வியாழன், 6 ஜூலை, 2017

1938 இந்தியெதிர்ப்பு ஈ.வே.ரா ஆதரவில்லை ஈழத்தடிகள்

aathi tamil aathi1956@gmail.com

17/9/14
பெறுநர்: எனக்கு
தந்தை பெரியாரும்- 1938 இந்தி எதிர்ப்பு போரும்
1965ஆம் ஆண்டு மாணவர் நடத்திய இந்தி எதிர்ப்புப்
போரை ஆதரிக்க மறுத்தவர் பெரியார். அந்தப்
போரை 'காலித்தனம்' என்று சித்தரித்ததோடு போராடிய
மாணவர்களை சுடும்படி வேண்டிக் கொண்டார். ஆனால்,
1938ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போரில் ஆறுமாதம்
சிறை சென்றார். 1965ம் ஆண்டு பெரியாரும் 1938ஆம்
ஆண்டு பெரியாரும் வேறு வேறு அல்ல என்பதை சொல்லும்
வகையில் அண்மையில் பழைய நூலொன்று கிடைத்துள்ளது.
நூலின் பெயர் "இந்தி எதிர்ப்பு: அன்றும் -இன்றும்".
அதன் ஆசிரியர் ஈழத்தடிகள்.
1938ஆம் ஆண்டு இராசாசி அரசின் பள்ளிகளில் கட்டாய
இந்தித் திணிப்பை எதிர்த்து காவியுடை தரித்த
சிவானந்த அடிகள், அருணகிரி அடிகள், சண்முகானந்த
அடிகள் எனும் மூன்று சாமியார்கள் போர்க்கோலம்
பூண்டனர்.
கையிலே கமண்டலம், உடையிலே காவி நிறம்,
கழுத்திலே உத்திராட்சம் எனும் தோற்றத்தோடு தமிழ்
மொழி காக்கும் போரில் ஈடுபட்ட மும்மூர்த்திகளில்
ஒருவர் தான் சிவானந்த அடிகள். இவர்
ஈழத்திலிருந்து வந்தவர் என்பதால் ஈழத்தடிகள் எனும்
பெயருமுண்டு. கரூரில் அறிவுதயக் கழகம்
நிறுவி தமிழ்த்தொண்டு புரிந்து வந்தார்.
இராசாசி பதவிக்கு வருமுன்னே இந்தி கொண்டுவரப்படும்
என்று அறிவித்த போது அதனைக்
கண்டித்து 12.2.1937இல் இராசாசிக்கு எதிராக
அறிக்கை விடுத்த முதல் ஆள் ஈழத்தடிகள்.
இராசாசி முதல்வரான பிறகு அவருக்கு முதல்
தந்தி அடித்து இந்தி எதிர்ப்புப்
போரை தொடங்கி வைத்தவரும் அவர் தான்.
இந்தி எதிர்ப்புப் போரில் முதல் சர்வாதிகாரியாக
சிறைக்களம் சென்றவராகிய ஈழத்தடிகள் தான்
மேற்படி நூலில் பெரியார் மீதும், அண்ணா மீதும் கடும்
குற்றச்சாட்டுகள் கூறியுள்ளார்.
இந்தி எதிர்ப்பு மாநாடுகள், கூட்டங்கள் நடத்தியும்
இராசாசி அரசு பணிய மறுத்த காரணத்தால் அடுத்த
கட்டமாக 1.6.1938 அன்று சட்டமன்றம், இராசாசி இல்லம்
முற்றுகை போன்ற
போராட்டங்களை நடத்துவதற்கு ஈழத்தடிகள்
முடிவு செய்தார். அதற்கான அறிக்கையொன்றை தயார்
செய்து பெரியாரிடம் கொண்டு சென்றுள்ளார்.
இது குறித்து அந்நூலில் பின்
வருமாறு கூறுகிறார்: " அங்கே பெரியார்
இராமசாமி அவர்களிடம் இந்த அறிக்கையைக்
காட்டி இதனை விடுதலை, குடியரசு ஆகிய இதழ்களில்
வெளியிட்டு உதவுமாறு கேட்டுக் கொண்டேன். இந்த
அறிக்கையை பார்த்து விட்டு, "இது காங்கிரசார்
கையாளும் சண்டித்தனம்: சத்தியாக்கிரகம் மறியல்
என்பதெல்லாம் வெறுங் கேலிக்கூத்து" என்று கூறி அந்த
அறிக்கையை வெளியிட மறுத்து விட்டார்."
அதன் பிறகு ஈழத்தடிகள் தனது ஈரோடு நண்பர் சண்முக
வேலாயுதம் என்பவரின் உதவி மூலம்
அறிக்கையை அச்சிட்டு, தமிழ்நாடெங்கும்
தமிழ்அன்பர்களுக்கு அனுப்பி வைத்தார். ஈழத்தடிகள்
வேண்டுகோளுக்கிணங்க, சென்னையில் உள்ள முதலமைச்சர்
இல்லம் முன்பு மறியல் செய்வதற்காக அதன்
அருகிலேயே சி.டி.நாயகம் என்பவர் தனது சொந்த
இடத்தில் மறியல் வீரர்களுக்கான பந்தல்
அமைத்து கொடுத்தார். மறியல் நாள்
நெருங்கிடவே விருது நகர், அருப்புக்கோட்டை
பகுதிகளிலிருந்து 120க்கும் மேற்பட்டோர்
வந்து குவிந்தனர். அப்போது மறியல்
நடந்து கொண்டிருந்த நாளில் மறியல்
பந்தலுக்கு பெரியார் வந்து பேசினார்.
அது குறித்து நூலில் பின்வருமாறு: "மறியல்
தொடங்கிய மூன்றாம் நாள் 60 பேர் வரை மறியலில்
ஈடுபட்டுச் சிறை சென்ற பின், பெரியார்
ஈ.வெ.இராமசாமி அவர்கள்
தாமாகவே இந்தி எதிர்ப்பு நிலையத்துக்கு வந்து,
மறியல் செய்வதற்காக வந்திருந்த தொண்டர்களை நோக்கி,
"இப்படி மறியல் செய்வது காங்கிரசார் மேற்கொள்ளும்
பயன் தராத முறையாகும்- சண்டித்தனமாகும். இதில்
நீங்கள் ஈடுபட வேண்டியதில்லை" என்ற பழைய
பல்லவியை மீண்டும் கூறியதோடு, வந்தவர்கள் தங்கள்
தங்கள் ஊருக்குப் போவதற்கு வழிச் செலவும் தருவதாகக்
கூறினார்.
அந்தச் சமயத்தில், நானும் மற்றவர்களும் அவரை அனுகி,
"ஐயா, இதில் நீங்கள் தலையிடாமல் இருப்பது, தமிழ்
மொழியைக் காப்பாற்றச் செய்யும்
ஒரு பேருதவியாகும்" என்று கூறவே, அவரும்
மறுமொழி ஒன்றும் கூறாமல், திரு.சி.டி. நாயகம்
அவர்கள் இல்லத்திற்குச் சென்று விட்டார்."
அங்கு பெரியாரிடம் உண்மை நிலையை சி.டி.நாயகம்
விளக்கிக் கூறிய பிறகே இந்தி எதிர்ப்பு பணியில்
பெரியார் ஈடுபடத் தொடங்கியதாக ஈழத்தடிகள்
குறிப்பிட்டு விட்டு, மேலும் கூறுகிறார்:
"இந்த நிலையில் இந்தி எதிர்ப்பைத் தோற்றுவித்த
நானும் மற்ற இரு துறவிகளான அருணகிரி அடிகளும்,
சண்முகானந்த அடிகளும் சிறை சென்று விடவே,
படிப்படியாக இந்தி எதிர்ப்பு அறப்போரைப் பெரியார்
இராமசாமி அவர்களே ஏற்று நடத்தும்
நிலை உருவாகியது, எல்லாம் அவருடைய
விருப்பப்படி நடைபெற்று வந்தது. இதன் விளைவு,
பிறகு, இந்தி எதிர்ப்புக்குப் பெரியார்
இராமசாமி அவர்கள் தான் முதல்வர் என்ற
நிலை ஏற்பட்டுவிட்டது. இது ஒரு பித்தலாட்டமும்
கொடுமையுமாகும்.
வரலாற்றுண்மை வாய்ந்ததும், தந்நலமற்றதுமான
இந்தி எதிர்ப்பு நிகழ்ச்சி, பெரியார்
இராமசாமி அவர்களின் தலையீட்டால்- கறையான்
புற்றெடுக்கப் பாம்புகுடி கொண்ட கதையாகி விட்டது.
செயலுக்கு ஒருவனும், அந்தச் செயலால் புகழ் பெற
இன்னொருவனும் என்ற நிலை ஏற்படுவதென்றால்,
அது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உண்டாக்கப்படும்
ஒரு மறைக்க முடியாத களங்கமாகும்"
என்று வேதனையோடு குறிப்பிடுகிறார்.
இராசாசி இந்தித் திணிப்பை கைவிடாத நிலையில்
பதவி விலகிய போது, பெரியாரும்
இந்தி எதிர்ப்பை தற்காலிகமாக
நிறுத்தி விடுகிறார். அது குறித்து பெரியார்
தந்த பதிலை நூலாசிரியர் குறிப்பிடுகிறார்:
"நடைபெற்ற இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி,
காங்கிரசு மந்திரிகளுக்குத் தொல்லை கொடுக்க
வேண்டுமென்பதற்காக நான் அது போல் பயன் படுத்திக்
கொண்டேனே யொழிய,
உண்மையிலேயே எனக்கு இந்தி கட்டாயமாக்கப் படுவதைப்
பற்றியோ, அதனால் தமிழ் அழிந்து விடும்
என்பது பற்றியோ கவலையில்லை" என்று கூறினார்.
பெரியாருக்கு இந்தி எதிர்ப்பு கிளர்ச்சியை நிறுத்த
உரிமையில்லை என்றும், ஆளுநர் மாளிகை முற்றுகைப்
போர் தொடங்கப்படும் என்று ஈழத்தடிகள் 4.11.39ல்
அறிக்கை விடுத்த பிறகே கட்டாய
இந்தி ஆணை நீக்கப்பட்டது. இதுவே உண்மை வரலாறாகும

search இந்தியை வென்ற ஈழத்தமிழர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக