வியாழன், 6 ஜூலை, 2017

அரேபிய தமிழ் கலப்பு நபி காலம் முன்பே மாப்பிள்ளை மகா பிள்ளை வெவ்வேறு மதம்

aathi tamil aathi1956@gmail.com

23/9/14
பெறுநர்: எனக்கு
யார் இந்த மாப்பிள்ளை?
*********************************
அரேபியாவிலிருந்து பல
பொருட்களை இங்கு கொண்டு வந்து விற்கவும்.
இங்கிருந்து சுக்கு, மிளகு போன்ற பல
பொருட்களை வாங்கிச் செல்லவும் செய்தனர். பண்ட
மாற்று முறையில் இவ்வியாபாரம் நடந்திருந்ததாக
கூறப்படுகிறது. அராபியர்களுடைய கப்பல்கள்
வருவதை எதிர்நோக்கியும், அவர்கள்
இங்கு வந்து வியாபாரம் செய்வதை விரும்பியும்
இங்குள்ள ஆட்சித் தலைவர்கள் பலதரப்பட்ட உதவிகள்
செய்து அராபியர்களை துறைமுக நகரங்களில்
தங்குமிடமும் அளித்தனர்.
ஆட்சியாளர்களுடைய
பேராதரவோடு மேற்கு கடலோர துறைமுகங்களில்
தங்கி வந்த அராபியர்களில் சிலர்
உள்நாட்டு பெண்களை திருமணம்
செய்து இங்கு தங்கியிருக்கும் நாட்களில்
அவர்களுடன் வாழ்ந்து வந்தனர். இப்படிப்பட்ட மண
வாழ்க்கையில் பிறந்த குழந்தைகளை ‘கலாசிகள்’
என்று அழைத்தனர். பல நூற்றாண்டுகளுக்குப் பின்
கலாசிகளின் எண்ணிக்கைப் பெருகியது. இந்த
கலாசிகளை இங்குள்ள மக்கள் ‘மகா பிள்ளை’ (பெரிய
இடத்து பிள்ளை என்ற பொருளில் இருக்கக்கூடும்)
என்று அழைத்தனர். நாளடைவில் மகா பிள்ளை என்ற
சொல் மருவி ‘மாப்பிள்ளை’ என்றாகிவிட்டது.
இதுபோன்று கிரேக்கர் ரோமானியர் முதலிய
கிறிஸ்தவர்களுக்கு நம்நாட்டுப் பெண்களில் பிறந்த
குழந்தைகளையும் ‘மகா பிள்ளை’ என்றே அழைத்தனர்.
கோட்டயம் சங்ஙளாச்சேரி போன்ற பகுதிகளில்
வாழும் கிறிஸ்தவர்கள் ‘மாப்பிள்ளை’ என்றுதான்
இப்பவும் அழைக்கப்படுகின்றனர். மலபார்
பகுதியில் உள்ள முஸ்லிம்கள்
மாப்பிள்ளை என்று அறியப்படுகின்றனர்.
இருவரையும் அடையாளம் கண்டு கொள்வதற்காக
முஸ்லிம்களை, ஜோனை மாப்பிள்ளை என்றும்,
கிறிஸ்தவர்களை நஜ்ரானி மாப்பிளை என்றும்
அழைக்கின்றனர்.
இந்த அராபிய வர்த்தகர்களுக்கு பிறந்த
குழந்தைகளோ அவர்களுடைய தாய்
தந்தையரோ யாருமே முஸ்லிம்கள் அல்ல. இந்த
கலப்பு சந்ததியினர் பிறந்ததெல்லாம் நபிகள்
நாயகம்(ஸல்) காலத்திற்கு முன்னரேயாகும்.
அரேபியர் இனக்கலப்பு மூர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக