திங்கள், 9 அக்டோபர், 2017

புலிகள் மீது கொலைப்பழி ரஜினி திரணகமவை பெண்

முறிந்தபனை புத்தகத்தை எழுதி ரஜினி திரணகமவை யாழ்ப்பாண பல்கலைக்கழக
வாயிலில் வைத்து சுட்டுக்கொன்றது யார் என்பதை கொன்றவர்களே பத்திரிகை
வாயிலாக ஒப்புக்கொண்டபின்பு இன்றும் விடுதலைப்புலிகளின் மீது குற்றம்
சுமத்தி இலக்கியவாதிகள் வரலாற்றையும் உண்மையையும் திரிவுபடுத்தி இந்திய
ராணுவமும் ரோ அமைப்பும் கூட்டுசேர்ந்து செய்த பல நூற்றுக்கணக்கான
படுகொலைகளினிமித
்தம் வழிந்த குருதிக்குள் உண்மைகளை புதைக்க முயன்று வெகுவாகவே
நிர்வாணப்பட்டு நிற்கின்றனர்.........
மட்டக்களப்பு சிறையை தகர்த்து ரஜினி திரணகமவின் சகோதரியை மீட்டு
லண்டனுக்கு அனுப்பிவைத்தவர்கள் புலிகளே
இந்தியாவின் அடிமை வேலைகளை செய்ய ஈழத்தீவில் தங்கியிருந்த
ஒருலட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தின் பாலியியல் சேஷடைகள் களவு
கஞ்சா பாத்தீனிய செடிகளை ஈழத்துக்கு கொண்டுவந்தது யார் என்பதை இந்த
இலக்கியவாதிகள் எப்படி மறந்தார்கள்
ஈழத்தை விட்டு சென்ற பல இந்திய ராணுவத்தினரின் பைகளில் ஈழத்தில்
கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் பெருமளவில் இருந்து கண்டுபிடிக்கபட்
டது
இவை எல்லாம் பேசு பொருள் அல்ல
(ரகு)
மனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள்( UTHR(j) ) எனும்
அமைப்பு 1988 களில் யாழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கூற்றியல்துறைத்
தலைவர் மறைந்த ரஜினி திரணகமவினால் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பின்
நோக்கம் அக்காலகட்டத்தில் தமிழர்தாயகத்தில் பலராலும் இடம்பெற்று வந்த
மனிதவுரிமை மீறல்ச் செயற்பாடுகளைக் கண்டித்து அவற்றை வெளியுலகிற்குக்
கொண்டுவருதலாக அமைந்திருந்து. இவ்வமைப்பினுள் பல்வேறு எண்ணங்கள்,
கோட்பாடுகள், ஆதரவுநிலைப்பாடுகளைக் கொண்ட நபர்கள் உறுப்பினர்களாக
இருந்தனர். ஈழமண்ணில் இந்திய அமைதிப்படையினர் நிலைகொண்டிருந்தகாலத்தில்
இந்தியப் படைகள்,சிறிலங்காப் படைகள்,புலிகள், மற்றும் ஈழத்தில்
அக்காலத்தில் இயங்கி வந்த தமிழ் ஆயுதக் குழுக்களின் மனிதவுரிமை மீறல்கள்
பற்றி வெளிக் கொணர்ந்திருந்தனர். இதில் முக்கியமானதாக "முறிந்த பனை"
எனும் நூல் இந்தியப்படைகள், சிறிலங்கா அரசபடைகள், புலிகள், தமிழ்
ஆயுதக்குழுக்களின் கொலை,கொள்ளை,ஆட்கடத்தல்,நீதிக்குப் புறம்பான
நடவடிக்கைகளை அப்பட்டமாக எடுத்துரைப்பதும்,விமர்சிப்பதும
ானதொரு நூலாகும்.
ஆரம்ப காலங்களில் ரஜினி புலிகளுக்காகச் செயற்பட்டாரெனக் கூறப்படும்
பொழுதிலும் பின்னாட்களில் அவர்களின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த
ு அவர்களை விட்டுவிலகி அவர்கள் மேற்கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
இந்திய அமைதிப்படையினரின் மனிதவுரிமை மீறல்களை
வெளிப்படுத்தியிருந்தமையால் அவர்களாலும் நெருக்குதல்களுக
்குள்ளாகிய இந்தியப் படைகளால் பல தடவைகள் இவரின் வீடு
சோதனைக்குள்ளாக்கப்பட்டு இவரின் ஆவணங்கள் பல இந்தியப்படைகளால்
சேதப்படுத்தப்பட்டும் எடுத்துச் செல்லப்பட்டுமிருந்தன.(ஆதாரம்: அற்புதன்,
அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை தொடர்கள் 176,186)
இந்தியாவில் தேர்தலால் ஆட்சி மற்றம் ஏற்பட்டு ராஜீவ்காந்தி தோல்வியைத்
தழுவிய பின்னர் பிரதமராக பதவியேற்ற பி.வி.சிங் 1989 செப்ரொம்பர் மாதம் 20
திகதியன்று இந்தியப்படைகள் இலங்கையிலிருந்து வெளியேறுமென
அறிவித்தார்.அடுத்த நாளான 1989 செப்ரொம்பர் 21 ஆம் திகதியன்று
மனிதவுரிமைச் செயற்பாட்டாளரும் உடற்கூற்றியல் மருத்துவருமான கலாநிதி ரஜனி
திரணகம ஆயுததாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்படுகின்றார்.
மனிதவுரிமைகளுக்கான யாழ்பல்கலைக்கழக ஆசிரியர்கள் (UTHR(j) )அமைப்பு
ரஜினியால் உருவாக்கப்பட்டு ராஜன்ஹூல், தயா சோமசுந்தரம், சிறிதரன் உட்பட
பலர் இயங்கியிருந்தாலும் பிற்காலத்தில் பலர் அவ்வமைப்பை விட்டு
விலகியிருந்தனர். 90 களின் பின்னர் யாழ்,பல்கலைக்கழகத்தில் மேற்போன்றதொரு
அமைப்பு இயங்கவில்லையெனவும் அறிவித்திருந்தனர். ரஜினி திரணகம
இருந்தவரையில் துடிப்புடன் இயங்கிய இவ்வமைப்பு 90 களின் பிற்பட்ட
காலங்களில் யாரால், எங்கிருந்து இயக்கப்படுகின்ற
தென்பது தெரியாமல், புலிகளை,அவர்களின் குற்றம்,குறை, செயற்பாடுகளையே
அதிகளவில் விமர்சித்து வந்ததுடன் ஏனையவர்களின்செயற்பாடுகளை ஒரு
கண்துடைப்புப் போலவே சாடி வந்ததிருந்தது.
மேற்படி அமைப்பின் அதன் உத்தியோக பூர்வ இணையத்தளத்தில் அவ்வமைப்பின்
இறுதி அறிக்கையாக 11 யூன் 2009 திகதியிடப்பட்ட Deportation of Bob Rae:
Some Fundamental Questions for the future of Minorities and the
Erasure of Democracy எனும் அறிக்கையே காணக்கிடைத்தது, எனினும் UTHR(j)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இனிமேல் இயங்கமாட்டாது என்ற அறிவித்தலுடன்
ஒரு அறிக்கையொன்றினையும் 02.01.2010 அன்று வெளியிட்டிருந்ததாக Wikipedia
மூலம் அறிய முடிகின்றது. புலிகளைக் குற்றஞ்சாட்டுவதிலேயே முழுமையாகத்
தன்னை ஈடுபடுத்தியிருந்த UTHR(j) அமைப்பானது 2009 மே புலிகளின்
அழிவுக்குப் பின்னர் ஈழத்தமிழினம் சிங்கள ஒடுக்குமுறையரசி
னால் எவ்வாறான வழிகளிலெல்லாம் இனப்படுகொலைக்குட்பட்டு
வருகின்றார்களென்பதனை வெளியுலகிற்கு அம்பலப்படுத்துவதனை விடுத்து
திடீரெனத் தனது செயற்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்தமையானது இவ்வமைப்பானது
இதுவரைகாலமும் பேசி வந்ததாக சொல்லப்படும் மனிதவுரிமை போன்ற விடயங்களும்,
இதனது செயற்பாடுகளும் ஒரு பக்கச்சார்புடையதாகவும் , ஏதோவொரு
பின்னணியுடனும், வெறொருவர்காகவுமே செயற்பட்டு வந்திருந்தது என்றே எண்ணத்
தோன்றுகின்றது.
- Karvanna Subhas
3 மணி நேரம் · பொது

Aathimoola Perumal Prakash
புலிகள் சிறைமீட்ட பெண் வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக