ஞாயிறு, 8 அக்டோபர், 2017

ஆப்பிரிக்கா பிக்மி பழங்குடிகள் மருத்துவம் அறிவு

Venkatesa Kumar K
நேற்று பிக்மி குள்ளர்கள் பற்றிய டாக்குமெண்டரி பார்த்தேன்,அவர்கள்
ஆப்பிரிக்காவில் வசிக்கும் தொல்குடிகள்.
"காட்டுவாசிகள் என்றால் படிக்காதவர்கள் என்ற பிரமை படித்த நகர்ப்புற
மக்களிடம் இருக்கிறது.அப்ப
டித்தான் நானும் நம்பி கொண்டு இருந்தேன்.ஆனால் பிக்மி (கிரேக்க மொழியில்
குள்ளர்) என நாம் அழைத்தாலும் அவர்களுக்கு தாம் அப்படி அழைக்கப்படுவதே
தெரியாது.தம்மை அபா (மக்கள்) என அவர்கள் அழைத்துகொள்கிறார்கள்.
ஒவ்வொரு பிக்மிக்கும் 3000 செடி, மரங்களின் பெயர்கள் அவை எந்த பருவத்தில்
பூக்கும்,காய்க்
கும்,எப்போது கனிகளை உண்ணலாம் அவற்றுக்கு வரும் நோய்கள் என சகலமும் தெரிந்துள்ளது.ஒ
வ்வொரு பிக்மியும் ஒரு மருத்துவருக்கு சமம்.பிக்மி ஒருவரை பாம்பு
கடித்தது அடுத்த நிமிடம் ஒருவர் காலில் கட்டுபோட்டார்,ஒருவர்
காடுகளுக்குள் ஓடி இலைகளை சேகரித்து வந்தார்.அதை அரைத்து விழுங்கியதும்
குணமாகி அரை மணிநேரத்தில் அவர் பயணத்துக்கு தயாராகிவிட்டார்.
எலும்பு முறிவு முதல் குணமாக்கவே முடியாத மலேரியா காய்ச்சல் வரை பல
நோய்களுக்கும் ஒவ்வொரு பிக்மிக்கும் சிகிச்சை முறை தெரியும்.
அனைவருக்கும் வீடுகள்,ஆயுதங்கள் செய்ய தெரியும்.ஒவ்வொரு பிக்மியும் ஒரு
பயாலஜி,பாட்டனி டிகிரி,மருத்துவர், எஞ்சினியர் டிகிரி படித்தவருக்கு
சமம். ஆனால் நாம் அவர்களை 'படிக்காதவர்கள்' என இகழ்கிறோம்" என்கிறார்
எழுதினவன் ஏட்டை கெடுத்த கதை தானே நகர்ப்புறத்தில்?
Thanks
Post from Neander Selvan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக