Pasumpon singham.
வெயிலணன் கந்தசாமி
பழனியில் வாழ்ந்து மறைந்த பெரியவர் ஐயா
# சின்னப்ப_கவுண்டர் அவர்களை இரண்டு முறை அவரது இல்லத்தில் சந்தித்துள்ளேன்.
அவருக்கு நிகராக நாட்டுபற்றுடையவர்களை பார்ப்பது அரிது. நாங்கள் சென்ற
போது உடல் நலன் சரி இல்லாமல் இருந்தார்.
உட்காருங்கள் என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று ஒரு மாத்திரையை எடுத்து
தன் நாக்கு ஓரத்தில் வைத்துக்கொண்டு வந்தமர்ந்தார். இரண்டு நிமிடங்கள்
கழித்து பேசினார். இப்போதெல்லாம் உங்களோடு பேசுவதென்றால் என்னை நான்
தயார் செய்துகொள்ள வேண்டியதாக உள்ளது.
Netaji மீதும் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மீதும் அளவு கடந்த பற்று
கொண்டவர். மிகவும் சோர்வாக இருந்த அவர், தன்னுடைய தலைவர்கள் பற்றி பேச
துவங்கியதும் எங்கிருந்து தான் உற்சாகம் வருமோ தெரியாது.
நாட்டு நடப்பு குறித்து கவலையாக பேசினார். மதுக்கடைகளை அரசாங்கமே
நடத்தும் அவலம் குறித்து வருந்தினார். ஏதோ டாக்டர் ராமதாசு மட்டும் தான்
தொடர்ந்து மது ஒழிப்பு பற்றி பேசுகிறார் என்று சொன்னார். இளைஞர்கள் மீது
அதிக நம்பிக்கை கொண்டவராக இருந்தார்.
அவருடைய நம்பிக்கையை சிதைக்காமல் நாம் நடந்து கொள்ளவேண்டும் என்று
தோன்றியது எமக்கு.
திராவிட தலைவர்கள் பற்றி நாளொரு புனைகதை வெளியிடுகிறார்கள். ஆனால் எம்
தலைவர்கள் பற்றி உள்ளதைச் சொன்னாலே போதும்.
அவருடைய இந்த வார்த்தைகளை நான் சந்தித்த பலரிடமும் சொல்லியுள்ளேன்.
சின்னப்ப கவுண்டர் ஐயா போல எந்த பிரதி பலனும் எதிர்பாராமல் நாட்டுக்காக
சேவை செய்துள்ள பலரும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கொண்டாடி
வருகிறார்கள்.
இது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம்
இன்னும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் உள்ளது.
உதாரணததுக்கு சொல்லுவதென்றால், பசும்பொன் திருமகனார் அவர்கள் எத்தனை
ஆண்டுகள் நாட்டுக்காக சிறைவாசம் அனுபவித்தார் என்பது அனைவருக்கும்
தெரியும் ஆனால் பலருக்கும் தெரியாத ஒன்று என்னவென்றால், அவர் ஒரு முறைகூட
பிணை கேட்டு விண்ணப்பித்ததில்லை. அந்த வழக்கு விசாரனை முழுவதுமாக
முடிந்து தீர்ப்பு வந்த பின்னால் தான் அவர் சிறையிலிருந்து வெளியே
வந்திருக்கிறார்.
இது தெரியாமல் கமலகாசனின் சகோதரர் வழக்கறிஞர் ஒரு முறை
வாரபத்திரிக்கையில் பேட்டி கொடுக்கும் போது, "நாங்கள் அவருடைய வழக்கு
ஒன்றில் பிணை கேட்டு முன்னிலையானோம்" என்று கதை அளந்திருந்தார்.
அது ஒரு பொய் என்று தேவரின் பக்தர்கள் நிரூபித்தார்கள்.
பசும்பொன் திருமகனார் அவர்களை ஒரு இந்துத்வாகாரராக சிதிதரிக்க வேண்டிய
முனைப்பு பலரிடம் உள்ளது. ஆதாயம் தேட முனைபவர்களை முறியடிக்கும் வேலையை
தேவர் திருமகனாரின் தொண்டர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள்.
இந்த வாரத்தில் கூட தமிழ் இந்துவில் வந்த பிழையான செய்தியை பிழையானது
என்று முதலில் சுட்டிக்காட்டியது தேவரின் தொண்டர் ஒருவர்தான்.
ஆனால், கிடைத்த சிறு இடைவெளியில் பகடி செய்து பலரும்
எழுதியிருக்கிறார்கள். தவறான தகவலை வெளியிட்டதற்காக பத்திரிக்கை குறித்து
பகடி செய்யவேண்டும். ஆனால் பொச்சுக்காப்பு கொண்ட சிலர் தலைவர் பற்றி பகடி
செய்கிறார்கள். அது அவர்களின் இயல்பு என்று விட்டு விடலாம் அல்லது,
பசும்பொன் தேவர் திருமகனார் குறித்து பிழையான போலியான செய்தி தேவையில்லை
என்று அவரின் பக்தர்கள் நினைப்பதைகாட்டிலும் அவரின் விமர்சகர்கள்
நினைக்கிறார்கள் என்று நாம் மகிழ வேண்டியது தான்.
எனவே தேவருக்கு புணைகதை வரலாறு ஏதும் தேவையில்லை. அது போலவே அவரது மங்காத
புகழை யாராலும் மறைக்கவும் முடியாது.
இப்போது நடக்கும் சமபவங்கள் உணர்த்தும் பாடம் என்னவென்றால் ஏதாவது ஒரு
எதிர்மறையான விடயம் நடக்கும் போது மட்டும் அவர் பற்றி பேசாமல் அவ்வப்போது
அவர் கூறிய நல்ல கருத்துகளை முன் வைக்க வேண்டும்.
இனிமேல் இதனை நான் தொடர்ந்து செய்வேன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக