வெள்ளி, 6 அக்டோபர், 2017

திமுக தேவகவுடா பிரதமர் பிரணாப் முகர்ஜி குடியரசுத்தலைவர் ஆக்கிய துரோகம் நடுவணரசு மத்திய அரசு கருணாநிதி

Kunnathur Chandra Gounder Venkatachalam
அங்கு வீழ்ச்சி! இங்கு விழா...!!
தமிழரின் காவிரி நீருரிமையைக் கொன்றவரும் ‘ஆரியம் போல் உலக வழக்கொழிந்து’
என்னும் சரியான வரிகளைக் கூட அரிந்தரிந்து தின்றவரும் அதேபாணியில்
உயர்தனிச் செம்மொழியாம் தமிழ்மொழியின் தொல்லுரிமைகளையும் கொன்று மென்று
தின்றவரும் கன்னட வெறியர் தேவகவுடாவைப் பிரதமராக்கிக் காவிரிக்குக்
கடைசிப் பூட்டைப் போட்டவரும் அதற்காக, தமிழர் சி.கே.மூப்பனார்
பிரதமராகும் வாய்ப்பைத் தகர்த்தவரும், மன்மோகன் சிங் அமைச்சரவையில்
தி.மு.க.வினரோடு அயலுறவு அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ச்சியை (
ஈழத்தமிழர் படுகொலைக்கு இந்தியாவைத் துணையிருக்கச் வைத்தவர்)-ஈழத்த
மிழருக்குத் துணையிருப்பதாகச் சொல்லிக்கொண்ட, அன்று மத்தியிலும்
மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த தி.மு.க. பிரணாப் முகர்சியின் தமிழர்
பிராணனை எடுக்கும் பித்தலாட்டத்திற்குத் துணைபோனதுடன், 2012-இல் நடந்த
குடியரசுத் தலைவர் தேர்தலில் அவரையே ஆதரித்து வெற்றிபெறச்
செய்யச்செய்தவரும் கொடிகட்டி ஆண்ட தமிழரினத்தின் அடிப்படை
உரிமைகளையெல்லாம் கடைகெட்ட வடவர்களிடம் அடைமானம் வைத்த திரிவடுகத்
தோன்றலுமான முத்துவேல் கருணாநிதி என்கிற பித்தலாட்டப் பேர்வழியின்
94-ஆவது பிறந்தநாள் விழாவிற்குத் (03.06.2017) தலைமைவகித்த தி.மு.க.
பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன், “இந்தியாவில் நேருவுக்குப் பிறகு
சிறந்த தலைவர் (Statesman) கலைஞரே” என்று சீர்சான்று வழங்கியிருக்கிற
ார். தங்களின் திராவிட தேசியத் தலைவர்களான தியாகராயர், நடேசனார்,
டி.எம்.நாயர், ஈ.வெ.ராமசாமி, அண்ணாத்துரை எவருடனும் ஒப்பிடாது, நேருவுடன்
ஒப்பிட்டது, ‘திராவிட தேசியம்’ இந்திய தேசியத்தில் இரண்டறக்
கலந்துவிட்டது என்பதைப் பறைசாற்றுவதாகும்.
இல்லையென்றால், இந்திய உதவியுடன் இலங்கையில் சிங்களப் பேரினவாத அரசால்
தமிழ்ப்புலிகள் வீழ்த்தப்பட்டு, ஈழத்தமிழர்கள் இனப்படுகொலைக்கு
ஆளாக்கப்பட்ட 2009-ஆம் ஆண்டு, ‘கலைஞரின் பிறந்தநாள் கொண்டாட்டம்
வேண்டாம்’ என்று தமிழுணர்வாளர்கள் கெஞ்சிக் கேட்டுக்கொண்ட போதும்
“முடியாது, கொண்டாடியே தீருவோம்” என்று அறிக்கை விட்டிருப்பாரா
அன்பழகனார்? அங்கே வெடிகுண்டு வேட்டுக்களால் தமிழினம்
சின்னாபின்னமாக்கப்பட்டபோது, இங்கே பட்டாசு வேட்டுக்களால், தமிழகத்தையே
அமளிதுமளிப்படுத
்தியிருப்பார்களா?
-எழுகதிர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக