திங்கள், 9 அக்டோபர், 2017

மறவர் பற்றி பாவாணர் பாலை வேர்ச்சொல் சொல்லாய்வு சாதி

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் Suresh N உடன்.
# மறவர்...
தமிழ்க்குலங்களின் பெயர்களின் தோற்றம் பற்றிய வேர்ச்சொல் பார்வை...
++++++
தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வரிசை எண் 70
(கருமறவர்,அப்பநாடு கொண்டையம் கோட்டை மறவர், செம்பநாடு மறவர்),சீர்
மரபினரில் வரிசை எண் 36(மறவர்),55(செ
ம்பநாடு மறவர்) ஆகிய எண்களில் உள்ள குலம் மறவர்.
ஐந்திணை நில பிரிவில் பாலை நிலத்தைச் சேர்ந்தவர் மறவர். முதுவேனிற்
காலத்தில் இயற்கை நீர்நிலைகள் வற்றி போவதால் நிலம் வற்றி வறண்ட சுரம்
போன்ற நிலையை அடையும். இந்நிலைக்கு பாலை என்று பெயர்.
செயற்கை நீர் நிலைகளை மாந்தன் அமைத்துக் கொண்டது மருதம் கண்ட
பின்பே.அதற்கு முன்பு பெருமலை நாடான குறிஞ்சியில் வாழ்ந்த போதும்,பின்பு
காட்டு நிலமான முல்லையிலும்,குறிஞ்சியிலும் ஒருங்கே வாழ்ந்த போதெல்லாம்
இயற்கை நீர் நிலைகளான ஆற்றையும், பொய்கையையுமே சார்ந்து இருந்தான்.
ஆண்டின் எட்டு மாதங்கள் நீர் நிறைந்தும்,செழிப்பாகவும் இருக்கும்
குறிஞ்சியும் முல்லையும் இளவேனிற் காலத்தில் நீர் குறைந்தும்,முதுவேனிற்
காலத்தில் முழுதும் வற்றி வறண்ட நிலமாக மாறிப் போகும்.அத்தகைய வெப்பம்
நிறைந்த காலத்தில் வறண்டு போன குறிஞ்சி,முல்லை நிலங்களில் இருக்கும் பாலை
எனும் மரம் பால் போன்ற பிசின் வடிக்கும்.அப்பால் போன்ற பொருளால்
அம்மரத்திற்கு பாலை என்ற பெயரும்,அம்மரம் பால் வடிக்கும் முதுவேனில் கால
நிலையில் வறண்டு போன குறிஞ்சி, முல்லை நிலங்களுக்கு பாலை எனும் பெயர்
வந்தது.
அயல் நாடுகளில் போன்று வாழவே தகுதியற்ற பாலை வனம் போன்றதன்று பாலை
நிலம்.இது முது வேனிற் காலத்தில் வறண்டும், அக்காலம் முடிந்து கார் காலம்
தொடங்கியதும் இயல்பான செழிப்பான நிலைக்குத் திரும்பி விடும்.....
+++++++++++++++
மறவர் என்னும் சொல்லின் மூலம் வீரத்தைக் குறிக்கும் மறம் என்னும்
சொல்லாகும்.முல்(பொருந்தற் கருத்து வேர்) எனும் சொல்லினின்று வந்த மல்
என்ற சொல்லுக்கு பருமை,வலிமை என்னும் பொருட்கள் உள.இதிலிருந்தே வீரத்தைக்
குறிக்கும் மறம் என்னும் சொல் தோன்றிற்று.
முல்-->மல்-->மற்-->மறம்.
பாலை நிலம் இரு நிலைகளாக இருந்துள்ளதாக தெரிகிறது
1.மருதம் தோன்றும் முன்பு
2.மருதம் தோன்றிய பின்பு.
1.மருதம் தோன்றும் முன்பு ,செய்ற்கை நீர்நிலைகள் இல்லாத்தால்
குறிஞ்சியும்,முல்லை பெரும்பான்மை பாலையாக போகும் நிலை.
2.மருதம் தோன்றிய பின்பு ,மருதத்தில் செயற்கை நீர் நிலைகள் உருவாக்கத்
தொடங்கப் பட்டதால் நாட்டை(மருத நிலத்தை) ஒட்டி இருந்த முல்லை வாணர் முது
வேனிற் காலத்தால் பெரிதும் பாதிக்கப்படவில்லை.ஆனால் நாட்டை விட்டு வெகு
தொலைவில் குறிஞ்சியை ஒட்டி இருந்த மக்களோ பழைய படியே பாலை நில மக்களாய்
வாழ்ந்தனர்.
இவ்விரு நிலைகளில் மறவர் தனி குடியாய் பிரிந்தது இரண்டாம் நிலையிலேயே.
எனினும் மருதம் தோன்றும் முன் குறிஞ்சியிலும்,
முல்லையிலும் வாழ்ந்த ஆயரும்,வேட்டுவரும் மறவராய் மாறுவர்..அக்காலம்
முடிவடைந்ததும் பழைய வாழ்விற்கு திரும்புவர்.
++++++++++++
# புறப்பொருள்_வெண்பா_மாலை ,
கரந்தைப் படலம் 35 >>
குடிநிலைபொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?
வையகம் போர்த்த, வயங்கு ஒலி நீர் - கையகலக் கல் தோன்றி, மண் தோன்றாக்
காலத்தே, வாளோடு
முன் தோன்றி மூத்த குடி!
புறப்பொருள் வெண்பா மாலை பாடல் இது...கரந்தை திணையில் மறவர் ஆநிரையை
மீட்பதை புகழ்ந்து போற்றுகிறது..
கல் தோன்றி- மலை(பெருமலை குறிஞ்சியும்,சிறுமலை முல்லையும் சேர்ந்த
பகுதி)தோன்றிய காலம்.. ஆனால் மண்(மருதம்) தோன்றாத காலத்தே முன் தோன்றிய
குடி மறவர் குடி..எங்கிறது..
இதிலிருந்து பாலை மருதம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது தெளிவாகிறது...
பாலை நில குடிகள் மறவர் எனப் பெயர் காரணம்...பாலையில் வறட்சி நிலையில்
நெருக்கடியால் அந்நில மாந்தர் மறம் மிகுந்து செயல்படுவதால் தான்
இதனால் தான் மறவர் குடி என்று போற்றப்பட்டது....
(மேலும் சில விளக்கப்படங்கள் பின்னூட்டத்தில் உள்ளது.. செந்தமிழ்ச்
சொற்பிறப்பியல் அகரமுதலி மற்றும் பாவாணர் நூல் விளக்கப் படங்கள்...)
13 நிமிடங்கள் · பொது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக