ஞாயிறு, 8 அக்டோபர், 2017

தொல்காப்பியம் இலக்கணம் தொடை வகை 13000 மேல்

இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் தமிழ் நூல்களில் மிகவும் பழமையானது
தொல்காப்பியம். சங்க கால நூல்களில் இதுவும் ஒன்று.
இதற்கு முன்னரே பல நூல்கள் தமிழில் தோன்றி இருந்தாலும் அவையெல்லாம்
கிடைக்கபெறவில்லை.
தொல்காப்பியம் ஒன்றே இன்றளவும் நமக்கு கிடைத்த காலத்தால் பிந்தைய நூலாக இருக்கிறது.
இப்போது நாம் உச்சரிக்கும் வார்த்தைகள் எல்லாம் எப்படி வாயில் இருந்து
பிறக்க வேண்டும் என்று அப்போதே விளக்கப்பட்டுள்ளது.
கணினி இல்லாத அந்தக்காலத்திலேயே தமிழில் உள்ள தொடை வகைகள் 13,699 என்று
அறுதியிட்டு உரைத்திருப்பது, அவரின் காலத்திற்கு முன்பே தமிழ் எவ்வளவு
பண்பாட்டு இருக்க வேண்டும் என்று மேலை நாட்டு மொழியியல் வல்லுநர்களே
வியக்கின்றனர்.
தொடை என்பது தமிழில் யாப்பிலக்கணத்தில் செய்யுள் உறுப்புக்கள் வகையைச் சேர்ந்தது.
செய்யுள்களின் சீர்களும், அடிகளும் தொடுத்துச் செல்லுகின்ற முறையுடன்
சம்பந்தப்பட்டிருப்பதால் தொடை என வழங்கப்படுகின்றது.
செய்யுள்களின் ஓசை நயத்துக்கும், அவற்றின் இனிமைக்கும் தொடைகள் முக்கியமானவை.
எழுத்தோடு எழுத்து சேர்ந்து அசைகள் அமைகின்றன. அசையோடு அசை சேர்ந்து
சீர்கள் அமைகின்றன.
சீரோடு சீர்சேர்ந்து தளைகளும் அடிகளும் அமைகின்றன. இவ்வாறு அமையும்
பல அடிகளால் ஒரு பா உருவாகிறது.
பா என்பதும், பாட்டு என்பதும், செய்யுள் என்பதும் மிகுந்த பொருள் வேறுபாடு ஏதும்
இல்லாமல் இங்குப் பயன்படுத்தப் பெறுகிறது.
தொடுத்தல் என்பதிலிருந்து தொடை என்னும் சொல் பிறந்துள்ளது. ஓசை ஒழுங்கோடு
தொடுக்கப்படுவதால் இதை நம் முன்னோர் தொடை எனக் குறித்தனர்.
மாலை என்பதைக் குறிக்கத் தமிழில் ‘தொடையல்’ என்றும் ஒரு சொல் உள்ளது என்பதும் இங்கு
நினைத்தற்குரியது.
தொடை என்னும் செய்யுள் உறுப்பு பாடலில் உள்ள அடிகள்தோறும் ஒரு
குறிப்பிட்ட வகையிலான ஓசை இயைபு வருமாறு பாடலை இயற்றுதல் பற்றி அமைகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக