ஞாயிறு, 8 அக்டோபர், 2017

பாவாணர் 81 மொழி கற்றார் தமிழறிஞர் மறவர்

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் உடன்
Suresh N.
பாவணரின் ஒரு விளக்கத்தை சொன்னால் பாவணர் பெரிய பாவாடையா எனக்கேட்ட அரை
வேக்காட்டு # அகம்படிக்கும் அதுபோன்ற ஏனைய சிலருக்கும் இப்பதிவு...
++++++++
மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்
++++++++
மொத்தம் 81 மொழிகளை அறிந்த பேரறிஞர் உலகத்திலேயே பாவாணர் ஒருவராகத்தான்
இருக்க முடியும். அவர் நம்மினத்தில் பிறந்தவர்; ஒரு தமிழர் என்பது
ஒட்டுமொத்த உலகத்தமிழர்களுக்கே பெருமையாகும்.
•மேலை மொழிகளுக்கு மட்டுமே சொந்தாமாயிருந்த வேர்ச்சொல் ஆராய்ச்சி
முறைமையக் கற்றுத் தேர்ந்து தமிழில் வேர்ச்சொல் ஆய்வுகளை செய்ததவர்.
மேலைநாட்டவரே வியந்துநிற்கும் அளவுக்கு தமிழையும் மற்றைய உலக மொழிகளையும்
நுணுகிநுணுகி ஆய்ந்தவர்.
•வேர்ச்சொல்லாய்வுத் துறையில் கொண்டிருந்த தன்னிகரற்ற பேராற்றலால் உலக
மொழி ஆய்வாளர்களையும் வரலாற்று அறிஞர்களையும் கலங்கடித்தவர்.
•தமிழ் திரவிடத்திற்குத் தாய், தமிழ் ஆரியத்திற்கு மூலம், உலக
முதல்மொழியும்(தமிழ்) முதல் மாந்தனும்(தமிழன்) தோன்றிய இடம் மறைந்த
குமரிக்கண்டம் எனவாகிய முப்பெரும் உண்மைகளை எந்த வரலாற்று ஆசிரியரும்
மறுக்கவியலாத அளவுக்கு மொழியியல் சான்றுகளுடன் நிறுவிக்காட்டியவர்.
•உலகத்தின் முதல் தாய்மொழியாகிய தமிழ்மொழியே பல்வேறு காலங்களில் பல்வேறு
மாறுதல்களை அடைந்து பல்வேறு மொழிக் குடும்பங்களாக மாறிப் பிரிந்து
இருக்கிறது என்றும் உலக மக்கள் யாவரும் தமிழ்மொழியால் உறவினர்கள்
ஆகின்றனர் என்றும் அறுதியிட்டுச் சொன்னவர்.
•50 ஆண்டுகள் தொடர்ந்து மொழியாராய்ச்சி செய்து *43* அரிதிலும் அரிதான
ஆய்வியல் *நூல்களையும்* *183* *ஆராய்ச்சி கட்டுரைகளையும்* தமிழுக்கும்
தமிழருக்கும் வழங்கியவர்.
*மொழிப்பெரும் புலவர் உயிர்ப்பாடும் முக்கழகம்..மொழி
ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்*
தமிழ் பிற மொழிச் சொற்கள் கலவாமல் தனித்தியங்க வல்ல உயர்தனிச் செம்மொழி
என முழங்கியவர்.
*தமிழே உலக முதற்றாய் மொழி..என அறுதியிட்டு முழங்கியவர்...*
*தமிழ் திரவிட மொழிகளுக்கெல்லாம் தாய் என்றும் இந்திய /ஆரிய
மொழிகளுக்கெல்லாம் மூலம்* என அறைந்துரைத்தவர்.....
*குமரிக்கண்டமே முதல்மாந்தன் பிறந்தகம்..*
*தமிழனே உலகின் மூத்த முதல்மாந்தன்..*
தேவநேயப் பாவாணர்....
பாவாணரைப் போற்றுவோம். தனித்தமிழைப் பேணுவோம். தமிழினத்தைக் காப்போம்..

தமிழ்ச்செல்வன்
மறவர் பெருமகன்...... கண்ட கண்ட கழிசடைகளை எல்லாம் கொண்டாடும் எம்
முக்குலம்... இவரை இனியாவது கொண்டாட வேண்டும் தமிழனாக....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக