|
3/8/14
![]() | ![]() ![]() | ||
பூங்காக்கள் என்றாலே அவற்றில் பூக்கள், செடிகள்,
கொடிகள், மரங்கள் என்று உயிருள்ள தாவரங்கள்தாம்
இருக்கும். பெரம்பலூருக்கு அருகே சாத்தனூர்
கிராமத்தில் "தேசிய கல்மரப் பூங்கா' நம்மைத்
திகைக்க வைக்கிறது. கல்லில் மரங்களா?
என்று சற்று வியப்புடன் விழிகளை உயர்த்திப் பார்க்
கிறோம். சாத்தனூர் கிராமத்தில் 10 கோடி ஆண்டுக
ளுக்கு முன் தோன்றிய மரம் ஒன்று புவியின் தோற்ற
வரலாற்றுக்குச் சான்றுகூறும் தடயமாக இப்
போது படுத்திருக்கிறது.
இப்போது இந்த ஊருக்கு கிழக்கே 100 கிலோ மீட்டர்
தொலைவில் கடல் அமைந்துள்ளது.
ஆனால் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூரின்
மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர் வரை கடல் பரவியி
ருந்ததாகப் புவியியல் ஆய்வுகள் கூறுகின்றன.
புவியியல் வரலாற்றின்படி இக்காலம் "கிரிடேசஸ்
காலம்' என்று அழைக்கப்படுகிறது. இக்காலத்தில்
இன்று இருப்பது போன்று கடலில் பல்வேறு உயிரினங்
கள் வாழ்ந்திருக்கின்றன.
இவ்விலங்குகள் இறந்த பின்பு ஆறுகளினால் அடித்து
வரப்பட்ட மணல், களிமண் இவற்றால் மூடப்பட்டு கடலின்
அடியில் அமிழ்ந்தன. கடலோரப் பகுதியிலும் அதன்
அருகிலும் தழைத்து வந்த மரங்களும் ஆற்று வெள்ளத்
தினால் அடித்துவரப்பட்டு இவ்விலங்குகளுடன் கட
லில் அமிழ்ந்தன. காலப்போக்கில் வெப்பம், அழுத்தம்
ஆகியவற்றால் பசுமரங்கள் கல்மரங்களாக உருமாறின.
இவ்வூரில் காணப்படும் கல்லுருவாகிய பெரிய அடி
மரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய
திருச்சிராப்பள்ளி பாறையினப் பகுதியில் அமைந்
திருக்கின்றது. இது "கோனிபெரஸ்' வகையைச் சார்ந்த
தாகக் கருதப்படுகிறது.
இம்மரம் 18 மீட்டர் நீளமுடையது. சாத்தனூ
ருக்கு அருகில் வரகூர், ஆனைப்பாடி, அலுந்த
ளிப்பு, சாரதாமங்கலம் ஆகிய ஊர்களின் அருகே நீரோ
டைப்பகுதிகளிலும் சில மீட்டர் நீளமுள்ள கல்மரங்கள்
காணப்படுகின்றன.
இந்திய புவியியல் துறையைச் சார்ந்த டாக்டர்
எம்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் 1940-ம் ஆண்டில் இக்கல்ம
ரங்கள் பற்றிய செய்தி முதலில் தெரிவிக்கப்பட்டது.
புவியியல் தோற்றத்தின் வரலாற்று கல்வெட்டாகக்
காணக்கிடைக்கும் இக்கல்மரங்கள் பற்றி "மழை மண் மரம்
மானுடம்' என்ற அமைப்பின் மூலம் சமத்துவ சமூகச்
சுற்றுச்சூழலுக்கான செயல்பாட்டாளரான கடலூர்
மாவட்டம், இராமநத்தம் கிராமத்தைச் சேர்ந்த இர
மேசு கருப்பையாவிடம் கேட்ட போது அவர் நம்மிடம்
பகிர்ந்து கொண்டவை:
""இந்தக் கல்மரங்களைப் போன்றே திண்டிவனத்
துக்கு அருகே திருவக்கரைப் பகுதியிலும் கல்ம
ரங்கள் காணப்படுகின்றன. இதுபோன்ற கல்மரங்கள் பல
இடங்களில் கிடைத்தாலும் தொடர்ச்சியாக 18 மீட்டர்
நீளம்கொண்ட அடிமரம் இது என்பது சிறப்பு. இதன் அரு
கில் முன்பு நடப்பட்ட ஒரு புளியமரத்தின் வேர் இக்
கல்மரத்தின் தொடர்ச்சிக்கு இடையூறாக அமைந்து கல்ம
ரத்தைத் துண்டாக்கி நிற்கிறது. இடையூறான இந்த
மரத்தை அங்கிருந்து அகற்ற வேண்டும்.
இக்கல்மரம் திறந்த வெளியில் இருப்பதால் வெயிலி
லும், மழையிலும் பாதிக்கப்பட்டு சிறுதுண்டுகளா
கச் சிதைவுறும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த
வரலாற்றுச் சின்னத்தைப் பேணிக் காக்க மேற்
கூரை ஒன்றை நிறுவுவது அவசியம். வரும் பார்வை
யாளர்கள் தொட்டுப் பார்ப்பதையும், அதன்
மீது ஏறி நடக்காமல் இருக்கவும் அதைக் கண்ணாடிப்
பெட்டிக்குள் வைத்துப் பாதுகாக்க வேண்டும்.
இதைப் புவியியல் அறிவும், அனுபவமும் கொண்டவர்க
ளைக் கொண்டு பராமரிக்க வேண்டும். இதுகு
றித்து விளக்கம் அளிக்க சரியான ஒருவர் இல்லாத
தால் வருகின்ற உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப்
பயணிகள், ஆய்வாளர்கள், மாணவர்களுக்குப் பல அரிய
செய்திகளை உணர்த்த முடியாமல் போகிறது.
பெரம்பலூர், அரியலூர் பகுதி புவியின் தோற்றத்
தைப் பற்றியும் பல்வேறு உயிரினங்கள் பற்றியும்
ஆய்வு மேற்கொள்ளத்தக்க வகையில் காலக் கருவூலமாக
இந்தக் கல்மரங்கள் இருக்கின்றன '' என்றார் இர
மேசு கருப்பையா.
-நீதிசெங்கோட்டையன

அகழ்வாராய்ச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக