ஞாயிறு, 8 அக்டோபர், 2017

லதா ரஜினிகாந்த் பள்ளி வாடகை பாக்கியால் மூடப்பட்டது தினமலர் புதியதலைமுறை பத்திரிக்கை செய்தி

வாடகை பாக்கி கொடுக்காத ரஜினிகாந்த் மனைவி: ஆஸ்ரம் பள்ளி இழுத்து மூடல்
வாடகை பாக்கி கொடுக்காத ரஜினிகாந்த் மனைவி: ஆஸ்ரம் பள்ளி இழுத்து மூடல்
 Web Team தமிழ்நாடு 16 Aug, 2017 05:52 PM
சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் மனைவி நடத்தும் பள்ளி கட்டடத்திற்கு வாடகை தராததால்
பள்ளி இழுத்து மூடப்பட்டது .
கிண்டி ரேஸ் கோர்சில் ரஜினிகாந்தின் மனைவி லதா தலைமையில் ஆஸ்ரம் என்ற
பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளி செயல்பட்டு வரும் கட்டடத்திற்கு,
லதா ரஜினிகாந்த்
வாடகை பாக்கி கொடுக்காததால், அதன் உரிமையாளர் வெங்கடேஷ்வரலு நுழைவாயிலை
பூட்டியுள்ளார். பல மாதங்களாக
வாடகை தராததால் வெங்கடேஷ்வரலு நீதிமன்றத்தை நாடியதாகவும் கூறப்படுகிறது.
அவருக்கு 2 கோடி ரூபாய் கொடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதுவரை பணத்தை தராததால், பள்ளியின் நுழைவாயிலை இன்று பூட்டியதாக
வெங்கடேஷ்வரலு தெரிவித்தார். அதனையடுத்து வேளச்சேரியிலுள்ள ஆஸ்ரம்
பள்ளிக்கு கிண்டி பள்ளி மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர். இதனிடையே,
பள்ளியின் சாவி தொலைந்துவிட்டதாக நிர்வாகம் தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி கட்டடம் தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்
எனவும் ஆஸ்ரம் பள்ளி நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரச்னை தொடர்பான
முழுமையான விளக்கத்தை வெளியிடும்வரை காத்திருக்குமாறும் ஆஸ்ரம் பள்ளி
தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஆஸ்ரம் பள்ளி ஆசிரியர்களுக்கு முறையாக ஊதியம் கொடுப்பதில்லை என
புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/27103-rajinikanth-s-wife-who-did-not-pay-rent-azram-pulled-the-school-and-closed.html

ரஜினியின் 'ஆஸ்ரம்' பள்ளிக்கு பூட்டு மாணவ மாணவியர் அலைக்கழிப்பு
மாற்றம் செய்த நாள்: ஆக் 17,2017
00:33
86
சென்னை: வாடகை பாக்கி மற்றும் இட பிரச்னை காரணமாக, நடிகர் ரஜினி மனைவி
நடத்தும், 'ஆஸ்ரம்' பள்ளிக்கு பூட்டு போடப் பட்டது.
சென்னை, கிண்டியில், வெங்கடேஸ்வரலு என்பவருக்கு சொந்தமான இடத்தில், ரஜினி
மனைவி லதா, ஆஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்தி வருகிறார். இங்கு,
300க்கும்
மேற்பட்ட, மாணவ மாணவியர் படிக்கின்றனர். அறங்காவலராக, ரஜினி உள்ளார்.
பள்ளி இடம் தொடர்பாக, கடந்த ஆண்டு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தொடரப்பட்டு இருந்தது. இதில், சமரச மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில்,
வாடகை நிலுவைத் தொகை, மாத வாடகை மற்றும் காலி செய்வது தொடர்பாக, சமரச
தீர்வு காண போவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு, லதா தரப்பு
ஒத்துழைக்கவில்லை என, கூறப்படுகி றது. இந்நிலையில், நேற்று முன்தினம்
மாலை, வெங்கடேஸ்வரலு தரப்பினர், பள்ளி வாயில் கதவை, பூட்டுப் போட்டு
பூட்டினர்.
அவர்களுடன் பள்ளிதரப்பினர் பேச்சு நடத்தியும், சமரசம் எட்டப்படவில்லை.
இதனால் நேற்று, மாணவ மாணவியர் பள்ளிக்குள் செல்ல முடியா மல் தவித்தனர்.
இதையடுத்து, வாகனங்கள் மூலம், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள, மற்றொரு
ஆஸ்ரம் பள்ளிக்கு, அவர்கள் அழைத்துச் செல் லப்பட்டனர். ஆதம்பாக்கம்,
கிண்டி, ஆலந்துார் பகுதியில் இருந்து வரும் மாணவ மாணவியர், திடீர்
இடமாற்றத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த தகவல்தெரிந்து, மாணவ மாணவியரின்
பெற்றோரும், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
http://m.dinamalar.com/detail.php?id=1835283

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக