ஞாயிறு, 8 அக்டோபர், 2017

கர்நாடகா மேலும் 3 அணை கட்ட எடப்பாடி அரசு ஒப்புதல் அதிமுக துரோகம் காவிரி காவேரி நதிநீர் கன்னடர்

அவசர செய்தி
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 3 பெரிய அணைகளை  கட்ட
கர்நாடகா முயற்சித்து வருவது அனைவரும் அறிந்ததே. உச்ச நீதிமன்றத்தில்
நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு பற்றிய விசாரணையில் கர்நாடக அரசின் மேகதாது
அணைத்திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இவ்வணைகள்
கட்டப்பட்டால்   கர்நாடகாவில் எவ்வளவு மழை பெய்தாலும், தமிழகத்திற்கு ஒரு
சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி,
ஈரோடு, கரூர், நாமக்கல், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட
12 மாவட்டங்கள் வறண்ட பாலைவனமாகும். விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள்
தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழப்பர். கால்நடைகள் தீவனமின்றி செத்து
மடியும். இதில் காங்கேயம் சல்லிக்கட்டு காளைகளும் மடியப்போகின்றன. மிகக்
கடுமையான உணவுப்பஞ்சமும் ஏற்படும். அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய
உணவுப்பொருட்கள் பிற மாநிலங்களில் இருந்து இறக்குமதிசெய்யப்படுவதால்,
அவற்றின் விலை பன்மடங்கு உயரும். இத்தனை ஆபத்துக்கள் உள்ள மேகதாது
அணைத்திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்து தமிழ்நாட்டை சுடுகாடாக்க உள்ளது
ஆளும் அ.தி.மு.க அரசு. இவை அனைத்தும் தம் ஆட்சியைக்காப்பாற்றிக்கொள்ள
மத்திய பா.ஐ.க வின் கைப்பாவையாக உள்ள அ.தி.மு.க. அரசின் மன்னிக்க முடியாத
துரோகம்.
இனி காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் கூட வராது. இவ்வணை கட்டுமான பணிக்கு
தமிழகத்திலிருந்து 7500 லாரிகளில் கருங்கற்கள், சல்லிக்கற்கள் மற்றும்
50,000 லாரிகளில் ஆற்று மணல் ஆகியவை தமிழகத்தில் இருந்து ஏற்கனவே கொண்டு
செல்லப்பட்டு விட்டன. இதற்கான கட்டுமான தொழிலாளர்களில் பெரும்பாலானோர்
தமிழகத்தின் கோவை மாவட்த்தில் இருந்து செல்ல இருக்கிறார்கள்.
இனி தமிழ்நாட்டில் காவிரி என்று ஒரு நதி பாய்ந்தது என்று வரலாற்று
புத்தகங்களில் மட்டுமே படிக்க முடியும். நதியைக்காண முடியாது.
இந்த பேராபத்தை தடுக்க நாம் சல்லிக்கட்டிற்கு போராடியதை விடவும் மிகக்
கடுமையான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும். இச்செய்தியை தயவு செய்து
உங்கள் வாட்ஸ் அப் இணைப்பில் உள்ள அனைத்து contacts, Groups, Broadcast
list உள்ளவர்களுக்கு உடனடிய்க அனுப்பி இச்செய்தி தமிழக மக்கள்
அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக