திங்கள், 9 அக்டோபர், 2017

தவ்ஹீத் போன்ற இயக்கங்கள் செய்த கேடுகள் இசுலாமியர் பாதிப்படைதல் சகிப்புத்தன்மை குறைந்தது பிஜே

இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு
முன்னால்வரை
மத நல்லிணக்கமும்
மனித நேயமும்
சிநேக சிந்தனையும் கொண்ட
மாநிலமாக இருந்தது
தமிழ்நாடு !
*திடீரென்று தோன்றிய இஸ்லாமிய சீர்திருத்த இயக்கங்கள்*
இஸ்லாத்தில் இருக்கும்
மூட நம்பிக்கைகளை அகற்றுவதாக கூறிக் கொண்டு களத்தில் குதித்தன.
" அவன் சாமி நிக்கிது.
இவன் சாமி படுத்து கிடக்குது "ன்னு
தர்காக்களை கிண்டலடித்தார்கள்.
கூடவே அடுத்தவன் சாமியையும் கிண்டலடிக்கிறோம் என்பதை மறந்து போனார்கள்.
இவர்களின் தர்கா எதிர்ப்புப் போர்
முஸ்லிம் சமுதாயத்தையும் தாண்டி வெளியே போய்
பல்வேறு பரிமாணங்களைப் பெற்றது.
*" இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் "*
தலைப்பில் மாற்று மத மக்களையும் உட்கார வைத்து
வாதப் பிரதிவாதங்கள் நடத்தப்பட்டன.
*"முஸ்லிம்கள்" என்று முஸ்லிம்களை அறிந்து வைத்திருந்த* மாற்று மத மக்கள்
முஸ்லிம்களில் இத்தனை *வெரைட்டியா ?* என்று ஆச்சரியப்பட்டார்கள்.
*ஒரே பெருநாள்* *மூன்று பெருநாள்வரை*
விரிவாக்கம் பெற்று
" என்ன பாய் உங்க பெருநாள்
*சவுதிப் பெருநாளா? சாதாப் பெருநாளா ?* என்று கிண்டலாக மற்றவர்களை கேட்க வைத்தது.
சிவகாசி காலண்டர் கம்பெனிகாரன் கூட
நாட்காட்டிகளில் முஸ்லிம் பிறை போடுவதை தவிர்த்து விட்டான்.
முஹர்ரத்தில் இருந்து
முழு வருஷமும் முழுக் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள்.
முஸ்லிம்கள் பெரும்பாலானவர் களுக்கு
*" கபர் முட்டி "*
*" தர்கா புரோகிதர்"*
*"ஷிர்க்வாதி"*
*"நரகவாதி"*
பட்டங்களை வாரி வழங்கிய வள்ளல்கள் -
மாற்று மத மக்களையும் விட்டு வைக்கவில்லை.
"வாரியா... விவாதத்துக்கு வாரியா ?" ன்னு
ஒரு ஆளு பாக்கி இல்லாம அத்தனை பேரையும் அழைத்தார்கள்.
விவாதங்கள் எப்போதுமே இணக்கத்தை ஏற்படுத்தாது.
இணக்கத்தை இல்லாமல்தான் ஆக்கும்.
அதை புரிந்து கொள்ளாதவர்கள்
பூசாரி *மணிகண்டனை* கூட விட்டு வைக்கவில்லை.
இப்படி இந்து கிறிஸ்தவ பந்து மக்களோடு
விவாதம் என்ற பெயரில்
அவர்களின் மத நம்பிக்கைகளை
அவர்களின் வேதங்களை
அவர்களின் சடங்கு சம்பிரதாயங்களை
விமர்சித்து
அவர்களின் மனங்களில்
முஸ்லிம்கள் மீதான ஒரு வெறுப்பலையை
ஏற்படுத்தினார்கள்.
அதுவரை பொதுப் பிரச்சினைகளில் முஸ்லிம்களுக்கு ஆதரவாக
களம் இறங்கியவர்களும் குரல் கொடுத்தவர்களும்
கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கிக் கொள்ள ஆரம்பித்தார்கள்.
சந்தர்ப்பங்களை தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும்
சாதுரியமிக்க *மதவாத சக்திகள்*
முஸ்லிம் விரோத மனப்பான்மையை தங்கள் மக்களிடம் வளர்த்து விட ஆரம்பித்தார்கள்.
*ஓரிருவர் ஹீரோ* ஆவதற்காக
இவர்கள் *சமுதாயத்துக்கே வில்லன்*பட்டம் வாங்கிக் கொடுத்து விட்டார்கள்.
மத நல்லிணக்கம் என்பதை துடைத்தெறியாமல் விடப்போவதில்லை
என்று கங்கணம் கட்டிக் கொண்டவர்களைப்போல
*வணக்கம்*
*பொங்கல் வாழ்த்து கிறிஸ்துமஸ் வாழ்த்து* *தீபாவளி வாழ்த்துக்கூட சொல்லக் கூடாது*
சொன்னால் இவனும் அந்த மதக்கலாச்சாரத்த
ை பின்பற்றுகிறான் என்றுதான் அர்த்தம்.
அவன் போற இடத்துக்குத்தான் இவனும் போவான் என்ற பத்வாக்களைக் கொடுத்து
நரக பயத்தை காட்டி விட்டார்கள்.
*பிறந்தநாள் வாழ்த்து*க்கூட சொல்லமுடியாத
பரிதாப நிலைக்கு
ஒரு கூட்டத்தையே உருவாக்கி விட்டார்கள்.
*ஆன்மீகம் ...*
ஆன்மீக தளத்தோடு நின்றிருக்க வேண்டும்.
அதைத் தாண்டி கல்யாண மண்டபங்களில்
பிரியாணி விருந்தோடு வந்து
விவாத மேடைகளில்
கருத்து முரண்பாடுகளோடு கலந்து
மக்களின் மனங்களில் குரோதத்தை ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ந்து விட்டது.
அதுமட்டுமல்ல ...
ஆன்மீகத்தை
அரசியலோடு கலந்து
அங்கேயும் குழப்பத்தை ஏற்படுத்தி
ஒன்றுபட்ட ஒரு சமுதாயத்தை
பல கூறுகளாக்கி விட்டார்கள்.
அன்று ...
மதம் வேறுபட்டாலும்
முஸ்லிம்களோடு இணங்கி நின்றவர்கள்
இன்று ...
கொஞ்சம் அச்சத்தோடும் வெறுப்போடும்
விலகி நிற்கிறார்கள்.
*இது முஸ்லிம்கள்* *தங்களுக்குத்* *தாங்களே*
*ஏற்படுத்திக் கொண்ட விதி.*
மனிதர்கள் தங்கள் கரங்களாலும் நாவாலும்
தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள்
என்று *இறைவனே* சொல்லிவிட்ட பிறகு
நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை.
*படித்ததில் பிடித்தது....*
Imran Khan S

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக