ஞாயிறு, 8 அக்டோபர், 2017

கல்லீரல் சுத்தப்படுத்த புதினா ஜூஸ் மருத்துவம் மூலிகை

ஒரே வாரத்தில் உங்கள் கல்லீரலை புதியதாக மாற்ற வேண்டுமா? இந்த ஜூஸ் குடிங்க!
நமது உடலின் வெளி பாகம் சுத்தமாக இருக்க வேண்டும், மினுமினுப்பாக,
மிருதுவாக, மென்மையாக இருக்க வேண்டும் என்பதில் அக்கறை காட்டும் நாம்.
அதே அளவு உடலின் உள் உறுப்புகளின் மேலும் காட்டவேண்டும்.
நாம், அழகாக இருப்பதைவிட, ஆரோக்கியமாக இருக்க வேண்டியது
அவசியம்.முக்கியமாக, கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், குடல் போன்ற உடல்
உறுப்புகளின் மேல் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.
இவற்றில் ஏற்படும் செயற்திறன் குறைபாடுகள் தான் உயிரையும் பறிக்கக்
கூடும். இனி, கல்லீரலின் பயன், அவற்றுக்கு ஏற்படவிருக்கும் அபாயங்கள்
மற்றும் அதை சுத்தம் செய்ய உதவும் புதினா ஜூஸ் தயாரிக்கும் முறை பற்றி
பார்க்கலாம்...
கல்லீரலின் ஆரோக்கியம் அவசியம்:
கல்லீரலில் தொடர்ந்து நச்சுக்கள் சேர்வது, ஆரோக்கியத்தை கண்டுகொள்ளாமல்
இருப்பதால், கொழுப்பு கல்லீரல் நோய் மற்றும் ஹெபடைடிஸ் எனப்படும் ஈரல்
அழற்சி நோய் உண்டாக காரணியாக அமையலாம்.
கல்லீரல் ஆரோக்கியம் சீர்கெட காரணம்:
இன்று நம்மில் பெரும்பாலானோர் அன்றாடம் நமது உடலுக்கு தேவையான
ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்வதே இல்லை. நாம் யாரும் வாரத்திற்கு
இரண்டு முறை கூட கீரை, பருப்பு, பயிர், தானிய வகை உணவுகளை சேர்த்துக்
கொள்வதில்லை.
நச்சுக்கள்:
கல்லீரல், நுரையீரல், சிறுநீரகம், குடல் போன்ற உடல் உறுப்புகளில்
நச்சுக்கள் சேர்வது இயல்பு. ஆனால், அதை வெளியேற்றும் அளவிற்கு நாம் நல்ல
ஆரோக்கியமான உணவுகளை உண்கிறோமா என்பது தான் இங்கு கேள்வி?
இனி, கல்லீரலை சுத்தம் செய்ய பயனளிக்கும் புதினா ஜூஸ் எப்படி செய்வது
மற்றும் உட்கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்...
தேவையான பொருட்கள்:
புதினா இலைகள் - ஒரு கைப்பிடி அளவு
எலுமிச்சை ஜூஸ் - ஒன்று
ஆரஞ்சு ஜூஸ் - ஒன்று
தூய்மையான நீர் - ஒரு லிட்டர்
சுத்தமான இயற்கை தேன் - தேவையான அளவு
செய்முறை:
தண்ணீரை கொதிக்க வையுங்கள்.
கொதித்த பிறகு புதினா இலைகளை சேர்க்கவும்.
பிறகு கொதித்த நீர் குளுமை அடைய செய்யவும்.
அதன் பிறகு அதனுடன், ஆரஞ்சு ஜூஸ் மற்றும் தோல் சீவிய எலுமிச்சை சாறினை சேர்க்கவும்.
கடைசியாக தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
நன்மை:
தொடர்ந்து இதை குடித்து வருவதால், கல்லீரல் சுத்தமாகும். மேலும், இது
செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. தினமும் இதை குடித்து வந்தால் நல்ல
பலனடையலாம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக