தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் தனது அட்டைப் படத்தை புதுப்பித்துள்ளார்.
சங்க இலக்கியத்தில் என் பாட்டன்,
# கள்வர்_கோமான்_புல்லி ..
1>> வேங்கடமலையாண்ட மாவண் புல்லி..
============================== ===
வேங்கடமலையாண்ட கள்வர் கோமான் புல்லி, அகம் புறம் ஆகிய சங்கநூல்களில் 8
க்கும் மேற்ப்பட்ட பாடல்களில் போற்றப்படுகிறார். இவரது போர்திறன், கொடை,
வேங்கடமலையின் சிறப்பு ஆகியவற்றை பல புலவர்கள் புகழ்ந்து
பாடியுள்ளனர்..ஈராயிரம் ஆண்டுகளாக புல்லியின் புகழ் பாடிக்கொண்டிருக்கும்
சங்கநூல் பாடல்களை காண்போம்.
++++++++++++++
2>> நித்தமும் போரை தொழிலாக கொண்ட கள்வர்குல மறவர்கள்..
------------------------------ --
(அகநானூறு பாடல் 61)
" வரிமாண் நோன்ஞாண் வன்சிலைக் கொளீஇ அருநிறத்து அழுத்திய அம்பினர் பலருடன் "
- மாமூலனார் -
பசிய காலும் மாண்புறும் வரியும் உடைய வலிய வில்லானது சிறுது காலம் கூட
தழைக்காது, தொடந்து முழங்கும் முயற்சியோடு தனது வில்லிலே நாணைப்பூட்டி
எதிரிகளின் மார்புகளில் அம்புகளை பாய்ச்சுகின்ற கள்வர்களின் தலைமகனாக
விளங்கும் மாவண் புல்லி என மாமூலனார் கள்வர்களின் போர்த்தொழிலை
வர்ணிக்கிறார்.
+++++++++++++
3>> கள்வர் கோமான் புல்லி
------------------------------ ----------
( அகநானூறு பாடல் 61)
" அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுநொடை நெல்லின் நாண்மகிழ் அயரும்
கழல்புனை திருந்தடிக் கள்வர் கோமான்"
- மாமூலனார்-
- தலைமை வாய்ந்த யானைகளின் வெள்ளிய கோடுகளை(தந்தங்களை) , கள்ளோடு விற்று
அதனால் கிடைத்த நெல்லை கொண்டு, நாளோக்கச் சிறப்பினை செய்யும், கழலினை
தரித்த திருந்திய அடிகளை உடைய கள்வர்களின் கோமான் புல்லி என மாமூலனார்
புல்லியை போற்றுகிறார்.
++++++++++++
4>> மழவரை வென்று திறை பெற்ற புல்லி..
------------------------------ ----
(அகநாறூறு பாடல் 61)
" மழபுலம் வணக்கிய மாவண் புல்லி
விழவுடை விழுச்சீர் வேங்கடம் பெறினும்"
- மாமூலனார் -
மழவர்களை அடக்கி வென்று அவர்களிடம் திறை பெற்ற மிக்க வலிமையுடைய, புல்லி
என்பவனின் திருவிழாக்களால் சிறப்புறும் வேங்கடம் என, புல்லியின்
பேராண்மையையும், அவன் ஆட்சி செய்த வேங்கடமலையின் சிறப்பினை மாமூலனார்
புகழ்கிறார்.
+++++++++++
5>> பாண்டியன் நெடுஞ்செழியனுக்
கு போர் யானைகளை கள்வர் கோமான் புல்லி பரிசளித்தல்
------------------------------ --
( அகநானூறு பாடல் 27)
" வடவயின் வேங்கடன் பயந்த வெண்கோடு யானை, மறப்போர்ப் பாண்டியர் அறத்தின்
காக்கும் கொற்கை "
- மதுரை கணக்காயனார் -
-- வடதிசையில் உள்ள வேங்கடத்து மன்னன் அளித்த போர்யானைகளை உடைய ,
வீரப்போரில் வல்லவர்களான பாண்டியர்கள் அறம் காத்த கொற்கை என புலவர் மதுரை
கணக்காயனார், பாண்டிய மறவர்களின் புகழ் பாடுகிறார். சங்ககாலத்தில் கொற்கை
துறைமுகம் சிறந்து விளங்கியதையும், புல்லி மற்றும் பாண்டியர்களுக்கு
இடையே உள்ள சுமூக உறவையும் இந்த பாடல் உணர்த்துகிறது. மதுரை
கணக்காயனாரின் மகனாரான நக்கீரர், பாண்டியன் நெடுஞ்செழியனை பற்றி
பாடியுள்ளதால், இப்பாடலில் குறிப்பிடப்படும் பாண்டிய மன்னன்,
தலையாலங்கானத்து போரில் வென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் என உணர்த்தும்.
++++++++++++
6>> மறப்போர் புல்லி
-----------------------
(அகநானூறு பாடல் 209)
" பொன்னணி நெடுந்தேர்த் தென்னர் கோமான் எழுஉறழ் திணிதோள் இயல்தேர்ச் செழியன்
நேரா எழுவர் அடிப்பட கடந்த ஆலங்கானத்து அர்ப்பினும் பெரிது "
" மாஅல் யானை மறப்போர்ப் புல்லி காம்புடை நெடுவரை வேங்கடத்து உம்பர்"
- கல்லாடனார்-
- பொன் தகடுகள் வேய்ந்த நீண்ட தேரினை உடையவர் தென்னர் கோமான்
நெடுஞ்செழியன். கணைய மரத்தை போன்ற திரண்ட தோள்களையும், நீண்ட தேரினையும்
உடைய பாண்டியன் நெடுஞ்செழியன் தலையானங்கானத்து போரில் எழுவரை
வீழ்த்தியதாக பாண்டியனின் வீரத்தைதை புலவர் புகழ்ந்து பாடியுள்ளார்.
- இதே பாடலில் " மதம் கொண்ட யானைகளையும் , மிகுந்த போர்வன்மையும் கொண்ட
புல்லி என்பானது மூங்கில்களை உடைய நீண்ட சாரல்களை உடைய வேங்கடமலை " என
வர்ணித்துள்ளார்
.புல்லியின் போர்திறனை போற்றியுள்ளார்.
+++++++
7>> வெண்கடம்பு பூச்சூடி களிறுவேட்டையாடும் கள்வர்கள்
------------------------------ ---
( அகநானூறு பாடல் 83)
" களிற்றுக்கன்று ஒழித்த உவகையர் கலிசிறந்து கருங்கால் மராஅத்து
கொழுங்கொம்பு பிளந்து"
"நறவுநொடை நல்இல், பதவுமுதற் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி
வியன்தலை நல்நாட்டு வேங்கடம்"
- கல்லாடனார் -
" மணங்கமழும் வெண்கடம்பின் பூக்களை சுருள்போன்ற தன் தலைமயிரில்
சூடிக்கொண்டு , உரல் போன்ற காலினை உடைய பெண் யானையிடமிருந்து களிற்று
கன்றை பிரித்து கூட்டி வருவர் கள்வர்கள்! வெண்கடம்பு மரத்தின்
நாரைக்கொண்டு யானைக்கன்றை கட்டுவர். அத்தகைய இளையர்களுக்கு பெருமகன்,
கள்வர் கோமான் புல்லி யின் அழகிய கொடிகளையுடைய வேங்கடமலை என
வேங்கடமலையின் சிறப்பினை உணரத்துகிறார் கல்லாடனார்.
++++++++++++++
8>> வேங்கடமலையின் சிறப்பு
------------------------------
( அகநானூறு பாடல் 141)
" நரந்த நறும்பூ நாள்மலர் உதிரக் கலைபாய்ந்து உகளும், கல்சேர் வேங்கைத்
தேம்கமழ் நெடுவரை பிறங்கிய வேங்கட வைப்பிற் சுரன் இறந்தாரோ"
- நக்கீரர்( மதுரை கணக்காயனாரின் மகனார்)
" கற்பாறையிடையே வளர்ந்த வேங்கையை போல புள்ளிகளை உடைய பூவின் இடையே அன்று
பூத்த நாரத்தையின் மலர்கள் உதிரும்படி, முசுக்கலை என்ற ஆண் குரங்குகள்
பாய்ந்து துள்ளும், நெடிய மலைத்தொடரை கொண்ட வேங்கட மலை " வேங்கடத்தின்
அழகை வர்ணிக்கிறது இப்பாடல்.
++++++++++++++
9>> இயற்கை எழில் கொஞ்சும் வேங்கடம்...
------------------------------ ------
(அகநானூறு பாடல் 211)
"திண்நிலை மறுப்பின் வயக்களிறு உரிதொறும் தண் மலை , ஆலயின் தாஅய் உழவர்,
வெண்ணெல் வித்தின் அறைமிசை உணங்கும் பனிபடு சோலை வேங்கடத்து உம்பர்"
- மாமூலனார்-
" வலிமை பெற்ற களிறானது, வெண் கடம்பு மரத்தில் உராயும் போது, பரவும்
கடம்பின் பூக்கள், மழைக்காலத்தில் பெய்யும் பனியை போல எங்கும்
பரவிக்கிடக்கும். அப்படி உதிரந்த பூக்கள் பாறைகளில் காய்ந்து இருக்கும்.
இத்தகைய குளிர்ச்சி பொருந்திய சோலைகளை கொண்ட வேங்கடமலை என புல்லியின்
தேசத்தை மாமூலனார் எடுத்துரைக்கிறார்.
++++++++++++++
10>>போர்யானைகளால் சிறந்த வேங்கடமலை..
------------------------
( அகநானூறு பாடல் 213)
" வினைநவில் யானை விறற்போர்த் தொண்டையர் இனமழை தவழும் ஏற்றரு
நெருங்கோட்டு ஒங்குவெள், அருவி வேங்கடத்து உம்பர்"
- தாயங்கண்ணனார் -
- போர் பயிற்சி பெற்ற யானைகளை கொண்ட தொண்டையர் வாழும் வேங்கடமலையானது,
மேகங்கள் தவழும், வெண்மையான அருவிகள் விழும் மலை உச்சிகளை உடையது என
வேங்கடத்தின் அழகை புகழ்கிறார் புலவர்.
+++++++++++
11>> புல்லிக்குன்றம் - வேங்கடம்..
------------------------------ ---
(அகநானூறு பாடல் 295)
"ஆறுசெல் வம்பலர் அசைவிட ஊறும் புடையலம் கழற்கால் புல்லி குன்றத்து "
-மாமூலனார்-
" ஒலிசெய்யும் வீரக்கழல் அணிந்த காலினனான புல்லி என்னபானது குன்றமான
வேங்கடம் என புலவர் புல்லியின் வேங்கடமலையை குறிப்பிடுகிறார்.
+++++++++++
12>> புல்லியின் நன்னான்டில் கோவலர்..
------------------------------ --------
(அகநானூறு பாடல் 311
" வருவழி வம்பலர் பேணிக் கோவலர் மழவிடை பூட்டிய குழாஅய் தீம்புளி செவியடை
தீரத தேக்கிலைப் பகுக்கும் ' புல்லி நன்னாட்டு' உம்பர்
-மாமூலனார்-
" வழிப்போக்கர்களின் பசியினை தீர்க்கும் பொருட்டு, தங்களது பசு
கன்றுகளின் கழுத்திலே தொங்கும் குழாய்களில் அடைக்கப்பட்டுள்ள
புளிச்சோற்றினை , கோவலர் பகிர்ந்து அளிப்பர். அத்தகைய ஈகை தன்மை கொண்ட
மக்கள் வாழும் புல்லி என்பான் காத்து வரும் வேங்கட நன்னாடு என என
மாமூலனார், கோவலர்களின் நற்குணத்தையும், புல்லி என்பவன் வேங்கட நாட்டை
காத்தருள்வதையும் புகழ்ந்துள்ளார்
.
++++++++++
13>>அகநானூறு பாடல் 359
" வீழ்ப்பிடி கெடுத்த நெடுந்தாள் யானை, சூர்புகழ் அடுக்கத்து, மழைமாறு
முழங்கும் பொய்யா நல்லிசை மாவண் புல்லி "
- மாமூலனார் -
" நெடிய கால்களை உடைய களிற்றியானையானது, தெய்வங்கள் வாழும் மலை பக்கத்தே,
இடியோடு மாறுபட முழங்கும் இடமான பரிசிலர்க்கு பொய்யாத நல்ல புகழினையும்,
சிறந்த வண்மையையும் உடைய புல்லி யின் வேங்கடம் என புகழ்கிறார்.
++++++++++
14>>புல்லி நன்னாட்டில் இடையர்கள்..
------------------------
(அகநானூறு பாடல் 395)
" மதர்வை நல்லான் பாலொடு பகுக்கும் நிரைபல குழீஇய நெடுமொழிப் புல்லி
தேன்தூங்கு உயர்வரை நல்நாட்டு உம்பர் வேங்கடம்"
-மாமூலனார்-
- இடையர்கள் வெண்மையான அரிசியை உலக்கையால் குத்தி, மண்பானையில் ஏற்றி
அவிலாழிகிய சோற்றினை ஆக்குவர்.இக்காட்சிகள் நித்தம் நடைபெறும் , தேனிறால்
தொங்கும் உயர்ந்த பாறைகளையுடைய மங்காத புகழ் கொண்ட புல்லி என்பானது
வேங்கட நன்னாடு என வேங்கடத்தின் புகழை பாடுகிறார் மாமூலனார்.
++++++++++++++
15>>புல்லிய வேங்கடம்..
------------------------------ --
(புறநானூறு பாடல் 385)
"புல்லிய வேங்கட விறல்வரைப் பட்ட ஒங்கல் வானத்து உறையினும் பலவே"
- கல்லாடனார் -
" அம்பர் கிழான் என்வனை வாழ்த்தும் கல்லாடனார், புல்லியின் வேங்கடமலையில்
வீழ்ந்த மழைத்துளியினும் பல ஆண்டுகள் வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.
" இவ்வாறு பல புலவர்களால் கள்வர் கோமான் புல்லியின், வீரம், கொடை ஆகிய
பண்புகள் பாடப்பட்டுள்ளது. வரலாற்று இருட்டடிப்பில் சிக்கிய பல
மன்னர்களில் புல்லியும் ஒருவர் என கொள்ளலாம். புல்லியை பற்றி பல
பாடல்களில் பாடிய மாமூலனார் , மௌரியரின் தமிழக படையெடுப்பு பற்றியும்
பாடியுள்ளதால், புல்லியின் காலம் 2100-2200 ஆண்டுகளுக்கு முந்தையதாக
இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.பண்டைய தமிழகத்தின் வட எல்லையாக சீரும்
சிறப்புமாக திகழ்ந்த வேங்கடத்தை தமிழகம் இழந்தாலும் வரலாற்று ஏடுகள்
என்றும் வேங்கடத்தை உரிமை கொண்டாடி கொண்டே இருக்கும்! புல்லியின் புகழை
பாடிக்கொண்டே இருக்கும்.
தொகுப்பு : சியாம் சுந்தர் சம்பட்டியார்..
+++++++நன்றி_நன்றி+++++++++++
14 மணிநேரம் · பொது
சங்க இலக்கியத்தில் என் பாட்டன்,
# கள்வர்_கோமான்_புல்லி ..
1>> வேங்கடமலையாண்ட மாவண் புல்லி..
==============================

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக