Karupaiya Ramanathan
கல்கத்தாவில் நகரத்தார்கள் :
கல்கத்தா நம்நகரத்தார்களின் வணிகம் செய்தநகரங்களில் மிகவும் முக்கியமான
ஒருநகரம். 1800களில் நகரத்தார்கள் கொல்கத்தா துறைமுகநகரில்
வணிகம்செய்துவரத்துவங்கினர்
நகரத்தார்கள் வணிகம் சிறப்பாக அந்நிய நாட்டு வியாபாரிகளுடன் சுமுகமான
உறவால் ஏற்றுமதி தொழில் சிறப்பாக நிகழ்ந்ததால் கடைகளும் பெருகின.
கொல்கத்தாவில் மூர்கியாட்டாவில் வேல் ஒன்றை நிறுவி ஒற்றுமையாக 1840 வரை
ஒற்றுமையாக ஒரே வீட்டில் வணிகமும் பூசை செய்துவந்தனர். ஆட்கள்
பெருக்கமும் ஒற்றுமை குறைபாடு ஏற்பட்டு நகரத்தார்கள் காரைகுடியார்
தேவகோட்டையார் என்று இருபிரிவு வந்தது. திருவுளச்சீட்டு முறையில் இதில்
தேவகொட்டையார்க்கு வீடும் காரைக்குடியார்க்கு சாமி என்று வந்தது.
காரைக்குடியார் கன்னிங் தெருவில் 64ஆம் வீட்டுக்கு மாறினார்
தேவகோட்டையார் தங்கள் வீட்டிற்கு தங்கள் ஊரில் இருந்து வேலை உடனடியாக
கொண்டுவந்தார்கள். வேலுக்கும் சிங்காரமுருகேசர் என்று பெயர்வைத்து
அழைத்தனர் .அதோடு தேவகோட்டையார் வீட்டை பெரிய வீடுஎன்றும் காரைக்குடியார்
வீட்டை சின்னவீடு என்று ஆங்கிலேயர் அழைத்தனர் .
1861ல் சூயஸ் கால்வாய் திறந்ததன் விளைவாக பர்மா அருசிக்கு ஐரோப்பிய
சந்தையில் நல்ல விலை கிடைத்தது அதன் அதன்காரணமாக கல்கத்தா நகரத்தார் பலர்
பர்மாவிற்கு கடைகளை மாற்றினர். சிலர் அரவை ஆலைகளையும் அங்கு நிறுவினர்
இதன் காரணமாக கல்கத்தா நகரத்தார் வர்த்தகம் குறைந்து கடைகளும்
குறைந்தது.1883ல் நகரத்தார்கள் ஒன்றிணைந்து தொழிலை மேம்படுத்தினர்.
1886ல் கல்கத்தா நகரத்தார் சிங்காரமுருகேசருக்கு இருவீட்டாரும் விழா
எடுக்க எண்ணி கூட்டம் கூடி ஆண்டுக்கு ஒருவர் விழா எடுக்க முடிவுசெய்து
ஒப்புகொண்டனர். திருவுள்ளசீட்டு பெரியவீட்டார் முதலில் விழாஎடுக்க
சாதகமாக வந்ததால் அவர்களே விழாவை முதலில் துவங்கினர் .
சிங்காரமுருகேசருக்கு சித்திரை பௌர்ணமிநாளில் காளிகட் பகுதிக்கு சென்று
அங்கு 5நாள் பூசைகள் ஏற்று திரும்புவது வழக்கம். இந்த விழாவிற்காக
வெள்ளிதேர் புதிதாக செய்யப்பட்டது. அதோடு உற்சவருக்கு தங்கம் வைரம்
மற்றும் இரத்தினஆபரணங்கள் செய்யப்பட்டன. அதோடு விழாவின் பொது திருப்புகழ்
பாராயணம் மற்றும் தமிழ் கவிகள் பாடப்பட்டன. விழாவின் ஐந்து நாட்களும்
அன்னதானங்கள் பல செய்தனர் .இந்த விழாவின் பொது வெள்ளித்தேரில் முருகன்
பவனிவரும்போது வங்காளிகள் சொன்னார் கார்த்திக் என்று முருகனை அன்போடு
அழைப்பர். அதோடு பூசைகள் மற்றும் காணிக்கை செலுத்தி வழிபடுவர்.
1893ல் இந்த விழா பங்குனி உத்திரத்திற்கு மாற்றப்பட்டது.
விழாவின் சிறப்பு என்னவென்றால் அழகன் பவனிவரும்போது இடையூறுகள்
இல்லாதவாறு டிராம்கள் மற்றும் போக்குவரத்து இடையூரு இல்லாமல் சிறப்பாக
பார்த்துகொண்டனர். அதோடு கொல்கத்தா நகரில் வளம்வரும்போது கவர்னரின்
சார்பாக அழகனுக்கு மாலைமரியாதைகள் செய்தனர்.
காலங்கள் சென்றதும் மீண்டும் பிரிவினை வந்தது. விழாவின் பொது காளிகட்
விடுதியை சின்ன வீட்டார் பூட்டினர்.அப்போது பெரியவீட்டார் கல்கத்தா
நீதமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு பெரியவீட்டார் புறம் தீர்பானது.
பின் திருவிழா சிறப்பாக நிகழ்ந்தது. இருவீட்டாரும் ஒருவருக்கு ஒருவர்
செலவு தொகையை வாங்குவதில்லை என்று முடிவு செய்து வீம்புகள் செய்துகொண்டு
இருந்தார்கள்.
1907இன் போது பூசையின் ஒருவரின் மீது முருகன் இறங்கி இருவீட்டாரும்
இணைந்து பூசை நிகழ்த்தக்கூறி சொல்ல அதன் விளைவாக பூசையில் இருவீட்டாரும்
கலந்துகொண்டனர் .
1907ல் சின்னவீட்டார் கடைகள் நொடிக்க துவங்கிய பொது அங்கிருந்த வேல் ,
இடும்பன் , விநாயகர்விக்ரகம் எல்லாம் 1863இல் ஹிஸ்துஸ்தானி கோசாயி
சாதுக்கள் விடுதியை விலைக்கு வாங்கி புனரமைக்கப்பட்ட
ு நிறுவப்பட்ட காசி நகரவிடுதியில் கொண்டு வந்து பிரதேதிஷ்டைசெய்தனர்
நகைகளையும் ஒப்புவித்தனர். அதோடு கோவில் மகமைத் தொகையில் பெரும்பகுதியை
விடுதியை விரிவுபடுத்த கொடுத்தனர் பின் 1935ல்கொல்கத்தா பெரியவீட்டு
நகைகளும் ஒப்புவிக்கபட்டன.
1914ல் முதல் உலகபோரால் தொழில் மந்தம் ஏற்பட்டது அதன் காரணமாக
சின்னவீட்டார் கடைகளின் எண்ணிக்கை மிகவும் நொடித்துபோய்விட்டது. அதன்
காரணமாக சின்னவீட்டார் வெள்ளிரதத்திற்க
ு கொடுத்ததொகை மீண்டும் அவர்களுக்கே பெரியவீட்டார் கொடுத்தனர் .
1917ல் எஞ்சி இருந்த கடைகள் நொடித்து போக துவங்கியதன் காரணமாக வெள்ளிரதம்
திருப்பாபுலியூர் சிவாலயம் சில நகரத்தார்கள் புரமைக்கும்பொது
கல்கத்தாவில் உள்ள ரதம் விற்பனைக்கு உள்ளதை அறிந்து அதற்கான விலையை
கொடுத்து ரதத்தை கடலூருக்கு கப்பலில் கொண்டுவந்து திருப்பாபுலியூர்
இறைவனுக்கு அற்பணித்தனர்.
1918ல் கல்கத்தா நகரத்தார்களுக்க
ு30க்கும் குறைவான கடைகளே இருந்தன. தங்கள் கடைகளுக்கும் சொந்தமான இடம்
வேண்டும் என்றும் காசி , பிராயாகை , ஹரித்துவார் ,காயா , தாரகாநாத் போன்ற
இடங்களில் தாங்கள் துவங்கிய சிவபணி நிகழ வருமானம் அமையவேண்டும்
என்றநோக்கில் எஸ்ரோ தெருவில் வெள்ளையரிடம் ஒரு கட்டிடத்தை வாங்கி
அஸ்திவாரத்தை தவிர்த்து கட்டிடத்தின் பிறபகுதிகளை முழுவது இடித்து
செட்டிநாட்டு பாணியில் (கீழ்த்தளத்தை சேர்த்து ) மூன்றுமாடி கட்டிடம்
6120சதுர அடியில் சுமார் ரூபாய் 122396 செலவில் 1921ல் கட்டிமுடிக்கப்ப
ட்டது.
1930 பெரியவீட்டுக்கடைகளும் நொடிக்க துவங்கியது.அப்போது தங்கள் வீட்டில்
வைத்திருந்த வேலவர் , இடும்பன் , விநாயகர் மூர்த்திகளை கொண்டுசென்று
நகரத்தார்கள் ஸ்ட்ராண்ட் ரோடுடில் அரசமரத்தின் அடியில் இருந்த ஒரு
லிங்கத்திற்கு 80000செலவில் குடமுழுக்கு நிகழ்த்தி சிவனுக்கு நாகரேஸ்வரர்
என்ற பெயரும் அம்பாளுக்கு நகரேஸ்வரி என்ற பெயர் சூட்டி விழாவை நிகழ்த்திய
ஆலயத்தில் கொண்டுசென்று நிறுவினர்.இன்றும் இந்த மூர்த்திகளை அங்கு
காணலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக