ஞாயிறு, 9 ஜூலை, 2017

ஒரெழுத்து கவிதை க கா கி ஏகாக்ஷரம் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

3/8/14
பெறுநர்: எனக்கு
பாடுபவரின் மொழிபுலமை மற்றும் மொழியின்
செழுமையை மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்
படி அமைந்தவை சித்திரக்கவிகள் என்பது ஆய்வலர்
முடிவு. தமிழ் தவிர பிற மொழிகளில் இந்த
கவி அமைப்பு கிடையாது   சித்திர கவியின்
பிரிவான ஒரெழுது சித்திர கவி இதை படித்துப்
பாருங்கள்.

கொக்கொக் கிகைக்கா காக் ககக்கை
காக்காகா காக்கைக் கொக் கீகைக்
கை கோக்  கை
-
ராஜராஜன்
பொருள் :
அசையாமல் நிற்கும்  கொக்கு  போல்
மனதை நிறுத்தி தியானித்தல், கடவுள்  பொறுமை
இல்லாத காகம் போன்று

ஓரெழுத்து கவிதை மருத்துவம் அளவீடு காதம் காளமேகம்

aathi tamil aathi1956@gmail.com

26/7/14
பெறுநர்: எனக்கு
காளமேகம்
---------------------
( 15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப்
புலவர் ;இவர் வசைப் பாடல்கள் பாடுவதில்
வல்லவர்;இவர் ஒரு ஆசு கவி
திருவானைக்கா உலா, சரஸ்வதி மாலை, பரப்பிரம்ம
விளக்கம், சித்திர மடல் முதலியவை இவர் இயற்றிய
நூல்களாகும்.
சிலேடைப் பாடல்களும், நகைச் சுவைப் பாடல்களும்
பல )
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி..
துத்தித் துதைதி துதைத்தத்தா தூதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது
ஆடிக்குடத்தடையும், ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகங்காட்டும் - ஓடி மண்டை
பற்றிற் பரபரெனும் பாரிற் பிண்ணாக்கு முண்டாம்
உற்றிடும் பாம்பெள்ளெனவே ஓது
வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன
இங்கார் சுமந்திருப்பார் இச்சரக்கை
மங்காத, சீரகத்தை தந்தீரேல்
வேண்டேன் பெருங்காயம்
வேரகத்துச் செட்டியாரே
நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதன்
முடிமேலிருக்கும்
வெஞ்சினத்துப் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயுஞ் சோலைத் திருமலைராயன் வரையில்
பாம்பாகும் வாழைப்பழம்
முன்னே கடிவாளம், மூன்று பேர் தொட்டு இழுக்கப்
பின்னே இருந்து இரண்டு பேர் தள்ள – எந்நேரம்
வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை
மாதம் போம் காத வழி!
காத தூரம்
----------------------
’காதம்’ என்பது பழங்காலத் தமிழ் அளவுமுறை.
ஒரு காதம் = சுமார் ஆறே முக்கால் கிலோமீட்டர்
வெள்ளி · Doha, Qatar · பொது

தமிழ்மொழி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக