வெள்ளி, 6 அக்டோபர், 2017

செட்டியார் வேர்ச்சொல் எட்டி நாயகர் பட்டம் கண்ணகி நகரத்தார் சொல்லாய்வு செட்டி சாதி கல்வெட்டு

Karupaiya Ramanathan
 சான்றாக செட்டிறை என்ற ஒருவித வணிகவரியை தமிழ் வணிகர் மரபினர்
செலுத்தினர் அந்த செட்டிறை என்ற வணிகவரி வணிகர்க்குடிகளுக்கு மட்டும்
செலுத்தும் வரி என்பதால் இந்த செட்டிறை என்ற சொல்லில் இருந்து செட்டி
என்ற சொல் வந்து என்றும் சொல்லப்படுகிறது
சோழர்கள் காலத்தில் வணிகர்களுக்கு எட்டி என்ற பட்டம் கொடுக்கப்பட்டது
அதுவே பின்னாளில் பேச்சுவழக்கில் செட்டி என்ற பெயருக்கு மாறியது என்று
சொல்லப்படுகிறது இதற்கு சாட்சிகள் உண்டா என்று கேட்கும் பதர்களுக்கு
மணிமேகலையும் சிலம்பும் சாட்சியாக உள்ளது எட்டிச் சாலனையும் என்று
சொல்லாடல் சிலம்பில் வருகின்றது அதோடு மேகலையில் எட்டிக்குமரன் என்ற
சொல்லும் பயன்படுத்தியதை காணமுடியும் எட்டி என்ற சொல்லின் மருவே இன்று
செட்டி என்ற சொல் நடைநடந்து அல்லது கடல் கடக்காது பலநாடுகளுக்கு சென்று
பயணம் செய்து பெருவணிகம் செய்வோரை எட்டி என்று சிலம்பு காலத்தில் பட்டம்
கொடுத்து அழைத்தார்கள் அதோடு கடல் கடந்து சென்று வணிகம் செய்தவர்களை
நாயகன் என்ற பட்டம் கொடுத்து அழைத்தனர். இதற்கும் நம் சிலப்பதிகாரம்
வந்து சாட்சி சொல்கிறது. நம் கண்ணகி ஆத்தாள் தந்தையின் இயற்பெயரை பற்றி
சிலம்பு பேசவில்லை மாநயகன் இதில் நாயகன் என்பது அவருக்கு கொடுக்கப்பட்ட
பட்டம் மாநயகனுக்கு சொந்தாமாக 1௦௦௦திற்கும் அதிகமாக பெருவணிகம் செய்யும்
கலன்கள் வைத்திருந்த பெருவணிகர் அதனால் அவரை மாநாயகன் என்று அழைத்தனர்
நம் நகரத்தார்களுக்கும் இன்றும் வழக்கில் அவரவர் வீட்டிற்கு தனிதுவ பெயர்
உண்டு என்பதை நினைவில் கொள்க
குறிப்பு : மாநாயகம் என்பது கண்ணகியின் தந்தையின் இயற்பெயர் அன்று அவரின்
இயபெயர் குறித்து காப்பியத்தில் பேசப்படவில்லை அது அவரை அடையாளப்படுத்தி
கூறும் அடையாளப் பெயர் கண்ணகி ஆத்தாள் வேள்வணிகர் மரபினால் என்பதற்கு
இதுவும் ஒரு ஆதாரம் இந்த அடையாளப்பெயர் நம் வழக்கத்தில் இன்று உள்ளது
செட்டிநாட்டில் ஒவ்வொரு நகரத்தார் வீட்டிற்கும் ஒரு தனித்துவமான
அடையாளப்பெயர் இருக்கு அதுபோன்றே அன்று கண்ணகிஆத்தாள் தந்தையின் அடையாளப்
பெயரே

Singaravadivelan Palaniappan
'செட்டு ' என்றால் சிக்கனம் என்றும் பொருள் .
எங்கள் தந்தையார் மகாகவி எழுதிய வாழ்த்துக் கவிதையிலிருந்து மேற்படி
செட்டைக் குறிக்கும் இரண்டு வரிகள் .
'செட்டாக இருந்தாலும் செல்லப் பெயரனுக்கு
மட்டுக்கு மீறி மனமாரப் பணம்தருவார் "

Karupaiya Ramanathan
எட்டி என்ற சொல்லுக்கு உயர்ந்தவன் என்ற பொருள் கூட்டாக சென்று வணிகம்
செய்தவர்களுக்கு இந்த பட்டம் கொடுக்கப்பட்டது இதுவே பின்னாளில்
சொல்லாடலில் செட்டியாக மாறியது பின்அது வணிககுடிகளை அழைக்கும் ஒரு
பெயராகவே உருமாறியது
திருத்தப்பட்டது ·
பிடித்திருக்கிறது · 1 ·
புகாரளி · 8 ஆகஸ்ட் 2015

Vimal Sekar
ஐயா இப்படி பார்த்தாலும் சரியாய் வருமா பாருங்க " எட்டி = தூரமா போய்
அதாவது எட்டி போய் வணிகம் செய்ததால் எட்டி " எட்டி என்பது மருவி பின்பு
செட்டி ஆனது ,தமிழர் மரபு படி சமுதாயத்தில்/
கல்வி கேள்வியில் /உயர்ந்த பதவியில் இருப்பவரை "யார் " என்ற விகுதி
சேர்த்து அழைப்பது மரபு எனவே "செட்டி + யார் = செட்டியார் " சரியாய்
வருமா ஐயா!!??

Avaddayappan Kasi Visvanathan
எட்டி என்ற சொல்லிற்கான மிகப் பழமையான கல்வெட்டு திருச்சியை அடுத்த
புகளூர் பாரக் கல்வெட்டுதான். இதன் காலம் கி.மு. எனினும் நம் இந்திய
சனாதன தொல்லியல் துறையும் தமிழகத்தின் திராவிடத் தொல்லியல் துறையும்
காலத்தை குறைப்பது பற்றி முனைப்புடன் உள்ளனர் என்னவாக இருந்தாலும் அந்தக்
கல்வெட்டு எட்டி என்று வணிகர்களை குறிப்பிடுகின்றது தமிழி என்ற பண்டைய
வரிவடிவம் கொண்ட தமிழ் கல்வெட்டுதான் அது. வேணும் அருள்மிகு பொய் சொல்லா
மெய்யர் துணை. ----- நெற்குப்பை காசி விசுவநாதன்.

Balasubramanian Subramanian
Mr.Somasundaram Subramaniam: Your explaination is Good and respectable
one. But a chettiar person in Alor Setar High Court giving evidence as
"Chettis after taking food sleep at the
first floor of kittangi".

6 கருத்துகள்:

  1. மானாய்க்கன்...மாசாத்துவன் என்பது தனிப் பெயரே...
    பொதுப் பெயரில் வேறு எந்த பாத்திரமும் குறிப்பிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    செட்டி என்று எங்கும் கூறப் படவே இல்லை....
    சாத்து வணிகர் என்பது சாதுவன் என்பதும் இன்றைய நாடார் குல முன்னோர்களான கன்னர் குல சன்னர் குல சானார் குலமே... நூற்றுவர் கன்னர் என்று பெரு வணிக வழிப் பாதையை படை வைத்து கண் காணித்து சுங்கம் வாங்கி வந்த வாணிகர்களே.. கண்ணகி கோவலன்... சாத்தனார்...செங்குட்டுவன்... இளங்கோ அடிகள் என அனைவரும் நாடார் குல முன்னோர்களே..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாருடா இவரு...செட்டியார் தெருவுல போய் இப்டி பேசிடாத...

      நீக்கு
  2. சிலம்பையே தன் வாழ்க்கையாக்கி வாழ்ந்த.... சிலம்பு செல்வர் ம.பொ.சி. நாடார் இனமே...

    பதிலளிநீக்கு
  3. செட்டியாருக்கும்... குறிப்பாக நகரத் தாருக்கும் சிலப்பதிகாரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை

    பதிலளிநீக்கு
  4. நாடார் சமூகத்துக்கும் வணிகத்திற்கும் சம்பந்தமே இல்லை

    பதிலளிநீக்கு