புயல் எப்போதும் ஆந்திரா பக்கம் போய்விடுவது ஏன்?
தமிழகத்தில் மழை இல்லாமல் போவது ஏன்?
Kumarimainthan
கடலில் உருவாகும் புயல் எப்படி கரையேறி மழையைப் பொழிவிற்கிறது என்பதை
அறிவீர்களா? கடலின் மேல் ஓரிடத்தில் அண்டை இடங்களை விட வெய்யிலால்
வெப்பம் கூடும் போது அவ்விடத்திலிருந்து வெப்பமடைந்த காற்று மேல் நோக்கி
நகர அங்கு ஒரு வெற்றிடம் உருவாகிறது. அந்த வெற்றிடத்தை நிரப்ப அவ்விடத்தை
நோக்கி நாலாபக்கமுமிருந்து காற்று வந்து ஒன்றையொன்று மோத அவ்விடத்தில்
ஒரு சுழல் உருவாகிறது. சுழல் வேகம் பெறப்பெற அதன் உட்புறத்தில் வெற்றிடம்
பெரிதாகிறது. இந்த உருவாக்கத்தைத்தான் காற்றழுத்தத் தாழ்வுதிலை என்று
வானிலையியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்போது அது அண்டையிலுள்ள
காற்றழுத்தம் மிகுந்த இடத்தை நாடி அதை நோக்கி நகர்கிறது. பக்கத்தில்
நிலமிருந்தால் அங்கு காற்றழுத்தம் மிகக் கூடுதலாக இருக்கும் இடம் நோக்கி
நகர்கிறது. நிலத்தில் காற்றின் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் இடம் எது?
நிலத்தில் மிகப் பள்ளமாக இருக்கும் இடம்தானே? அங்குதானே அதன் மீதுதானே
மிக உயரமான காற்றடுக்கு இருக்கும்? அது பொதுவாக கடலில் ஆறுகள் கலக்கும்
இடமான கயவாய்கள் தாமே?
இந்தக் கயவாய்களில் என்ன நிகழ்கிறது? அதிலுள்ள மீ அழுத்தம் உள்ள காற்று
தாழ்வழுத்த நிலையிலிருக்கும் வெற்றிடத்தை நோக்கிப் பாய்கிறது. அதைத்
தொடர்ந்து ஆற்றின் ஒட்டத்தின் வழியாக இருபுறங்களிலும் நிலத்தில் உள்ள
காற்று தொடங்கி ஆறு மலையிலிருந்து இறங்கும் சிற்றோடைகள் மூலமாகவும் எல்லா
இடங்களிலிருந்தும் கடலை நோக்கிப் பாய்கிறது. அங்கு உருவாகும் அழுத்தக்
குறைவு கடலிலிருந்து ஈரத்தால் கனத்திருக்கும் மேல்மட்டக் காற்றை
நிலத்தினுள் இழுக்க அப்படி நிலத்துக்கும் கடலுக்கும் இடையில் ஒரு
காற்றுச் சுழற்கி ஏற்பட்டு மழையாக இறங்குகிறது.
இந்த நிகழ்முறையில் சாமிநாதன் நட்டு உருவாக்கிய மண்குதிர்க் காடுகள் என்ன
செய்தன? நம் தமிழகத்தின் கிழக்கு எல்லையில் இருக்கும் வங்காள
விரிகுடாவில் தமிழகத்தை ஒட்டி உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுநிலைக்கும்
கயவாய்க்கும் உருவாகும் தொடர்பை அறுத்துவிட்டன. எனவே காற்றழுத்தத்
தாழ்வுநிலைகள் அவை உருவாகும் இடத்துக்கேற்ப ஆந்திரம் அல்லது இலங்கைக்
கடற்கரைகளில் திறந்த நிலையிலிருக்கும் ஆறுகளின் கயவாய்களின் வழியாக
நிலத்தினுள் நுழைந்து அங்கு மழையைக் கொட்டித் தீர்த்துவிடுகின்றன.
இதுதான் 2004ஆம் ஆண்டைய ஓங்கலைக்குப் பின் தமிழகத்தின் மழைவீழ்ச்சி
சிறிது சிறிதாகக் குறைந்து இந்த ஆண்டு துப்புரவாக இல்லாமல் போகக் காரணம்.
தமிழகத்துக்காகக் களமாட ஆயத்தமாக இருக்கும் தமிழ்த் தேசியர்கள் ஒன்று
திரண்டு சாமிநாதன் உருவாக்கிய மண்குதிர்க் காடுகள் மட்டுமல்ல கடலுக்கும்
நிலத்துக்கும் காற்றுப் பரிமாற்றத்துக்குத் தடையாயிருக்கும் அனைத்தையும்
அகற்றும் பணியை மேற்கொள்ள வேண்டும்.
ஆறுகள் அல்லது ஓடைகள் கடலில் வீழும் இடங்களில் மீன்பிடி படகுகள்
தங்குவதற்கான தூண்டில் வளைவுகள் இருந்தால் அவற்றை அகற்றி அந்தப்
புள்ளிக்குச் சற்று மேலே வசதியான இடத்தில் பக்கவாட்டில் ஒரு நீர்நிலையைத்
தோண்டி அங்கு படகுகளை விட்டால் ஆற்றுவெள்ளம், புயல், ஏற்றவற்றங்கள்,
ஓங்கலைகளால் படகுகளுக்குக் கேடு விளைவது குறையும். படகுகளைப் பழுது
பார்ப்பதும் எளிதாக இருக்கும். அத்துடன் கயவாய்க்கு நேர் எதிரே ஆற்று
வெள்ளமும் கடலலையும் மோதும் இடத்தில் கடலில் உருவாகும் மணல் மேட்டையும்
அவ்வப்போது அகற்றும் கருவிகளையும் பொருத்துமாறு ஆட்சியாளரை நெருக்கிச்
செயல்படுத்தினால் பருவமழைகள் பொய்த்து நம் மாநிலத்தைப் பஞ்ச நிலமாக்காது.
ஆயத்தமா இளஞ்சிங்கங்களே!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக