திங்கள், 9 அக்டோபர், 2017

இராவணன் சமஸ்கிருதம் மட்டும் அறிந்தவன் வால்மீகி சான்று

பாசுகரன் மகன் நவீனன் Mani Pari உடன்.
ராவணன் வடநாட்டு ஆரியனே!!!
===============================
யதி வாசம் ப்ரதாஸ்யாமி த்விஜாதிரிவ ஸம்ஸ்க்ருதாம்
ராவணம் மன்யமானா மே சீதா பீதா பவிஷ்யதி - சுந்தர காண்டம்.
ஆரிய பிராமணன் இராவணனுக்கு சமஸ்கிருதம் மட்டுமே தெரியும் என்பதற்கான
ராமாயண ஆதாரம்!!!
வடக்கிற்கிக்கும் தெற்கிற்கும் வித்தியாசங்கள் உண்டு. வடக்கில் சாதாரண
மக்களின் மொழியாக பிராகிருதமும், அரசர், பண்டிதர் மொழியாக சமஸ்கிருதமும்
இருக்கும்.
ஆனால் தெற்கில், தமிழ் அரச மொழியாகவும், அறிஞர், புலவர் மொழியாகவும்,
மக்கள் மொழியாகவும் இருந்தது.
அசோக வனத்தில் சீதையை கண்ட அனுமன், எங்கே சமஸ்கிருதத்தில் பேசினால்,
தன்னை இராவணன் என்று சீதை நினைத்துக்கொள்வ
ாளோ என்று எண்ணிய அனுமன், மக்கள் பேசும் இனிமையான மொழியில் சீதையிடம்
பேசினான் என்று வால்மீகி கூறுகிறார். இந்த மக்கள் பேசும் இனிமையான மொழி
தமிழ் அல்லது பிராகிருதம் என்று இருவேறு கருத்துக்கள் உண்டு.
இதில் கவனிக்கத் தக்கது என்னவென்றால், ஆரிய பிராமணன் ராவணனுக்கு
சமஸ்கிருதம் மட்டுமே தெரிந்திருக்கிற
து!!!!
இராவண முப்பாட்டனின் திராவிட பேராண்டிகள் விடையளிக்கவும்!!!

1 கருத்து: