வெள்ளி, 6 அக்டோபர், 2017

தேங்காய் பால் தாய்ப்பால் எண்ணெய் தயாரிப்பு முறை எடை குறைந்த குழந்தை களுக்கு மேலும் மருத்துவம் குணம்

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு MCT எனப்படும் medium chain
triglycerides மருந்தாக கொடுக்கபடுவது ஆங்கில மருத்துவத்தில் தேங்காய்
எண்ணெய் தான்.ராகி கூழில் தேங்காய் நெய் சிறிதளவு நாட்டு சர்க்கரை கலந்து
குழந்தைக்கு ஊட்டும் நம்ம பாட்டிக்கு MCT பற்றி அறிந்திருக்க வாய்ப்பு
இல்லை ஆனால் தேங்காய் நெய் எனப்படும் vergin coconut oil தாய்பாலை விட
சிறந்தது என்று நம்ம பாட்டிக்கு தெரிந்தது நவீன அறிவியலுக்கு பாட்டிக்கு
பின்பு தான் தெரிகிறது ......
தாய்பாலில் மட்டுமே இருக்கும்
மோனோலாரிக்அமிலம் சரியான முறையில் உருவாக்கபடும் தேங்காய் நெய்யில்
அதிகம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் ...
கேரளாவில் மலபார் பகுதிகளில் குழந்தை பிறந்தவுடன் தாய்பால் தரமாட்டார்கள்
இந்த தேங்காய் நெய்யை கொடுத்த பின்பு தான் தாய்ப்பால் புகட்டுவார்கலாம்
மேலும் நாகர்கோவில் திருவிதாங்கூர் சமஸ்தானங்களிலும் இந்த பழக்கம் உள்ளது
என்று எனது கேரளா நண்பர் Faiz கூறினார்
எழுத படிக்க கற்றுக்கொண்ட நடுத்தர வர்க்கத்தின் பொது புத்தியில்
பதியவைக்கபட்ட கொலஸ்டிரால் இரத்த அழுத்தம் இதய்நோய் இவற்றிற்கு
முக்கியமான காரணம் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் என்பது மேற்கத்திய
நாடுகள் தங்களின் ஆலிவ் ஆயிலை அவர்களால் உருவாக்கபட்ட பாமாயிலை
இந்தியாவில் சந்தைபடுத்த உருவாக்கப்பட்ட போலியான தரவுகளை முன் வைத்து
செய்த பொய் பிரச்சாரம் தான் தேங்காய் எண்ணெய் தீங்கு என்பது ...
இன்று இதயத்திற்கு பலம் தரும் high density lipoprotein தேங்காய் நெய்
எனப்படும் vco ல் உள்ளதால் தேங்காய் எண்ணெய் இதயத்திற்கு சிறந்தது என்று
அவர்களின் ஆய்வுகள் தற்போது கூறுவதை நோக்கினால் தேங்காய் எண்ணெய்யின்
மகத்துவத்தை உணரலாம்.கடந்த சில வருடங்களாக தேங்காய் எண்ணெய் ஏற்றுமதி
ஐரோப்பா நாடுகளுக்கு அதிகரிப்பதையும் கருத்தில் கொண்டு யோசிப்போம் ...
Mr.பொதுஜனங்களே தேங்காய் எண்ணெய் போன்ற தாவர எண்ணெயில் கொலஸ்டிரால்
கிடையாது விலங்குகளின் கொழுப்பு பால் நெய்யில் தான் கொலஸ்டிரால் அதிகம்
என்பதை புரிந்து கொள்ள முயலுங்கள் ....
2009 வருடம் வெளிவந்த இந்திய அரசாங்கத்தின் மருத்துவ அறிக்கையில் இதய
நோயாளிகள் குறைவாக இருந்த மாநிலம் தேங்காய் எண்ணெய் அதிகமாக
பயன்படுத்தும் கேரளா என்பதை கவனிக்கவும் ...
உடலில் உள்ள கொழுப்பை சீர்செயவதில் தேங்காய் நெய்யின் பண்பு மிக மிக
சிறப்பானது. நான் ஒருமாதமாக காலையில் ஒரு தேக்கரண்டி vco சாப்பிட்டு வந்த
பின்பு சோதனை செய்து பார்த்ததில் Ldl&hdl சீராகி இருந்ததை உணர்ந்தேன்
கடந்த வருடம் டிசம்பரில் உடல் எடை மூன்று கிலோ குறைந்தது மிகவும் சிறப்பு
.
அது மட்டுமல்லாமல் நேற்று சென்னையில் சுற்றி திரிந்த போது உடல் கலைப்பு
உடலில் சூடு அதிகமாகி கண்கள் சிவந்து காணபட்டதும்,ஒரு தேக்கரண்டி vco
பயன்படுத்திய ஐந்து நிமிடங்களில் கண் எரிச்சல் தீர்ந்து கண்ணில் இருந்த
சிவப்பு நிறமும் மறைந்தது அப்போது என்னால் உணரப்பட்டது இது
கல்லீரலுக்கும் மிகவும் இசைவானது என்று ....
ஜமைக்காவில் vco தான் பயன்படுத்துகிறார்கள் உலகில் வேகமாக ஓடுபவர்கள்
இந்த நாட்டுகாரர்கள் என்பதும் உலகின் அதிவேகமாக ஓடும் உசைன் போல்ட்
குழந்தையில் இருந்து இப்போது வரை தினமும் பயன்படுத்துவது இந்த
vcoஎனப்படும் தேங்காய் நெய் தான் .
தேங்காய் நெய்(vco)செய்முறை :
பத்து தேங்காய் அதிகம் முற்றாதது
துருவி அவற்றில் தேவைகேற்ப சூடான தண்ணீர் ஊற்றி பத்து மணி நேரம் நொதிக்க
வைத்த பின்பு வடிகட்டி சிறுதீயில் எரிக்க நானூறு மில்லி எண்ணெய் வரை
கிடைக்க கூடும் இதில் இருந்து உருவாகும் மணம் மிக மிக சிறப்பாக
இருக்கும்.... தயவுசெய்து நீங்களே உற்பத்தி செய்து பயன்படுத்துங்கள்
வியாபாரத்திற்கா
க விற்கப்படும் எண்ணெயில் நாம்,எதிர்பார்க்கும் குணம் இருப்பதற்கு
வாய்ப்பு மிக மிக குறைவு ....
இதன் சிறப்பை தனித்துவத்தை பயன்படுத்துபவர்களால் மட்டுமே உணரமுடியும்
என்னை பொருத்தவரை மிகச்சிறந்த உணவு மருந்து தேங்காய் நெய் எனப்படும்
Vergin Coconut Oil(VCO).
இதை பற்றிய நிறைய தரவுகள் உண்டு என்றாலும் நண்பர்கள் தாங்கள் அறிந்த
விடயங்களையும் கருத்திட்டால் சிறப்பாக இருக்க கூடும் .
Chellam Selva

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக