திங்கள், 9 அக்டோபர், 2017

ராக்காயி ராக்காச்சி முத்தரையர் வலையர் கோயில் அழகர் மலை

துரை. இராஜகுமரன்
கோயில் பெயரில் ராக்காயி யாகவும், மக்கள் வழக்கில் ராக்காச்சியாகவும
வாழ்ந்து கொண்டிருக்கும் அழகர் மலையின் மேலுள்ள ராக்காச்சி கோயில்.
அழகர் மலையில் வேர் விட்டு, வெள்ளாற்றங்கரையில் கிளை வெடித்ததைப்போல
வெள்ளாற்றின் வடக்கு வெளியில் நூற்றுக்கணக்கில் அரும்பி நிற்கும்
முத்தரையர்களின் பிடிமண் போயில்களுக்கு தாய் வீடாக இருப்பது அழகர்
மலையின் ராக்காச்சி கோயில்தான். பிடிமண் கதைகள் காலச்சுழற்சியில் கரைந்து
விடக்கூடாது என்பதற்காகவே 'கிளை'களுக்கு விழா எடுக்க வேரினைத் தேடிச்
சென்று ராக்காயி தீர்த்தத்தை வாங்கி வருவதை கட்டாயமாக்கி
வைத்துள்ளார்கள்...
என்றோ ஒருநாளில் அந்த மலையிலிருந்தோ, அந்த மலையின் வீச்சிற்கு உட்பட்ட
எல்லையிலிருந்தோ
தான் இடம் பெயர்ந்தோம் என்பதன் வரலாற்று நினைவாகவே ... வழிபாட்டின்
வழியில் ராக்காச்சி நிலைத்து விட்டாள். நாட்டுப் பிரிவில் எதுவாக
இருந்தாலும் எங்கள் பகுதியில் , குல தெய்வமாக இல்லாவிட்டாலும் கூட குல
தெய்வத்திற்கு அருகிலேயே கல்லாகவோ, மரமாகவோ, பீடமாகவோ ராக்காச்சியையும்
அமர வைத்து வணங்குவதே வலையர் குடியின் வழக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக