்வொரு திங்களிலும் வெற்றிபெரும் ஒவ்வொரு முழுநிலவும்
மக்களால் பெருவிழாவாகக் கொண்டாடப் பட்டுள்ளன என்பதும், தோல்வி ஏற்படின்
கொண்டாட்டம் தவிர்க்கப் பட்டது என்பதும் கருதத் தக்கது.
கோவலனும் மாதவியும் பிரிய நேரிட்ட நாளில் முழுநிலவில் பிழை
நேர்ந்தது. அப்போது 15-ஆம் நாளில் முழுநிலவு நிறைவாக வரவில்லை. 16-ஆம்
நாளில் வந்தது என்ற செய்தி வியக்க வைக்கிறது. (சிலம்பு வேனில்காதை-59).
இன்றைய நாளில் முழுநிலவு முந்துகிறது. அன்று முழுநிலவு பிந்தியிருக்கிறது.
மூன்றாம் பிறை நாளில் மெல்லிய பிறைக்கீற்றுக் கூட மேற்கு வானில்
தோன்றவில்லையே என்று ஏங்கினர் அன்று.
மறைநிலவின் மறுநாளிலும் இரண்டாம் நாளிலும் துலக்கமாகவே பிறை தோன்றி
மொத்தத்தில் 14-நாட்களில் உதிர்ந்து விடுகிறது என்பதனை அறியாமல்
இருக்கும் நிலை இருக்கிறது இன்று.
கடந்த இரண்டு திங்களாகவே வளர்பிறையின் இரண்டாம் நாளில் பிறை
தோன்றியது. கடந்த ஆண்டுகளில் மறைநிலவின் மறுநாளில் பிறை
தோன்றியிருக்கிறது. அவ்வாறு தோன்றும் போதெல்லாம் முழுநிலவு தோற்றுப்போவது
வழக்கமாக நிகழ்ந்திருக்கிறது.
அரவு தீண்டுதல், அரவு அணைத்தல்:
அரவு என்ற சொல் காதுக்குக் கேட்காத நுண்ணிய ஒலியைக் குறிப்பது போல்
பாம்பையும் குறிக்கிறது. நிலவை அரவு தீண்டுகிறது என்றும் அவ்வாறு தீண்ட
விடாமல் அரசன் நேமியினால் அரவு அணைக்கிறான் என்றும் செய்திகள் உள்ளன.
பாடு இமிழ் பரப்பு அகத்து
அரவு அணை அசைஇய ஆடுகொள் நேமியான் – (முல்லைக்கலி – 105)
கோத்தொழிலின் ஒரு உத்தியாக நேமியைக் கொண்டு அரவு அணைத்த செய்தியைத்
திரித்து, பாம்பின் மீது படுத்துக்கொண்டு கையில் ஒரு சக்கரத்தை வைத்துக்
கொண்டு அரிதுயில் கொள்ளும் பொம்மைக் கோலம் தமிழ்ப் பகைவர்களின் தொன்மப்
புனைவு என்று புரிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.
தொழிலுக்கு விடுமுறை நாள்:
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் பரதவர் முழுநிலவு நாட்களில்
ஓய்வு எடுத்தனர் என்பது கருதத்தக்கது.
இன்றைய நிலை போல அக்காலத்திலும் கடல் ஓரங்கள் என்றால் ஏழை மீனவர்கள்
மட்டுமே வாழ்ந்தனர் என்ற நிலை இருந்தது இல்லை. பெரிய மாடங்களும்,
மாளிகைகளும் கடல் வணிகம் செழித்தோங்கிய காட்சிகளும் அங்கே விரிகின்றன.
புன்தலை இரும் பரதவர்
பைந்தழை மாமகளிரோடு
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது
உவவு மடிந்து உண்டு ஆடியும்...............
........................ .......
பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்
வெண்நிலவின் பயன் துய்த்தும்....(பட்டினப்பாலை 90-114)
காதலர் குறித்த நாள்:
ஓண் சுடர் உருப்பு ஒளி மழுங்க
சினம் தணிந்து சென்ற ஞாயிறு நன்பகல் கொண்டு
குடமுதல் குன்றம் சேர
குணமுதல் நாள் முதிர் மதியம் தோன்றி
நிலா விரிபு பகல் உரு உற்ற இரவு வர
நயந்தோர் காதல் இன்துணை புணர்மார் (மதுரைக்காஞ்சி 545- 550)
பொது வெளியில் மணற்பரப்பில் முழுநிலவின் இரவைக் கழித்தமையும், தனிமை
கிட்டாத சூழலில் துணிகளால் திரையிட்ட ‘கறை வீடு’ அமைத்தனர் என்பதும்
நாளின் சிறப்பைப் புரிய வைப்பதாக இருக்கிறது.
நாணின கொல் தோ ழி?
நாணின கொல் தோ ழி?
இரவு எலாம் நல் தோழி நாணின – என்பவை
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்
ஆனாப் பரிய அலவன் அனை புகூஉம்..
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்பத் தோழி
என் மேனி சிதைத்தான் துறை – கலித்தொகை (131-15-120)
பருவம் பொருந்த மணம் புரிந்து கொள்வதும், தோள் தோய் காதலர்
கூடுவதும்,வாய்ப்பு அற்றோர், உடன் போக்கில் ஊரை விட்டு ஓடுவதும்
முழுநிலவின் இரவில் நிகழ்ந்துள்ள படியால், கோள் ஒழுக்கம் உடைய திருநுதல்
மகளிரும், கோள்வலிமையுடைய ஆண் பாலரும் அறிந்து இருக்க வேண்டிய நாள்
முறைமை என்பது தமிழ் மரபில் முழுநிலவு பற்றியது ஆகும்.
இனவரைவு:
தமிழர்களின் தனித்த இயல்புகளில் சில, தமிழர் அல்லாதவர்களிடம் இல்லை
என்பதும்,அவர்கள் பயிலவில்லை என்பதும், அத்தகைய அறிவை ஊட்டும் மொழி
அவர்களிடம் இல்லை என்பதும் நோக்கத்தக்கது.
பெண் நீர்மை – நயம் தலை திரியாது:
1. எண்ணிய நாள் அகம் வருதல் பெண்ணியல்...(ஐங்குறுநூறு 466)
2. தொழுது அக விளங்கும் யாண்டேய் ....(தஞ்சைப் பெரிய கோயில்
மெய்கீர்த்தி 313-Vol.II)
3. நாள் இடைப்படாமை வருவர் நமர் எனப்
பயம் தரு கொள்கையின் நயம் தலை திரியாது
நின்வாய் இன்மொழி நன்வாயாக
வருவர் ஆயினோ நன்றே(அகநானூறு – 333)
பெண்மைப் பண்புடைய நிலம், ஆண்மைப் பண்புடைய தலைமை ஒன்றின் ஆளுமையை எதிர்
பார்த்துச் சுழன்று வருகின்றது. அந்த எதிர் பார்ப்பை புரிந்து கொள்ளும்
திறன் அந்த ஆளுமைக்குத் தேவைப்படுகிறது. அதை அறிந்திருக்கும் அரசனே
பருவச் சுழற்சியின் முறைமைக்குப் பொறுப்பேற்கிறான். பிழை நேர்ந்தால்
திருத்தவும் முயற்சி செய்கிறான் என்று புரிந்து கொள்ளும்படியான
பழந்தமிழ்ப் பதிவுகள் பரவலாக உள்ளன.
(திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தமக்கே உரிமை பூண்டமை மனக்கொள –
தஞ்சை மெய்க்கீர்த்தி)
பலரும் நன்கு அறிந்த தொல்காப்பிய நூற்பா ஒன்றினை இச்செய்தியுடன்
ஒப்பிட்டு மீளாய்வு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அது தமிழ் மொழியின்
பெண்மைப் பண்பு நலனைப் பேணிக் காக்கும் பொறுப்பை உணர்த்துவதாக
இருக்கிறது.
1. தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப - (தொல்காப்பியம் – 1071)
2. எண் அரும் பாசறைப் பெண்ணொடும் புணரார் - (தொல்காப்பியம் – 1128)
3. புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும் - (தொல்காப்பியம் – 1129)
4. புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருகி - (நாலடியார் – 37-8)
5. கோடு ஏந்து அகல் அல்குல்
பெண்டிர் தம் பெண் நீர்மை
சேடியர் போலச் செயல் தேற்றார் – கூடிப்
புதுப் பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காப்பு
மதித்து இறப்பர் மற்றையர் (நாலடியார்– 36-4)
(மதித்து அல்லது மிதித்து?) இறப்பர் கடப்பர்
பிறநீர் மாக்கள் அல்லது புறநீர் மாக்கள் யார்? புறத்தோர் யார்?
புடைப் பெண்டிர் யார்? காப்பு மிதித்துத் தாண்டுவோர் யார்?
முழுநிலவு நாள் எது என்று தெரிய வேண்டிய தேவை இல்லாதவர்கள்
இருக்கிறார்களா? அவர்கள் தமிழர் அல்லாதவர்களா? இது தமிழ் இன வரைவுக்குப்
பங்களிப்புச் செய்யுமா? இவை உயர் ஆய்வுக்கு உரியவை.
செம்மாந்த அடுத்த தலைமுறையை ஒழுங்கு படுத்தத் தமிழ் நாட்காட்டியின்
இப்பகுதிக்கு இவ்வாறான அடிப்படைப் புரிதல் தேவையாக இருக்கிறது. தமிழ்
நாட்காட்டியின் தேவை இன்னதென்று பட்டியல் இடும் போது, அங்கே தமிழர்களின்
அகவாழ்வியற் கூறுகளே முகாமை பெறுகின்றன. அதனால் பழந்தமிழில் உள்ள அகச்
செய்திகள், அழுத்தமான சான்றுகளாகத் தென்படுகின்றன.
இவ்வாண்டில் இன்றைய நாள்:
தற்செயலாக ஆங்கில ஆண்டு 2017, பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி
தை முதல் நாளில், வளர்பிறை 4-ஆம் நாளில் தொடங்கி இருக்கிறது. இதுவரை 8
முழுநிலவுகள் கடந்து விட்டன. அவற்றுள் மூன்று முழுநிலவுகள் தோற்று
விட்டன. அதனால் ஆண்டு நாட்களில் 3 நாட்கள் குறைவு பட்டுள்ளன.
தமிழ் நாட்காட்டி என்பது தமிழர்கள் வரைவு செய்த பருவ ஒழுங்கு பற்றிய
வாய்ப்பாடு அதற்குக் கோட்பாட்டு அடிப்படை கண்டறியப்பட்டுள்ளது, அது ஆடு
கோட்பாடு அத்தகு அரிய நாட்காட்டியை ஆங்கில நாட்காட்டியுடன்
ஒப்பிட்டுத்தான் விளக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இன்னும் எஞ்சியுள்ள 4 முழுநிலவுகளைக் கணித்துக் காத்திருந்து
கணக்கு முடிக்கும் வேளையில் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய புரிதல் பரவலாகத்
தமிழ் இனத்தார்க்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
அடுத்த ஆண்டு முதல் ஆங்கில நாட்காட்டியின் படியான நாட்களைப்
பதிவுகளில் பக்கவாட்டில் குறிப்பிடாமல் மன்னன் இராசராசனைப் போல் தொடர்
நாட்களைக் குறிப்பிடும் வழக்கத்தை வசப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை
இருக்கிறது. அதற்கு ஆங்கில நாட்காட்டி இதுவரை ஏற்படுத்தியிருக்கிற மூளை
வடுவை நீக்கிக் கொள்ள வேண்டும்.
கனிந்து வரும் காலம்:
தமிழின் மேன்மையை, மாண்பை, தமிழர் மரபறிவின் ஊற்றத்தை, செயல்திறனை
உலகம் உவந்து வரவேற்கும் காலம் கனிந்து வருகிறது என்று தமிழின் பெயரால்
நம்பலாம். அதன் பயன் கொள்ளும் அடுத்த தலைமுறையைச் செதுக்கி எடுக்க
வேண்டிய பொறுப்பு அறநெஞ்சம் கொண்ட மாந்தர் அனைவருக்கும் பொதுவில் தேவையாக
இருக்கிறது. தமிழர்களுக்கு அது கடமையாக இருக்கிறது.
இது மரபு வழித் தமிழ்த் தேசி யத் தக்கார்அவையத்தின் வெளியீடு
___---ooo000OOO000ooo---___
10-ஆம் பதிவு
தொடர் பதிவு எண் - 44 நாள்: 11.08.2017
தொடர் நாள்: 223
------------------------------
பெருந்தச்சு நிழல் நாட்கா
முழுநிலவு தோற்றது. 08.08.2017-ல் நாள்முதிர்வு பெற வேண்டிய முழுநிலவு
07.08.2017 அன்று முந்தித் தோன்றியதுடன் அரவு தீண்டப் பெற்றது.
சரியாக வளர்பிறையின் 14-ஆம் நாளில் இது நிகழ்ந்து இருக்கிறது.
அன்றிரவு 10.45 முதல் 2½ மணி நேரமாகக் கால் வட்ட அளவில் நிழல் கவ்வி
விலகியது. நள்ளிரவை முழுநிலவுக்குரிய அறிகுறிகளுடன் கடந்தது.
மொத்தத்தில் இவ்வாண்டின் மூன்றாவது தோல்வியாக அந்த நாள் அமைந்து
விட்டது. அதனால் ஆண்டு நாட்களின் எண்ணிக்கையில் மூன்று நாட்கள் குறை
விழுந்திருக்கிறது.
ஆவணி மாத முழுநிலவு:
இவ்வாண்டின் ‘8’-வது முழுநிலவாகிய ஆவணிமாத முழுநிலவு தோல்வியுற்றிருக்கிறது.
1.
தைப்பூசம்
12.01.2017
வெற்றி
 √
2.
மாசி மகம்
11.02.2017
வெற்றி
 √
3.
பங்குனி உத்தரம்
12.03.2017
தோல்வி
 x
4.
சித்திரைச் சித்திரை
10.04.2017
தோல்வி
 x
5.
வைகாசி விசாகம்
10.052017
வெற்றி
 √
6.
ஆனிக் கேட்டை
09.06.2017
வெற்றி
 √
7.
ஆடிப் பூராடம்
09.07.2017
வெற்றி
 √
8.
ஆவணித் திருவோணம்
07.08.2017
தோல்வி
 x
கொண்டாட்டத்திற்கு உரிய முழுநிலவுகள்:
வளர்பிறையின் நிறைவாக முறைமுற்றித் தோன்றும் முழுநிலவுகள் பருவச்
சுழற்சியில் மிகவும் போற்றத் தக்கதொரு நாளாகக் கணக்கிடப் பட்டிருக்கும்
பழந்தமிழ்ப் பதிவுகள் பல புதிய புரிதல்களைத் தருகின்றன.
மணநாள் ஆகவும், கருவணிகாலம் ஆகவும் இயற்கை தகவமைத்துத் தரும்
முழுநிலவுகள், அனைத்து உயிர்களுக்கும் உவப்பான நாளாகப் புரிந்து கொள்ளப்
பட்டிருக்கிறது.
திருமணம் பெரும்பாலும் முழுநிலவின் முன்னிரவில் நடந்ததும்,
குறிப்பாகத் தைப்பூச முழுநிலவே வெற்றிவாகை இலையில் தொகுத்த மாலையை
மணைப்பெண்ணுக்குச் சூட்டிய பெருமையுடையதாகவும் செய்திகள் உள்ளன. (அகம்
136)
ஆண்டின் 360 நாட்களும் பருவம் பிறழாமல் முழுநிலவுகள் வெற்றி
பெற்றால் அத்தகைய ஆண்டுகளில் மட்டும் சுடர்வீ வாகை எனும்‘துஞ்சுமரம்’
தைப்பூச முழுநிலவில் இரவில் கண் விழிப்பதும், அந்த இலையில் தொடுத்த மாலை
அரசனுக்கும், அரசுக்கும்,
ஒன்றும் இல்லை.
மற்றபடி ஒவ்வொரு திங்களிலும் வெற்றிபெரும் ஒவ்வொரு முழுநிலவும்
மக்களால் பெருவிழாவாகக் கொண்டாடப் பட்டுள்ளன என்பதும், தோல்வி ஏற்படின்
கொண்டாட்டம் தவிர்க்கப் பட்டது என்பதும் கருதத் தக்கது.
கோவலனும் மாதவியும் பிரிய நேரிட்ட நாளில் முழுநிலவில் பிழை
நேர்ந்தது. அப்போது 15-ஆம் நாளில் முழுநிலவு நிறைவாக வரவில்லை. 16-ஆம்
நாளில் வந்தது என்ற செய்தி வியக்க வைக்கிறது. (சிலம்பு வேனில்காதை-59).
இன்றைய நாளில் முழுநிலவு முந்துகிறது. அன்று முழுநிலவு பிந்தியிருக்கிறது.
மூன்றாம் பிறை நாளில் மெல்லிய பிறைக்கீற்றுக் கூட மேற்கு வானில்
தோன்றவில்லையே என்று ஏங்கினர் அன்று.
மறைநிலவின் மறுநாளிலும் இரண்டாம் நாளிலும் துலக்கமாகவே பிறை தோன்றி
மொத்தத்தில் 14-நாட்களில் உதிர்ந்து விடுகிறது என்பதனை அறியாமல்
இருக்கும் நிலை இருக்கிறது இன்று.
கடந்த இரண்டு திங்களாகவே வளர்பிறையின் இரண்டாம் நாளில் பிறை
தோன்றியது. கடந்த ஆண்டுகளில் மறைநிலவின் மறுநாளில் பிறை
தோன்றியிருக்கிறது. அவ்வாறு தோன்றும் போதெல்லாம் முழுநிலவு தோற்றுப்போவது
வழக்கமாக நிகழ்ந்திருக்கிறது.
அரவு தீண்டுதல், அரவு அணைத்தல்:
அரவு என்ற சொல் காதுக்குக் கேட்காத நுண்ணிய ஒலியைக் குறிப்பது போல்
பாம்பையும் குறிக்கிறது. நிலவை அரவு தீண்டுகிறது என்றும் அவ்வாறு தீண்ட
விடாமல் அரசன் நேமியினால் அரவு அணைக்கிறான் என்றும் செய்திகள் உள்ளன.
பாடு இமிழ் பரப்பு அகத்து
அரவு அணை அசைஇய ஆடுகொள் நேமியான் – (முல்லைக்கலி – 105)
கோத்தொழிலின் ஒரு உத்தியாக நேமியைக் கொண்டு அரவு அணைத்த செய்தியைத்
திரித்து, பாம்பின் மீது படுத்துக்கொண்டு கையில் ஒரு சக்கரத்தை வைத்துக்
கொண்டு அரிதுயில் கொள்ளும் பொம்மைக் கோலம் தமிழ்ப் பகைவர்களின் தொன்மப்
புனைவு என்று புரிந்து கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.
தொழிலுக்கு விடுமுறை நாள்:
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லும் பரதவர் முழுநிலவு நாட்களில்
ஓய்வு எடுத்தனர் என்பது கருதத்தக்கது.
இன்றைய நிலை போல அக்காலத்திலும் கடல் ஓரங்கள் என்றால் ஏழை மீனவர்கள்
மட்டுமே வாழ்ந்தனர் என்ற நிலை இருந்தது இல்லை. பெரிய மாடங்களும்,
மாளிகைகளும் கடல் வணிகம் செழித்தோங்கிய காட்சிகளும் அங்கே விரிகின்றன.
புன்தலை இரும் பரதவர்
பைந்தழை மாமகளிரோடு
பாய் இரும் பனிக்கடல் வேட்டம் செல்லாது
உவவு மடிந்து உண்டு ஆடியும்...............
........................
பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும்
வெண்நிலவின் பயன் துய்த்தும்....(பட்டினப்பாலை
காதலர் குறித்த நாள்:
ஓண் சுடர் உருப்பு ஒளி மழுங்க
சினம் தணிந்து சென்ற ஞாயிறு நன்பகல் கொண்டு
குடமுதல் குன்றம் சேர
குணமுதல் நாள் முதிர் மதியம் தோன்றி
நிலா விரிபு பகல் உரு உற்ற இரவு வர
நயந்தோர் காதல் இன்துணை புணர்மார் (மதுரைக்காஞ்சி 545-
பொது வெளியில் மணற்பரப்பில் முழுநிலவின் இரவைக் கழித்தமையும், தனிமை
கிட்டாத சூழலில் துணிகளால் திரையிட்ட ‘கறை வீடு’ அமைத்தனர் என்பதும்
நாளின் சிறப்பைப் புரிய வைப்பதாக இருக்கிறது.
நாணின கொல் தோ
நாணின கொல் தோ
இரவு எலாம் நல்
வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல்
ஆனாப் பரிய அலவன் அனை புகூஉம்..
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்பத் தோழி
என் மேனி சிதைத்தான் துறை – கலித்தொகை (131-15-120)
பருவம் பொருந்த மணம் புரிந்து கொள்வதும், தோள் தோய் காதலர்
கூடுவதும்,வாய்ப்பு அற்றோர், உடன் போக்கில் ஊரை விட்டு ஓடுவதும்
முழுநிலவின் இரவில் நிகழ்ந்துள்ள படியால், கோள் ஒழுக்கம் உடைய திருநுதல்
மகளிரும், கோள்வலிமையுடைய ஆண் பாலரும் அறிந்து இருக்க வேண்டிய நாள்
முறைமை என்பது தமிழ் மரபில் முழுநிலவு பற்றியது ஆகும்.
இனவரைவு:
தமிழர்களின் தனித்த இயல்புகளில் சில, தமிழர் அல்லாதவர்களிடம் இல்லை
என்பதும்,அவர்கள் பயிலவில்லை என்பதும், அத்தகைய அறிவை ஊட்டும் மொழி
அவர்களிடம் இல்லை என்பதும் நோக்கத்தக்கது.
பெண் நீர்மை – நயம் தலை திரியாது:
1. எண்ணிய நாள் அகம் வருதல் பெண்ணியல்...(ஐங்குறுநூறு 466)
2. தொழுது அக விளங்கும் யாண்டேய் ....(தஞ்சைப் பெரிய கோயில்
மெய்கீர்த்தி 313-Vol.II)
3. நாள் இடைப்படாமை வருவர் நமர் எனப்
பயம் தரு கொள்கையின் நயம் தலை திரியாது
நின்வாய் இன்மொழி நன்வாயாக
வருவர் ஆயினோ நன்றே(அகநானூறு – 333)
பெண்மைப் பண்புடைய நிலம், ஆண்மைப் பண்புடைய தலைமை ஒன்றின் ஆளுமையை எதிர்
பார்த்துச் சுழன்று வருகின்றது. அந்த எதிர் பார்ப்பை புரிந்து கொள்ளும்
திறன் அந்த ஆளுமைக்குத் தேவைப்படுகிறது. அதை அறிந்திருக்கும் அரசனே
பருவச் சுழற்சியின் முறைமைக்குப் பொறுப்பேற்கிறான். பிழை நேர்ந்தால்
திருத்தவும் முயற்சி செய்கிறான் என்று புரிந்து கொள்ளும்படியான
பழந்தமிழ்ப் பதிவுகள் பரவலாக உள்ளன.
(திருமகள் போலப் பெருநிலச் செல்வியும் தமக்கே உரிமை பூண்டமை மனக்கொள –
தஞ்சை மெய்க்கீர்த்தி)
பலரும் நன்கு அறிந்த தொல்காப்பிய நூற்பா ஒன்றினை இச்செய்தியுடன்
ஒப்பிட்டு மீளாய்வு செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. அது தமிழ் மொழியின்
பெண்மைப் பண்பு நலனைப் பேணிக் காக்கும் பொறுப்பை உணர்த்துவதாக
இருக்கிறது.
1. தன் உறு வேட்கை கிழவன் முன் கிளத்தல்
எண்ணும் காலை கிழத்திக்கு இல்லை
பிறநீர் மாக்களின் அறிய ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற்று என்ப - (தொல்காப்பியம் – 1071)
2. எண் அரும் பாசறைப் பெண்ணொடும் புணரார் - (தொல்காப்பியம் – 1128)
3. புறத்தோர் ஆங்கண் புணர்வது ஆகும் - (தொல்காப்பியம் – 1129)
4. புடைப் பெண்டிர் மக்களும் கீழும் பெருகி - (நாலடியார் – 37-8)
5. கோடு ஏந்து அகல் அல்குல்
பெண்டிர் தம் பெண் நீர்மை
சேடியர் போலச் செயல் தேற்றார் – கூடிப்
புதுப் பெருக்கம் போலத் தம் பெண் நீர்மை காப்பு
மதித்து இறப்பர் மற்றையர் (நாலடியார்– 36-4)
(மதித்து அல்லது மிதித்து?) இறப்பர் கடப்பர்
பிறநீர் மாக்கள் அல்லது புறநீர் மாக்கள் யார்? புறத்தோர் யார்?
புடைப் பெண்டிர் யார்? காப்பு மிதித்துத் தாண்டுவோர் யார்?
முழுநிலவு நாள் எது என்று தெரிய வேண்டிய தேவை இல்லாதவர்கள்
இருக்கிறார்களா? அவர்கள் தமிழர் அல்லாதவர்களா? இது தமிழ் இன வரைவுக்குப்
பங்களிப்புச் செய்யுமா? இவை உயர் ஆய்வுக்கு உரியவை.
செம்மாந்த அடுத்த தலைமுறையை ஒழுங்கு படுத்தத் தமிழ் நாட்காட்டியின்
இப்பகுதிக்கு இவ்வாறான அடிப்படைப் புரிதல் தேவையாக இருக்கிறது. தமிழ்
நாட்காட்டியின் தேவை இன்னதென்று பட்டியல் இடும் போது, அங்கே தமிழர்களின்
அகவாழ்வியற் கூறுகளே முகாமை பெறுகின்றன. அதனால் பழந்தமிழில் உள்ள அகச்
செய்திகள், அழுத்தமான சான்றுகளாகத் தென்படுகின்றன.
இவ்வாண்டில் இன்றைய நாள்:
தற்செயலாக ஆங்கில ஆண்டு 2017, பெருந்தச்சு நிழல் நாட்காட்டியின்படி
தை முதல் நாளில், வளர்பிறை 4-ஆம் நாளில் தொடங்கி இருக்கிறது. இதுவரை 8
முழுநிலவுகள் கடந்து விட்டன. அவற்றுள் மூன்று முழுநிலவுகள் தோற்று
விட்டன. அதனால் ஆண்டு நாட்களில் 3 நாட்கள் குறைவு பட்டுள்ளன.
தமிழ் நாட்காட்டி என்பது தமிழர்கள் வரைவு செய்த பருவ ஒழுங்கு பற்றிய
வாய்ப்பாடு அதற்குக் கோட்பாட்டு அடிப்படை கண்டறியப்பட்டுள்ளது, அது ஆடு
கோட்பாடு அத்தகு அரிய நாட்காட்டியை ஆங்கில நாட்காட்டியுடன்
ஒப்பிட்டுத்தான் விளக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
இன்னும் எஞ்சியுள்ள 4 முழுநிலவுகளைக் கணித்துக் காத்திருந்து
கணக்கு முடிக்கும் வேளையில் தமிழ்ப்புத்தாண்டு பற்றிய புரிதல் பரவலாகத்
தமிழ் இனத்தார்க்கு ஏற்பட்டிருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.
அடுத்த ஆண்டு முதல் ஆங்கில நாட்காட்டியின் படியான நாட்களைப்
பதிவுகளில் பக்கவாட்டில் குறிப்பிடாமல் மன்னன் இராசராசனைப் போல் தொடர்
நாட்களைக் குறிப்பிடும் வழக்கத்தை வசப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை
இருக்கிறது. அதற்கு ஆங்கில நாட்காட்டி இதுவரை ஏற்படுத்தியிருக்கிற மூளை
வடுவை நீக்கிக் கொள்ள வேண்டும்.
கனிந்து வரும் காலம்:
தமிழின் மேன்மையை, மாண்பை, தமிழர் மரபறிவின் ஊற்றத்தை, செயல்திறனை
உலகம் உவந்து வரவேற்கும் காலம் கனிந்து வருகிறது என்று தமிழின் பெயரால்
நம்பலாம். அதன் பயன் கொள்ளும் அடுத்த தலைமுறையைச் செதுக்கி எடுக்க
வேண்டிய பொறுப்பு அறநெஞ்சம் கொண்ட மாந்தர் அனைவருக்கும் பொதுவில் தேவையாக
இருக்கிறது. தமிழர்களுக்கு அது கடமையாக இருக்கிறது.
இது மரபு வழித் தமிழ்த் தேசி
___---ooo000OOO000ooo---___
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக