திங்கள், 9 அக்டோபர், 2017

குறவர் கிண்டல் செய்து பாடல் மலையாளம் இளவெயினியார் இயக்கம் தொடர்பெண்

இளவெயினியார் பண்பாட்டுக் கலை இலக்கிய மன்றத்தின் சார்பாக ஒரு வேண்டுகோள்.

உறவுடையீர், வணக்கம்.

இளவெயினியார் பண்பாட்டுக் கலை இலக்கிய மன்றம், கு(ன்)றவரை ஊடகங்களில்
'குறவன் குறத்தி ஆட்டம்' என்ற பெயரில் இழிவுபடுத்துவதையும்; குறவன்
என்றால் திருடன்;  குறவன்-குறத்தி காமக்கொடூரர்கள்;  குறவன் என்றால்
நரிக்குறவன் (எ) குருவிக்காரன்தான் என்ற பொதுப்புத்தியை கட்டமைப்பதையும்
வன்மையாக கண்டிக்கின்றது.  கட்டமைக்கப்பட்டு வருகின்ற தவறான பொது
புத்தியைத் தகர்த்தெறிவது இம்மன்றத்தின் செயல் திட்டங்களில் ஒன்றாகும்.

கன்னடத்திலும் தெலுங்கிலும் குறவர்கள் வேறு பெயர்களில்
அழைக்கப்படுகின்றனர்.  தமிழ், மலையாள மொழிகளில் குறவன்-குறத்தி
என்றழைக்கப்படுகின்றனர்.  1972-இல் 'குறத்தி மகன்'  என்ற திரைப்படம்
வெளியானது .  1980-ஆம் ஆண்டில் 'கரை கடந்த குறத்தி'  (அன்றைய நமது
எதிர்ப்பினால்) ஒருத்தியாக மாற்றி வெளியிடப்பட்டது.  1978-இல்
மலையாளத்தில் வெளியான 'ஒட்டகம்' என்ற திரைப்படத்தில் "ஆற்றின்கரநின்னு
குறவன் புல்லாங்குழலூதி"  என்ற பாடல் அமைந்துள்ளது  (இணைப்பில் காண்க).
எமக்கு போதிய மலையாள புலமை இல்லாததால் இப்பாடல் குறவன் குறத்தியை எவ்வாறு
சித்தரிக்கிறது;  இப்பாடலில் விஞ்சி நிற்பது எது என முழுமையாக அறிய
இயலவில்லை.

எனவே மலையாளம் நன்கு அறிந்தவர்கள் இதன் பொருள் எதனைச் சுட்டுகின்றது என
தெரிவிக்க வேண்டுகிறேன்.

இளவெயினியார் பண்பாட்டுக் கலை இலக்கிய மன்றத்திற்காக,
குறிஞ்சி கொ. செல்வராசன்
9442117881
மின்னஞ்சல்:  eklavyaksr2k@gmail.com

[29/09 11:39] ஆதி பேரொளி: மலையாளத்தில் உள்ள தமிழ் சொற்களை வைத்தே இதன்
பொருளை புரிந்துகொள்ள முடிகிறது
[29/09 11:40] ஆதி பேரொளி: குறவன் குறத்தி ஆற்றில் இறங்கி தவறாக
வெட்கத்தை விட்டு கூடிக்கலந்ததாக இந்த பாடல் மிக மிக கேவலமான தொனியில்
பாடப்பட்டுள்ளது
[29/09 11:41] ஆதி பேரொளி: மலையாளி குற்றால மலை பூர்வகுடி தமிழர்களை வேறு
எப்படி பாடுவான்?
கவட்டுக்குள் அறிவுகொண்ட இனம்😡
[29/09 11:43] ஆதி பேரொளி: குறவன் குழலாதினானாம்
குறத்தி மார்பைக் காட்டினாளாம்
வயிறைக் காட்டினாளாம்
இருவரும் வெட்கத்தை விட்டு உடல் கலந்தார்களாம்
வெயில் கூடி ஆற்று நீர் வற்றியதாம்
பிறகு குறத்தி வெட்கம்கொண்டு ஓடியே போனாளாம்
[29/09 11:44] ஆதி பேரொளி: குறவரை கிண்டல் செய்யும் வகையில் ஏளனமான
தொனியில் பாடப்பட்டுள்ளது
இதை எப்படி பொதுவெளியில் அனுமதித்தனர் என்று தெரியவில்லை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக