வெள்ளி, 21 ஜூலை, 2017

வாக்குச்சீட்டு கு பதிலாக சரிபார்க்கும் சீட்டு ஏமாற்றுவேலை மோசடி

aathi tamil aathi1956@gmail.com

மார். 22
பெறுநர்: எனக்கு
அளித்த வாக்கை வாக்குப்பெட்டிய
ின் நினைவகத்தில் வேட்பாளரின் கணக்கில் சேமிப்பதும்,
அளித்த வாக்கை Print செய்வதும் வேற வேற circuit...
இது அடிப்படை வன்பொருள் மென்பொருள் வடிவமைப்பு...
நாம் அளித்த வாக்கை Print செய்யும் போது சரியாக Print செய்யும்படியும்
சேமிக்கும் போது வாக்கை மாற்றியும் சேமிக்க முடியும்...
வாக்கு எண்ணிக்கையின் போது நம்மிடம் கொடுக்கப்பட்ட Print செய்யப்பட்ட
ஒப்புகைச் சீட்டுகளை எண்ணமாட்டார்கள்...சேமிப்பகத்தில் என்ன
சேமிக்கப்பட்டிருக்கிறதோ அதை தான் எண்ணுவார்கள்...
ஆக, ஒப்புகைச் சீட்டு வந்துட்டா ஒப்புகைச் சீட்டுல இருக்குறவருக்குத்
தான் நாம அளிச்ச வாக்கு போயிருக்குன்னு அருத்தம் இல்ல...
சந்தேகத்தைத் தீர்ப்பது தான் ஒப்புகைச் சீட்டின் நோக்கமென்றால், அந்த
சந்தேகம் இம்முறையால் தீராது...இம்முறையால் மட்டுமல்ல வேறு எம்முறையாலும்
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் இன்னாருக்குத் தான், தான் அளித்த
வாக்கு நினைவகத்தில் சேமிக்கப்பட்டது என்பதை வாக்காளரால் சரி பார்க்க
முடியாது...இது மத்திய மாநில அரசுகளுக்கும் தெரியும்...
வளர்ந்த நாடுகள் பல மின்னணு வாக்குப்பதிவு முறையில் நம்பகத்தன்மை
இல்லையென்று காகித வாக்குப்பதிவு முறைக்கே சென்றுவிட்டன...இருந்தும்
இங்கே மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை திணிக்கிறார்கள்
...அம்முறையைக் காப்பாற்றப் போராடுகிறார்கள்...
மேலும், ஒப்புகைச் சீட்டை வாக்குச்சாவடியை விட்டு எடுத்து வரக்கூடாது
என்பதும் இங்கு நோக்கத்தக்கது...அங்கேயே அழிச்சிடணுமாம்...Privacy என்பதை
காரணமாகக் காட்டி, தப்பு நடந்தாலும் தப்புக்கான ஆதாரம் எல்லாத்தையும்
அழிக்கிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது...

தேர்தல் ஓட்டு வாக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக