நாஞ்சில் வேடுவன் , 6 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Samy M மற்றும்
21 பேர் உடன்.
மாமன்னர் ஏறைக்கோன் குறவர்!
ஏறை!
ஏறு என்னும் பெயர் கொண்ட இந்த ஊர் இக்காலத்தில் 'காளையார் கோயில்'
என்னும் பெயருடன் வழங்கப்படுகிறது.
ஏறைக்கோன் படைத்தலைவன்!
ஏறைக்கோன் தன் படைவீரர்களைப் பழிக்கமாட்டான். தான் முன்னின்று
போர்புரிந்து வெல்வான்.
ஏறைக்கோன் தூதன்!
பகை வேந்தர்களின் அவையில் அஞ்சாது நடக்கும் ஆண்மை நிறைந்தவன்.
ஏறைக்கோன் பண்புகள்!
தன்னைச் சார்ந்தவர்கள் தனக்குத் தப்பு செய்தால் அதனை ஏறைக்கோன்
பொறுத்துக்கொள்வான். பிறர் தம்மை அறியாமல் செய்யும் தவறுகளுக்காகத் தான்
நாணுவான். அவர்கள் செய்யும் தவற்றினுக்குத் தானும் ஒரு காரணம் என்று
எண்ணும் மனப்பாங்கு உள்ளவன்.
குறவர் பெருமகன்!
ஏறைக்கோனைக் குறவர் பெருமகன் என்று புலவர் குறிப்பிடுவதால் இவன் மலைசார்
மக்களின் தலைவன் எனத் தெரிகிறது..
இவனது நான்கு பண்புகள் பாடலில் சுட்டபடுகின்றன!
1.இவனைச் சேர்ந்தவர்கள் இவனுக்குத் தீங்கிழைத்தால் அதனை அவன் பொறுத்துக்கொள்வானாம்.
2.பிறர் தவறு செந்தால் அதற்காகத் தான் நாணுவானாம்.
3.தான் போரிடும் படைக்குப் பழி வாராமல் போரிடும் வல்லமை பெற்றவனாம்.
4.வேந்தன் அவையில் பீடுடன் வீரநடை போடுவானாம்.
ஏறைக்கோன்!
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒன்று ஆனைமலை. ஆனைமலையைச் சங்கப்
பாடல் அறுகோட்டியானை என்று குறிப்பிடுகிறது. இக்காலத்தில் பழனி என்றும்,
திருமுருகாற்றுப்படையில் ஆவினன்குடி என்றும் கூறப்படும் ஊர்
சங்ககாலத்தில் பொதினி என்னும் பெயரைப் பெற்றிருந்தது.
ஆனை விலங்குகள் மிகுதியாக இருந்த மலை ஆனைமலை. காளையை ஏறு என்கிறோம்.
ஏறுகள் மிகுதியாக இருந்த மலை ஏறை.
ஏறைக்கோன் ஏறைமலை அரசன் ஏறைக்கோன். இவன் அரசனுக்காகத் தூதுசெல்லும்
வழக்கமுடையவன் எனத் தெரிகிறது. இவன் நாட்டில் வாழ்ந்த பெண்-புலவர்
குறமகள் இளவெயினி.
இந்தப் புலவர் பிறநாட்டு மன்னர்கள் முன்னிலையில் தன் நாட்டு அரசன்
ஏறைக்கோனின் பெருமையைப் பாடுகிறார்.
தம்மவர் தனக்குத் தீங்கு செய்தால் அதனைத் தாங்கிக்கொள்வானாம். பிறருக்கு
இழப்பு நேர்ந்தால் இவன் நாணுவானாம். படைவீரர் பழிக்காவண்ணம்
போரிடுவானாம். வேந்தர் அவையில் பெருமிதத்தோடு நடப்பானாம்[2].
அகநானூறு 1.
தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யறவு தான்நா ணுதலும்,
படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன் (5)
சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல்
கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்
ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக்
கட்சி காணாக் கடமான் நல்லேறு (10)
மடமான் நாகுபிணை பயிரின் விடர் முழை
இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
பெருங்கல் நாடன்; எம் ஏறைக்குத் தகுமே!
https://m.facebook.com/story. php?story_fbid= 473273206387281&id= 100011138173550&lul&ref_ component=mbasic_photo_ permalink_actionbar&_rdr

https://m.facebook.com/story.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக