திங்கள், 9 அக்டோபர், 2017

கம்யூனிஸ்ட் சிபிஐ சிபிஎம் வேறுபாடு cpm மற்றும் sfi தமிழர் எதிரானது ஈழம் 2009 பொதுவுடைமை

தோழர் Yamuna Rajendran கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது (தத்துவார்த்த புரிதல்
இல்லாமல்) கடுமையான எதிர்வினைகள் செய்வதை விமர்சித்திருந்தார். அவர்
பொதுமையாகப் பேசிய கருத்துகளில் உடன்பாடுண்டு. ஆனால் ஒரு சில முரண் படும்
விசயங்களை இங்கு குறிப்பிட வேண்டியிருக்கிறது. பொதுவாக சி.பி.ஐ மற்றும்
சி.பி.எம் ஆகியவற்றின் இடையிலான வேறுபாட்டை பலரும் புரிந்துகொள்வதில்லை.
(எம்.எல். இயக்கங்கள், மாவோயிஸ்ட்டுகள் குறித்து இன்னும் குறைவான புரிதலே
உள்ளது) ஈழத்தில் இனப்படுகொலை நடக்கும் போது எல்லா அரசியல் கட்சிகளும்
கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட போதும் சி.பி.ஐ.- யின் டி. ராஜா முதன் முதலாக
அதற்கு எதிராக போராட்டத்தை ஒழுங்கமைக்கிறார். ஈழத்துக்கு ஆதரவாக
பாராளுமன்றத்தில் அவருடையக் குரல்தான் மனசாட்சியுடன் ஒலித்தது. ஐயா
நல்லக்கண்ணு போன்றவர்கள் ஈழப் பிரச்சினைகளை மிகவும் அனுதாபத்துடனேயே
அணுகினர். (இது கம்யூனிஸ்டுகளை மொட்டையாக எதிர்ப்பவர்களுக்குத் தெரியாது.
கண்டுகொள்ளவும் மாட்டார்கள்) ஆனால் அதே நேரத்தில் அப்போதைய சி.பி.எம்-ன்
பொதுசெயலாளர் பிரகாஷ் காரட் இனப்படுகொலைக்கு எதிராக தமிழகத்தில் நடக்கும்
போராட்டங்களை எதிர்த்தார். அது தவறான முன்னுதாரணத்தை கொடுக்குமென
அயோக்கியதனமாகப் பேசினார். அதைத் தாண்டி ஆதவன் தீட்சண்யா போன்ற
அயோக்கியர்கள் அப்பட்டமாக இனப்படுகொலையை நியாயபடுத்தி்னார்கள்.
ஒத்தோடிகளான சுசீந்தன் போன்றவர்களை தூக்கிபிடித்தார
்கள். ஈழ விசயத்தில் சி.பி.எம். தவறு செய்தது என்பதை த.மு.எ.ச.க-வின் ச.
தமிழ்ச்செல்வனே கேணி கூட்டத்தில் ஒப்புகொண்டார். அதுமட்டுமல்ல,
முல்லைப்பெரியாறு, சேலம் ரயில்வே கோட்டம் போன்றவற்றிற்கான போராட்டத்தில்
சி.பி.எம். அப்பட்டமான தமிழர் விரோத போக்கையே கடைபிடித்தது. இன்னும்
சொல்லப்போனால் சேலம் கோட்டம் உருவாவதற்கு எதிராக தற்போதைய சி.பி.எம்.
பொதுச்செயலாளர் சீத்தாராம் எச்சூரி கேரள பாரளுமன்ற உறுப்பினர்களுடன்
மன்மோகன் சிங்கை சென்று சந்திக்கிறார். இதுதான் சி.பி.எம். தமிழகத்துக்கு
செய்த உதவிகள். இப்படியிருக்கையில் நீட்டுக்கு எதிராக மாணவர்கள் நடத்தும்
போராட்டத்தில் அவர்கள் தங்கள் மாணவரணியினரை (Sfi) முதன்மை படுத்துவதுத்
தவறு. தமிழகத்தில் இன்று நடைபெறும் மாணவர் போராட்டங்களில் கிட்டதட்ட
எல்லாமுமே தன்னெழுச்சியாக நடைபெறுபவை. ஆனால் ஜெ-வின் சமாதியில் போராடி
கைதாகி வெளிவந்த உடனேயே SFI நிர்வாகிகள் தங்கள் தலைமையில் போராட்டங்கள்
நடைபெறுவதாக மடைமாற்றுகின்றனர்; பேட்டிகொடுக்கின்றனர். அதெல்லாவற்றையும்
விட ஏழு நாட்ககள் போராடுவார்களாம். நீட் நீக்கப்படவில்லையெனில்
அடுத்தக்கட்ட போராட்டத்தை கூடி விவாதிப்பார்களாம். இவர்களுக்கு இந்த
அதிகாரத்தை யார் தந்தது? போராட்ட களத்தில் மாணவர்களோடு மாணவர்களாக
அவர்கள் கலந்துகொள்வதில் பிரச்சினையில்லை. ஆனால் அவர்கள் தங்கள் வெகுஜன
ஸ்தாபன அடையாளத்தை முன்னிறுத்துவது பெரும் தவறு. அப்படி செய்வார்களெனில்
மாணவர்கள் எஸ்.எப்.ஐ- யை போராட்ட களத்திலிருந்து துரத்தியடிக்க வேண்டும்.
இத்தகைய செயல்பாடுகளின் மூலம் போராட்டங்களை பிசு பிசுக்க செய்வதில்
சி.பி.எம்-ன் மாணவர் சங்கமான எஸ்.எஃப்.ஐ மிகவும் கைதேர்ந்தது என்பதை
என்னுடைய கல்லூரி நாட்களிலேயே நேரடியாகப் பார்த்திருக்கிறேன். இந்த
களங்கமெல்லாம் போக வேண்டுமென்றால் சி.பி.எம். தன்னுடைய தமிழர் விரோத
போக்குகளுக்கு, குறந்த பட்சம் ஈழத்தில் இனப்படுகொலை நடக்கும் காலத்தில்
செய்த தவறுகளுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். அதன் பிறகு பொது
சமுகமும், மாணவர்களும் உங்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ள வேண்டுமென
நீங்கள் எதிர்பார்ப்பது நியாயமாக இருக்கும். அதுவரைக்கும் உங்களை எட்ட
வைப்பதுதான் தமிழ் சமூகத்துக்கு நல்லது.
- Jose Antoin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக