திங்கள், 9 அக்டோபர், 2017

சௌராஷ்ட்ரா இனப்பற்று பற்றி வந்தேறி ஆதிக்கம் மாபியா

ராஜா காசு உடையார்
எங்கள் ஊரில் செளராஷ்ட்ரா மொழி பேசும் மக்கள் (நகரத்தில்)
பெரும்பான்மையாக வாழ்கிறார்கள். இரண்டு பேர் சந்தித்துக் கொண்டால்
செளராஷ்டிர மொழியிலேயே பேசுவார்கள். அதிலும் மூன்றாவது நபராக யாராவது
தமிழர் இருந்துவிட்டால் அவரை "அயிட பெடுக்கா' என்பார்கள் ("அங்க சமூகம்"
என்றால் நம்ம ஆள்; அயிட - வெளி ஆள்; பெடுக்கா=பையன்) இருந்தாலும் கூட
நம்மை மதிக்காமல் அந்த மொழியிலேயே பேசிக் கொண்டு இருப்பார்கள்.
சமீபத்தில் மதுரையில் நடந்த அவர்கள் சமூக மாநாட்டிற்கு இரண்டு நாட்கள்
தங்கள் கடைகளை மூடி விட்டு; மற்ற நிறுவனங்களுக்கு விடுமுறை விட்டு விட்டு
சென்றார்கள். அந்த அளவிற்கு சமூக உணர்வு உள்ளவர்கள். மோடியை கூட தங்கள்
சொந்தக்காரர் என்று நம்புபவர்கள் அவர்கள்.
அவர்களில் ஒருவர் நாட்டாமை அந்தஸ்தில் இருப்பவர் அவர் வீட்டில் ஒரு
அதிசயம் நடந்தது. உள்ளாட்சி தேர்தலில் மாமியார் அதிமுக வேட்பாளராக
போட்டியிட்டார். மருமகள் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். இந்த அதிசயம்
வேறு யார் வீட்டிலும் நடக்க முடியாது. இதைவிட பெரிய கூத்து என்ன என்றால்
செளராஷ்டிர இளைஞர்களில் சிலர் சேர்ந்துகொண்டு விடுதலை சிறுத்தை கட்சியில்
இணைந்தார்கள். அவர்கள் அந்த கட்சி பொறுப்பாளரை அழைத்து விடுதலை சிறுத்தை
கொடியை தங்கள் பகுதியில் ஏற்றினார்கள். ஊரே அதிசயமாய் பார்த்தது.
பட்டியல் வகுப்பு மக்கள் இருக்கும் பகுதியிலேயே விடுதலை சிறுத்தை கொடி
இல்லாத நேரத்தில் செளராஷ்டிரர்கள் அந்த கட்சியிலும் சேர்ந்தது அவர்களின்
சாதுர்யத்தை காட்டியது.
முன்னம் ஒரு முறை தேர்தலில் எம்.எல்.ஏ வேட்பாளராக இரண்டு செளராஷ்டிரர்கள்
போட்டியிட்டபோது, செளராஷ்டிர சங்கம் சார்பாக இருவரையும் அழைத்து
இருவருக்கும் பணம் கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள். அவர்களை பொருத்தவரை
யார் வெற்றி பெற்றாலும் அது செளராஷ்டிரராக இருக்க வேண்டும் என்பது தான்
ஒரே குறிக்கோள். எல்லா கட்சியிலும் தங்களவர்கள் இருக்க வேண்டும் என்று
நினைப்பார்கள்.
தற்போது நாம் தமிழரில் கூட செளராஷ்டிரர்கள் உயர் பதவிகளில்
இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
வீடுவாடகைக்கு விடுவது கூட செளராஷ்டிரர்களை தவிர யாருக்கும் விட
மாட்டார்கள். தங்களுக்கு உள்ளே பிரச்சனைகள் என்றால் சமூக பெரியவர்களை
வைத்து தீர்த்துக் கொள்வார்கள். தேவை இல்லாமல் காவல் நிலையம் வழக்கு
என்று போக மாட்டார்கள்.
தங்கள் பெயருக்கு முன்னால் இரண்டு தலைப்பெழுத்து (இன்ஷியல்) போடுவார்கள்.
ஒன்று தங்கள் குடும்ப பெயர், அடுத்தது தங்கள் தகப்பன் பெயர். (குப்பல்
ஜி.தேவதாஸ் என்றால்; குப்பல் என்பது குடும்ப பெயர்)
ஒற்றுமை என்றால் என்ன என்று இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்..
மாரிமுத்து ஜவஹர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக