திங்கள், 9 அக்டோபர், 2017

ஈழம் எனில் கள் ஈழவர் நாடார் தீயர் சாணார் பனை தொழில் பெயர்களே பாவாணர் வேர்ச்சொல் சொல்லாய்வு சாதி பட்டம்

தமிழன் சுரேஷ் அகம்படி மறவன் , 6 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் —
Suresh N மற்றும்
அழகன். விம உடன்.
# நாடார்>> தமிழ்ச்சாதிகளின் பெயர்களின் தோற்றம் பற்றிய வேர்ச்சொல் பார்வை...
++++++++++++
தமிழ்நாடு சாதி பட்டியலின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வரிசை எண் 74 ல்
உள்ள சாதி நாடார்.நாடார் என்பதும் கிராமணி என்பது சாதி பெயர் இல்லை.
பட்டங்களே.
நாடார் என்பது தமிழ்ப் பட்டம். கிராமணி என்பது சமஸ்க்கிருத பட்டம். ஈழவர்,தீயர்,சாண
ார் போன்றவைகளே சாதி பெயர்களாகும்.
நாடார்,கிராமணி இரண்டுமே நிர்வாக பணிகளில் ஈடுபடுவோருக்கான
பட்டங்களாகும். கிராமணி என்பது கிராம நிர்வாகிக்கான சமக்கிருத பட்டம்.
நாடார் தமிழ்ப் பட்டம்...
கள்ளைக் குறிக்கும் சாறு என்னும் சொல்லினின்றே சாறு+ஆண்மை--->ச
ாற்றாண்மை-->சான்றாண்மை. சான்றாண்மை தொழில் செய்வோர் சான்றார்.அதுவே
சாணார் என மருவிற்று.ஒப்பு நோ:வேளாண்மை செய்வோர் வேளாளர்.
ஈழம் என்ற சொல்லுக்கு கள் என்ற பொருளும் உள்ளதை நோக்க வேண்டும்.ஈழவர்
என்பதற்கு ஈழத்தில் இருந்து வந்தவர் என்ற பொருள் மண்ணின் மக்களை
வந்தேறிகளாக காட்டும் நம்பூதிரிகளின் முயற்சிகளுள் ஒன்றே.ஈழவர் என்ற
சொல்லுக்கு கள் இறக்கும் தொழில் செய்வோர் என்பதே பொருளாகும்.
தீயம் என்ற சொல்லுக்கு இனிப்பு, இனிப்பான பொருள் என்பதே பொருளாகும்.தீயர்
என்ற சொல்லுக்கு இனிப்பான பதநீர் இறக்கும் தொழில் செய்வோர் எனும் பொருள்
சாலப் பொருந்துகிறது.
தீயர் என்பதற்கு தீவிலிருந்து வந்தவர் என்றும் ஈழவர் என்பதற்கு
ஈழத்திலிருந்து வந்தவர் என்றும் பொருள் கூறுவது அடிப்படை ஆதாரம்
இல்லாது,மண்ணின் மக்களை இருட்டடிப்பு செய்யும் உள்நோக்கமும் கொண்டதே...
படங்கள்>> செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக