வியாழன், 6 ஜூலை, 2017

இந்தி எதிர்ப்பு முதலில் சிறை ஈழத்தடிகளே செ.தெ.நாயகம் இல்லை சி.டி.நாயகம்

aathi tamil aathi1956@gmail.com

18/9/14
பெறுநர்: எனக்கு
1. அண்ணா பரிமளம் தொகுத்த 'அறிஞர்
அண்ணா வாழ்க்கை வரலாறு' பகுதி 16இல் "சாமியார்
ஆசாமியானார்" தலைப்பில் பின்வருமாறு: 1938இல்
இந்தியை கட்டாயப் பாடமாக்குவேன்
என்று அறிக்கை விட்ட
போது அதனை எதிர்த்து ஆச்சாரியாருக்கு முதல்
தந்தி அடித்தவர் ஈழத்து சிவானந்த அடிகளேயாவார்கள்.
இந்தி எதிர்ப்பு இயக்கத்தை அவர் தான் துவக்கினார்.
பிறகு தான் நாவலர் பாரதியார், பெரியார்
இராமசாமி அறிஞர் அண்ணா போன்றவர்கள்
கலந்து கொண்டார்கள். ஈழத்து சிவானந்த அடிகள்
இந்தி எதிர்ப்பின் முதல் சர்வாதிகாரியாக
சிறை புகுந்தார். (மன்றம் 1.5.1955).
தரவு 2. சி.டி.நாயகம் முதல் சர்வாதிகாரியாக
20.11.38 வரை இல்லை என்பதை பெரியாரின்
குடியரசு தெரிவிக்கிறது. தமிழ் நாட்டுப் பெண்கள்
மாநாடு 13.11.38 அன்று ஒற்றை வாடை கொட்டகையில்
நீலாம்பிகை அம்மையார் தலைமையில் நடைபெற்றது. அந்த
மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
அதில் 10வது தீர்மானம்:
இந்தியை எதிர்த்து சிறை சென்ற ஈழத்து சிவானந்த
அடிகள், அருணகிரி சுவாமிகள்,
சி.அண்ணா துரை எம்.ஏ. உள்ளிட்ட பெரியார்களையும்
தொண்டர்களையும் பாராட்டுகிறது.
12வது தீர்மானம்: தோழர்கள் சண்முகானந்த அடிகளும்,
சி.டி.நாயகமும்
சிறை செல்வதை இம்மாநாடு பாராட்டுகிறது.
(குடியரசு 20.11.1938)
மேற்கண்ட தீர்மானங்களின் படி ஈழத்தடிகள் சிறையில்
இருப்பதையும், சி.டி.நாயகம்
சிறைக்கு செல்லவிருப்பதையும் உறுதிப்படுத்துக
ிறது. இதன்படி பார்த்தால் முதல்
சர்வாதிகாரி ஈழத்தடிகளே ஆவார்கள்.

இந்தியெதிர்ப்பு ஈழத்தடிகள் 
search இந்தியை வென்ற ஈழத்தமிழர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக