செவ்வாய், 10 அக்டோபர், 2017

நாம்தமிழர் ஐநா வில் ஹிந்தியா தமிழ்நாடு தேசிய இனங்கள் மீதான மனிதவுரிமை மீறல் குறித்து பேச்சு நாதக ஜெனிவா

சீனி. மாணிக்கவாசகம் , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார்.
சர்வதேச அரசியலில் சரியான பாதையில் பயணிக்கும் நாம் தமிழர் கட்சி .....
# அறிவாயுதம்
===================================
தமிழ்நாட்டில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் , உரிமை பறிப்புகள் பற்றி
ஐநாவில் நடந்த மாநாட்டில் நாம் தமிழர் குழு பங்கேற்பு.
19.09.2017 செவ்வாய் அன்று ஐக்கியநாடுகள் சபையின் 36 வது கூட்டத்தொடரில்
11 வது அரங்கில், 80 மில்லியன் தமிழ் மக்கள் வாழும் இந்திய மாநிலமான
தமிழ்நாட்டில் நடக்கும் பல்வேறு மாநில உரிமைப்பறிப்புகள், மனித உரிமை
மீறல்கள் பற்றிய மாநாடு நடைபெற்றது. அதில் நாம் தமிழர் கட்சியின்
சார்பில் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்
# அறிவுச்செல்வன் , சமூக ஆர்வலர்
# பொன்_சந்திரன் , இயக்குனர்.
# ஜெகதீச_பாண்டியன் ஆகியோர் பல நாடுகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் உரையாற்றினர்.
இதில், இந்தியாவின் தேசிய இனங்கள் தொடர்ச்சியாக மத்திய அரசால்
ஒடுக்கப்படுகிறது, மாநில அரசின் கல்வி அதிகார பறிப்பு, பாடத்திட்ட
திணிப்பு என்கிற கருத்தியலில் சமூக ஆர்வலர் பொன் சந்திரன் அவர்கள்
பேசினார். மேலும், இந்தியாவின் அரசியல் அமைப்பு சட்டப்படி கூட்டாட்சி
தத்துவத்தை இந்தியா செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார்.
வழக்கறிஞர் அறிவு செல்வன் பேசும் போது, தமிழ் நாட்டில் இயங்கி வரும் அகதி
முகாம்களில் அரசால் நடத்தப்படும் கொடுமைகள் பற்றி பேசினார். மேலும்
அகதிகள் முகாம் என்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்று, அதை கட்டாயம் நீக்க
வேண்டும் என வலியுறுத்தினார்.
இயக்குனர் ஜெகதீச பாண்டியன் அவர்கள் தமிழ் மொழியின் தொன்மை பற்றியும்,
தமிழ் மொழி உரிமை 80 மில்லியன் தமிழ் மக்கள் வாழும் எங்களது சொந்த
மாநிலமான தமிழ்நாட்டிலேயே பல்வேறு இடங்களில் மத்திய மாநில அரசுகளால்
பறிக்கப்படுகிறது, இந்தி திணிப்பு, இந்தி மயமாக்கல், இவைகளை
தமிழ்நாட்டில் இந்திய அரசாங்கம் வலுக்கட்டாயமாக செயல்படுத்துவதாக குற்றம்
சாட்டினார்.
அதைத்தொடர்ந்து கேள்வி, பதில்களுடன் மாநாடு நிறைவுற்றது.
ஜீவா டானிங் , ஐநா செயல்பாடுகள் ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

https://m.facebook.com/story.php?story_fbid=350654825375495&id=100012929417392&refid=28&_ft_=qid.6467846321398260300%3Amf_story_key.3169226778191193387%3Atop_level_post_id.350654825375495&__tn__=%2As-R&fbt_id=350654825375495&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_bd99e8b1532216c50f82db3a70788489

violence of indian state in tamil homeland

tamilnadu a southern state of india homeland of 80million tamils

தொழிற்சாலை பாதுகாப்பு ராணுவம் குவிப்பு ராணுவமயமாக்கல்
நதிநீர் மாநிலஉரிமை புறக்கணிப்பு
விவசாயி தற்கொலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக